உணரா மனிதம்


கருங்கல் சுமந்தால் கவள உணவு
கரும்பலகைப்  பாடம் கனவே எமக்குகழிவு பொறுக்கிக் கடக்கும் பொழுதில்
ஒலிக்கும் மணியோசை உள்ளம் உருக்கிடும்

கல்வி வறுமை ஒழிப்பதேது  எங்களைக்
கொல்லும் பசிப்பிணி கொத்தடிமை ஆக்கும்

கணக்கற்ற  பிஞ்சுகள் ஏங்கிக் கருகும் 
உணர்ந்தும் உணரா மனிதம் வாழ்க!


41 கருத்துகள்:

 1. நல்ல ஆக்கம் சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! உடனே வந்து ஊக்குவிக்கும் கருத்தும் வாக்கும், நன்றி சகோ!

   நீக்கு
 2. சிறப்பான வரிகள்! சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அதே தான் அண்ணா..நான் சொல்லியிருப்பது வஞ்சப் புகழ்ச்சி
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 4. குழந்தைகளின் கல்வியின் அவசியம் .நல்லப் படைப்பு
  இதையும் படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com/2016/01/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. வேதனைப்படுத்தும் உண்மை! இதை ஒழிக்க முடியவில்லையே! :(
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 6. மொபைல் வழி வரும்போது சில தளங்களில் தமிழ்மணம் வாக்களிக்க இயலாது. நாளைக் காலை கணினி வழி வந்து வாக்களிப்பேன். :))

  பதிலளிநீக்கு
 7. இனிமையும், எளிமையும்,
  மரபிற் புதுமையும அருமை.

  தொடர்கிறேன்.

  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறைந்த நன்றி அண்ணா. ஊக்கத்திற்கும் கற்பித்தலுக்கும் பிழை இருப்பின் திருத்துவதற்கும் :)

   நீக்கு
 8. வணக்கம்

  சகோதரி

  எல்லாம் வயிற்று பசிக்குத்தான் வரிகள் மனதை நெகிழவைத்தது. த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. நல்ல கருத்து.
  உலகம் விழிக்கட்டும்.
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 10. மனிதம் என்பதன் பொருள் மறந்து பலகாலமாகிவிட்டதே தோழி.. வலியின் அவலம் உணர்த்தும் வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தோழி, மறந்து விட்டோம் அல்லது அதன் பொருள் சிதைத்துவிட்டோம்...
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 11. வேதனை தரும் வரிகள்
  ஆயினும் உண்மை வரிகள்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 12. உங்கள் கவிதையப் படித்தவுடன், ஐ.நா. மன்றத்தின் வழியே உலகநாடுகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. ஏனெனில் குழந்தைகள் நலன் என்ற பெயரில் செலவழிக்கப்படும் தொகை சரியான முறையில் உரியவரை சென்றடைவதில்லை. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் ஐயா.. ஐ.நா. மன்றம் கவனித்தால் நல்லது. ஆனால் ஓவ்வொரு அரசும் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

   நீக்கு
 13. பதில்கள்
  1. விரைவில்...உடனே தீர வேண்டும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி

   நீக்கு
 14. வேதனையான வரிகள். எப்போது மாறும் இந்நிலை?
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனைதான்... உடனே மாற வேண்டும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

   நீக்கு
 15. அருமையான பதிவு..உண்மை தான் நமது அரசு கொடுக்கும் இலவசத்தில் முக்கியமாக இருக்க வேண்டியவை கல்வி..கிடைக்கிறது ஆனால் தரமானதா என்று பார்த்தால் இல்லை..எவன் ஒருவன் கல்வி எனும் வாசலில் நுழைகிறானோ அவன் வறுமை எனும் பிடியில் இருந்து தப்பிக்கிறான்..

  தங்களின் பதிவு நான் இப்பொழுது மேற்கொள்ள இருக்கும் சமூகப் பிரச்சனை அல்லது மாற்ற நினைக்கும் செயல் மற்றும் அதற்கான தீர்வு ஆய்வுக்கு உதவும்..தாங்களும் இந்த சமூகத்தில் என்ன மாற்ற விரும்புகீரீர் என்பதை பகிருங்கள் சகோதரி..

  நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எவன் ஒருவன் கல்வி எனும் வாசலில் நுழைகிறானோ அவன் வறுமை எனும் பிடியில் இருந்து தப்பிக்கிறான்..// அருமை வைசாலி. உங்கள் ஆய்விற்கு உதவுமேயானால் அதைவிட வேறென்ன மகிழ்வு இருக்கமுடியும்? நன்றியும் வாழ்த்துக்களும் வைசாலி. மாற்ற வேண்டியவை சமூகத்தில் நிறைய இருக்கிறது - பெண்ணடிமை, சாதி, மத வெறி, குழந்தைத் தொழிலாளி, ஊழல்.... எதைச் சொல்வதம்மா?

   நீக்கு
 16. குழந்தை உழைப்பு, இன்றைய சமூகத்தின் கூடப்பிறந்த நோய்.
  “வெள்ளரி
  பிஞ்சுகள்
  விற்கின்றன” என்றொரு சிறு கவிதை நெடுநாளாய் நெஞ்சை அறுக்கின்றது. உன்கவிதையின் உள்ளடக்கம் அப்படியானது கிரேஸ். இதற்குத் தீர்வுகாணாத எந்தச் சமூகமும் முன்னேற முடியாது. (நாங்கள் அறிவொளி பரப்பிய காலத்தில், இதுபற்றிச் சில பாடல்களைப் பாடுவதுண்டு. விரித்தால் பெருகும்)

  பதிலளிநீக்கு
 17. மனம் வேதனை அடையச் செய்யும் அருமையான வரிகள்...சகோ..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...