வெல்வேன் உனை


இரண்டிற்குத் திட்டமிட்டால்
இன்னும் இரண்டு சேர்கிறது


திட்டமிட்டு திட்டமிட்டு
திக்கெட்டும் சுற்றுகிறேன்
பெற்றோருக்கும்  பெற்றவருக்கும்
எனக்கும் என்னவருக்கும்
வீட்டிற்கும் உறவு வட்டத்திற்கும்
இற்கும் எனப்பல இணைய
இது முதன்மை என்பது
எப்படியோ காலமே

இருந்தும் வெல்வேன் உனை!

(பெற்றோருக்கு இப்பொழுது ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும் நயத்திற்காகச் சேர்க்கப்பட்டது)




புழைக்கால் ஆம்பல் என்ற என் முந்தையப் பதிவைப் பார்த்தீர்களா நட்பே? அடுத்தடுத்துப் பதிவிட்டதால் இந்த இணைப்பு.

13 கருத்துகள்:

  1. ***பெற்றோருக்கு இப்பொழுது ஒன்றும் ///கிழிக்கவில்லை/// என்றாலும் நயத்திற்காகச் சேர்க்கப்பட்டது.***

    என்ன கிரேஸ், நான் பயன்படுத்துற வார்த்தையெல்லாம் நீங்களுமா?! கலந்த அந்த நயத்தை இவ்விடத்தில் எடுத்துட்டீங்களே! :( [ மனதுக்குள்ளே என் மனசாட்சி சொல்லுது..ஏன் வருண் இப்படி பண்ணுற? "நல்ல கவிதை"னு பாஸிடிவா சொல்லீட்டு போகலாமே?]

    I hardly have the "killing spirit" or "winning spirit". I usually win by "giving up"! Yeah, seriously! :) Anyway Happy New year to you and your family!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ நயத்தை எடுத்துவிட்டேனா, வருண்? ஒன்றும் செய்யவில்லை என்று எழுதியிருக்கலாமோ?
      Positive mattum illai, negative also solrathuthane natpu? :-)
      Epdiyo win panringalla, adhudhan mukyam :-))
      Thanks Varun. Wish a Happy and Prosperous new year to you and your family.

      நீக்கு
  2. இன்னும் ஒன்று சேர்ந்திருக்கிறது டியர்.http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html போஸ்ட் பாருங்க ப்ளீஸ்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! தொடர்பதிவா டியர் :-) நீங்க சொன்னா செஞ்சுட வேண்டியதுதான், மகிழ்ச்சியுடன். நன்றி டியர்

      நீக்கு
  3. சகோ...

    எனது இன்றைய நிலைக்கு மிகச் சரியாக பொருந்துகிறது உங்கள் கவிதை !

    ஹூம்... :-)

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  4. அருமை அம்மா.. தேடல் ஒரு வேள்வியை உருவாக்கும்..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்... உங்க நம்பிக்கைக்கு ஒரு ஜே.. வென்ற பிறகு ரகசியத்தை சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  6. இப்படிச் சிறுக எழுதுவது அழகாய் இருக்கிறது.

    எம்மரபிற்குள் அடக்கவெனத் தேடிக் கண்டடைந்து வியக்கிறது மனம்.

    தொடருங்கள்.
    தொடர்கிறேன்.
    த ம

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...