வெண்டைக்காய் சத்து மிகுந்ததாம்
வெண் முத்துடைப் பெட்டியாம்
பச்சை நிறமாம்
பெண்விரல் ஒத்ததாம்
கணக்கு நன்றாய் வருமாம்
காண்பீர் நண்பரே
கைக்குட்டை வந்ததே எனக்கு
என் ஐந்து வயது மகனுடன் செய்தது..அவன் கால்பங்கு செய்துவிட்டு ஓடிவிட்டான்..மீதியை நான் முடித்தேன். பாப்ரிக் பெயிண்ட் பயன்படுத்தினேன். 24 மணிநேரம் காயவிட்டபின் பின்புறம் அயர்ன் செய்ய வேண்டும்.
பள்ளிக்குக் கொண்டுசெல்கிறானாம், ஓரம் அடிக்கவேண்டும்.
இன்னும் சில காகிதத்தில்.....
வெங்காய அச்சுப்படம் |
வெங்காயம் மற்றும் விரல் அச்சுப்படம் |
குட்டிப் பையன் இந்த வயசுலயே நல்ல சுறுசுறுப்பாக உள்ளான். மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஎல்லாருக்கும் கணக்கு வரும். உங்களுக்கு கைக்குட்டை வந்துருக்கு. நல்ல கவிதை...
சுறுசுறுப்பானு தெரியாது..ஆனால் நான் விடமாடேன்ல..தொலைக்காட்சி குடுக்கமாட்டேனு சொல்றது பத்தாதுன்னு மேல இப்டி ஏதாவது செய்யச் சொல்லி ஒரு பாடு படுத்திடுவேன்..
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
நல்ல முயற்சி.... சின்ன பிள்ளைகள் எப்படி டிசைன் போட்டாலும் அது அழகாத்தான் இருக்கும்....
இப்படி விளம்பரம் செய்து... சந்தைப்படுத்தலாம் என்ற நம்பிக்கையோ கீய்......கீய்.....கீய்..... சகோதரி....
நல்ல சிந்தனை மகனுக்கும் தங்களுக்கும் எனது பாரட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குஆமாம், சின்னப் பிள்ளைகள் செய்வதே ஒரு தனி அழகுதான். ஹாஹா சந்தையெல்லாம் ஒன்றும் இல்லை ரூபன்.
உங்கள் பாராட்டிற்கு நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
நீக்குஆகா... அழகு... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குபள்ளிக்கூட "Project" ஆரம்பித்து விட்டதா...?
மிக்க நன்றி திரு.தனபாலன். பள்ளிக்கூட project ஆரம்பித்துவிட்டது...ஆனால் இது பள்ளிக்கூடத்திற்கு இல்லை..இது எங்கள் வீட்டுப் project :)
நீக்குபாலர் நிலையத்தில் இவைகள் செய்வோம்.
பதிலளிநீக்குசெய்தே ஆக வேண்டும் நேரப் பிரகாரம்.
எங்கள் பேரன் 1.9 வயது செய்கிறாரே.!..
நானும் இப்படி ஓரு நாளைக்கு ஒன்று என்று திட்டமிட்டு
வேலைக்குப் போய் பிள்ளைகளோடு செய்வேன்.
உருளைக் கிழங்கிலும் உருவை வெட்டிக் கொடுக்கலாம்.
வாழ்த்து தங்களிருவருக்கும்.
வேதா. இலங்காதிலகம்.
அப்படியா? உங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்! நான் என் பசங்களுடன் சிறு வயதில் இருந்து இப்படிச் செய்வது வழக்கம்..
நீக்குஉருளைக்கிழங்கிலும் செய்திருக்கிறோம். உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
ஆக்கபூர்வமான அருமையான திறமை..
பதிலளிநீக்குகுழந்தைக்குப் பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
நீக்குஇறுதியில் உள்ள கார் போன்ற படத்தின் கற்பனை ,
பதிலளிநீக்குஉருவாக்கம் அனைத்தும் அருமை தோழி.
உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.
உங்கள் கருத்துரைக்கும் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் உளமார்ந்த நன்றி ஸ்ரவாணி.
நீக்குஇரண்டு பேரின் கைத்திறனும் மிக அழகாய் இருக்கின்றன!! வாழ்த்துக்கள்!!
நீக்குஆஹா எங்க கிரேஸ் செல்லம் பையன் அம்மாவை மிஞ்சிடுவான்போல !
பதிலளிநீக்குமுதலில் செல்லம் என்று சொன்ன உங்கள் அன்பு நெகிழ்ந்து மகிழ வைக்கிறது. உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி!
நீக்குகைவண்ணம் அருமை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்!
நீக்குகைக்குட்டை அழகாக இருக்கிறது கிரேஸ்!! குட்டிக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி தியானா!
நீக்குஆலு குட்டியின் கைவண்ணம் சூப்பர் அதை போல அதை கவி வடிவில் விளக்கிய உங்க திறனும் சூப்பர்... வண்ண மயமாகவும் அழகாகவும் உள்ளது
பதிலளிநீக்குஉளமார்ந்த நன்றி ஸ்ரீனி..
நீக்குஅழகான கைவண்ணம். கைக்குட்டையைப் பத்திரப்படுத்த இயலாவிடினும் இந்தப் படங்களைப் பத்திரப்படுத்தி வையுங்கள். அவர்கள் வளர்ந்த பிறகு அவற்றைக் காட்டும்போது அவர்கள் அதிசயித்துபோவதோடு நமக்கும் அவர்களுடைய குழந்தைப் பருவ நினைவுகள் தாலாட்டும். குழந்தைக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குஆமாம் கீதமஞ்சரி...அப்படித்தான் பல படங்கள் சேர்த்து வைத்திருக்கிறேன். உங்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. மறுமொழியிட தாமதமாகிப்போனது.
நீக்குசிறப்பாய் இருக்கிறது. முன்பு மகளுக்காக செய்தது நினைவுக்கு வந்தது!
பதிலளிநீக்குநன்றி வெங்கட். இனிய நினைவுகள் இல்லையா?
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்
வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்
இனிய தகவலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி திரு.தனபாலன்.
நீக்கு