அமெரிக்கன் சிவில் வார் (1861-1865) கறுப்பின அடிமைத்தனத்தை ஒழித்தாலும், கறுப்பின மக்களுக்குச் சமக்குடியுரிமைகள் மறுக்கப்பட்டே வந்தன.தீண்டாமை தலைவிரித்தாடியது. உணவகங்களில் தனியாக ஒதுக்கப்பட்டனர், அவர்கள் கேட்ட உணவுகள் கூடகொடுக்கப்படமாட்டாது. பொதுவிடங்களில் எங்கும் ஒதுக்கப்பட்டனர்.
பேருந்துகளிலும் தனியாக ஒதுக்கப்பட்டனர். அதிலும் வெள்ளையருக்கு அமர இடமில்லை என்றால் கறுப்பின மக்கள் எழுந்து இடம்தர வேண்டும். அப்படி எழுந்து இடமளிக்க மறுத்த ரோசா பார்க்ஸ் என்ற பெண்மணி 1955இல் கைது செய்யப்பட்டார். இது நடந்தது அலபாமா மாகாணத்தின் மோன்ட்கோமேரி நகரத்தில். இதை எதிர்த்து கறுப்பின மக்கள் பேருந்துகளைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். எங்கும் நடந்தே சென்றனர். இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். ஒரு நாள் போராட்டமாகத் துவங்கியது பல மாதங்கள் நீடித்தது. பேருந்து நிறுவனம் நஷ்டத்தில் ஓடியதால் இறுதியில் பேருந்துகளில் இனப்பிரிவினை நீக்கப்பட்டது.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருக்கும் படம் |
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருக்கும் படம் |
மார்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு உண்டு (I have a dream) என்ற உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் இணைப்பு https://www.youtube.com/watch?v=3vDWWy4CMhE
கிங் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அவரின் பிறந்த தினத்தை (ஜனவரி 15) மார்டின் லூதர் கிங் தினமாகக் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது. அதுவே பின்னர் ஒவ்வோராண்டும் ஜனவரி மூன்றாம் திங்கள் அரசு விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது.
திங்கள் கிழமை விடுமுறை கொடுப்பதால் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் வார இறுதி கிடைக்கும் என்பதால் பல விடுமுறைகள் இப்படித் திங்கள் அன்று கொடுக்கப்படுகின்றன.
மார்டின் லூதர் கிங் நினைவிடம், வாஷிங்டன் டி.சி., படம் இணையத்திலிருந்து |
நினைவிடத்தில் சுற்றிலும் இப்படி கிங் அவர்களின் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன |
விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இப்போதைய நேரம் ஒத்துழைக்கவில்லை என்பதால் சிறிய அறிமுகப் பதிவாக இடுகிறேன்.
உபயோகமான இணைப்பொன்று,
http://kingencyclopedia.stanford.edu/encyclopedia/chronology_contents.html
ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உத்தமர்களுள் மார்ட்டின் லூதர் கிங் அவர்களும் ஒருவர்..
பதிலளிநீக்குமாமனிதருக்கு அஞ்சலி..
உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நீக்குஅறிமுகமே அருமையான பதிவாக இருந்தது. தொடர் இணைப்புகள் சிறப்பு. இப்படியான புத்தறிவுப் பதிவுகள் தொடரட்டும்மா. நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குஒடுக்கப்பட்ட மக்களின் விடி வெள்ளி!
பதிலளிநீக்குகட்டுரை அருமைப்பா!
ஆமாம்!
நீக்குமிக்க நன்றி நிஷா
நல்ல நினைவுகூர்தல். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமாமனிதர். இது போன்ற நல்லவர்களின் முடிவுகள் இயற்கை மரணாக இல்லாதிருப்பது ஒரு........ என்ன சொல்ல, ஒரு கொடுமை.
பதிலளிநீக்குதம +1
ஆமாம், வேதனைதான்! நன்றி ஸ்ரீராம்
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குமார்ட்டின் லூதர் கிங்கின் நினைவினைப் போற்றுவோம்
சிறப்பான மனிதர்... இணைப்புகளுக்கும் நன்றி...
பதிலளிநீக்குமாபெரும் மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்ததுண்டு. இவரது வாசகங்களும். பாருங்கள் வரலாற்றில் இப்படி மாபெரும் மனிதர்கள் எல்லோரும் கொல்லப்படுதல் என்பதுதான் வரலாற்றின் விதியோ என்று எண்ண வைக்கிறது பல சமயங்களில்.
பதிலளிநீக்குஆமாம் அண்ணா, ஸ்ரீராம் சகோவும் இதையே சொல்லியிருக்கிறார்.
நீக்குநன்றி அண்ணா
சிறந்த மனிதர்! நினைவு கூற வைத்த பதிவிற்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅருமையான பதிவு..நானும் இந்த மாமனிதரை பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்..
பதிலளிநீக்குநன்றி வாழ்த்துக்கள்..
நன்றி வைசாலி
நீக்கு