அக்பருடைய அவைக்கு ஒரு நாள் ஒரு பண்டிதன் வந்தான். அவன் பல மொழிகளில் புலமை பெற்றவன் என்று சொல்லிக் கொண்டான். அன்று அவன் அக்பருடன் பெர்சியன் மொழியில் பேசினான். அங்கு இருந்த அமைச்சர்களை அவரவர் தாய் மொழியில் கேள்வி கேட்கச் சொல்லி பதிலுரைத்தான். அவன் படித்தவன் மட்டும் இல்லாமல் மிகுந்த பெருமை உடையவனாய் இருந்தான். வடமொழி, தெலுங்கு, அரபிக், பெங்காலி மற்றும் இன்னும் சில மொழிகளிலும் சரளமாய் உரையாடினான்.
அவன் திறமையைக் கண்டு அவையினர் வியந்தனர். அக்பர் அவனைப் பாராட்டிப் பல பரிசுகளும் கொடுத்தார்.
அந்தப் பண்டிதன் அவையை விட்டுச் செல்லும்பொழுது தன் தாய்மொழி எது என்று கண்டுபிடிக்குமாறு ஒரு சவால் விட்டான். அக்பரிடம் அவன், "மரியாதைக்குரிய மன்னா! நாளை காலைக்குள் ஒருவரும் என் தாய்மொழியைக் கண்டுபிடிக்காவிட்டால் இந்த நாட்டில் உள்ள அனைவரைவிடவும் நானே புத்திசாலி என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சவால் உரைத்தான். அக்பரும் அதனை ஏற்றுக் கொண்டு அவனை விருந்தாளியாகத் தங்க வைத்தார். பண்டிதன் சென்றவுடன் அவையோரைப் பார்த்தார். அமைச்சர்கள் தெரியாது என்று தலையாட்டினர். அக்பர் பீர்பாலைப் பார்த்தார். "பீர்பால், உங்களைத் தான் நம்புகிறேன், நம் நாட்டின் பெருமையை நீங்கள் காக்க வேண்டும்" என்று சொன்னார்.
அன்று இரவு பண்டிதனுடைய அறைக்குள் யாரும் அறியாமல் நுழைந்த பீர்பால், உறங்கிக் கொண்டிருந்த பண்டிதனுடைய காதில் வைக்கோலால் கிச்சுகிச்சு மூட்டினார். திரும்பி படுத்துக் கொண்ட பண்டிதனுடைய காதில் விடாமல் தன் தந்திரத்தைச் செய்து கொண்டிருந்தார் பீர்பால். எரிச்சலுற்ற பண்டிதன், "யாரது?", என்று தன் தாய்மொழியில் கத்தினான். தன் வேலை முடிந்தது என்று பீர்பாலும் அமைதியாக வெளியேறினார்.
மறுநாள் அவைக்கு வந்த பண்டிதனை வரவேற்று அமரவைத்தபின் பீர்பால் அவனுடன் பல மொழிகளில் உரையாடினார். பின்னர் அந்தப் பண்டிதனுடைய தாய்மொழியைச் சொன்னார். சரியாகச் சொன்னதாக ஒத்துக்கொண்ட அந்தப் பண்டிதன் ஆச்சரியத்தில் உறைந்து போனான். தான் மட்டும் அல்ல, பலருக்கு பல மொழிப் புலமை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டான். திறமையினால் தான் அகந்தை கொண்டதை எண்ணி வருந்தினான். அக்பர் தனக்கு அளித்தப் பரிசுகள் அனைத்தையும் பீர்பாலுக்கு அளித்து வணங்கினான்.
பெருமிதம் கொண்ட அக்பர் பீர்பாலிடம், "எப்படி அவருடைய தாய்மொழியைச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?, என்று கேட்டார். முந்தின இரவு தான் செய்த தந்திரத்தை பகிர்ந்து கொண்டார் பீர்பால். மனிதன் ஆபத்து நேரத்தில் தாய்மொழியில்தான் பேசுவான் என்று சொன்னார்.
அனைவரும் பீர்பாலின் அறிவுக்கூர்மையைப் பாராட்டினர்.
எத்தனை மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் தனிச்சையாக வருவது தாய்மொழிதானே?

மிகவும் உண்மை. என்னதான் உறக்கத்தில் இருந்தாலும் விழிப்போடு இருக்கிறது தாய்மொழியறிவு. மனம் கவர்ந்த பதிவுக்குப் பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குஆமாம் தாய்மொழிதான் முதன்மை, நன்றி கீதமஞ்சரி!
நீக்குசிறு வயதில் இருந்தே பீர்பால், தெனாலிராமன் கதைகள் என்றால் விரும்பி படிப்பேன் :). தாய் மொழியின் பெருமையை உணர்த்தும் பீர்பாலின் ஒரு அழகான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி கிரேஸ் :).
பதிலளிநீக்குஆமாம் அக்பர் பீர்பால், தெனாலிராமன் கதைகள் அருமை..நன்றி ஸ்ரீனி!
நீக்கு/// மனிதன் ஆபத்து நேரத்தில் தாய்மொழியில்தான் பேசுவான் ///
பதிலளிநீக்குகண்டிப்பாக...
நல்லதொரு சிறுகதைக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
நீக்குதாய்மொழியின் சிறப்பை மிக அழகான கதை சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் அவர்களே!
நீக்குஅருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் அவர்களே!
நீக்குஅருமை கதை கிரேஸ்..இன்னைக்கு தீஷுவிற்கு இந்தக் கதை தான் சொல்லப் போகிறேன்..
பதிலளிநீக்குநன்றி தியானா...தீக்ஷுவிற்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நீக்குதாய் மொழியை யாரும் எளிதில் மறக்க முடியாது
பதிலளிநீக்குஆமாம், உயிரிலும் உணர்விலும் கலந்தது அல்லவா? வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே.
நீக்கு''..எத்தனை மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் தனிச்சையாக வருவது தாய்மொழிதானே?...''
பதிலளிநீக்குArumai sis,,,
Vetha.Elangathilakam.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோவைக்கவி அவர்களே.
நீக்கு