மழை பொழியும் நேரம்

மழை பொழியும் நேரம்
இயற்கை எத்தனைஅழகு

மரங்களின் பச்சை நிறம்
மற்ற நேரத்தில் இல்லாப் புதுவிதம்

மலர்களின் பல வண்ணங்கள்
சாந்தமாய் மனதைப் பறிக்கும்

புல்வெளியின் பச்சை வண்ணம்
புலனெல்லாம் இன்புறச் செய்யும்

மரக்கிளைகளின் கருப்பும் பழுப்பும்
கண்ணைக் கவர்ந்து இழுக்கும்

சின்ன சின்னப் பறவைகளோ
சிந்தை மயங்க வைக்கும்

உயரே சேர்ந்த அழுக்கை
துலக்கி விட்டேப் பொழியும் மழை

அனைத்தையும் அழகாக்கி
மனமெல்லாம் மயக்குகிறதே!

14 கருத்துகள்:

  1. உயரே சேர்ந்த அழுக்கை
    துலக்கி விட்டேப் பொழியும் மழை//
    மாசு நீக்கும் மழை உண்மைதான்

    பதிலளிநீக்கு
  2. @கவியாழி கண்ணதாசன்: வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அழகான இந்த கவிதை உருவாக காரணமாகவும் இருக்கிறதே :)

    உயரே சேர்ந்த அழுக்கை
    துலக்கி விட்டேப் பொழியும் மழை//

    உண்மை உண்மை.. என்னடா கார் இவ்வளவு அழுக்காக இருக்கேனு நினைக்கும் பொழுது எல்லாம் மழை வந்து சுத்தப்படுத்தி விட்டு போயிருது :)

    பதிலளிநீக்கு
  4. வரிகளும் மயக்குகிறது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. //உயரே சேர்ந்த அழுக்கை
    துலக்கி விட்டேப் பொழியும் மழை

    அனைத்தையும் அழகாக்கி
    மனமெல்லாம் மயக்குகிறதே!//

    ம‌ன‌சின் அழுக்கையும் துல‌க்க‌ வ‌ல்ல‌து ம‌ழை.. அருமையான‌ கவிதை கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  6. @ஸ்ரீனி: நன்றி.
    //என்னடா கார் இவ்வளவு அழுக்காக இருக்கேனு நினைக்கும் பொழுது எல்லாம் மழை வந்து சுத்தப்படுத்தி விட்டு போயிருது//-எங்க மழை இல்லையோ அங்க உங்களையும் உங்க காரையும் அனுப்ப வேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
  7. @திண்டுக்கல் தனபாலன்: வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மனதிற்குள் தூறல் போடுகிறது வரிகள்...

    பதிலளிநீக்கு
  9. @மகேந்திரன்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன் அவர்களே

    பதிலளிநீக்கு
  10. மழைக்குப் பின்னரான வானம் தெளிவு! மழைக்குப் பின்னரான பூமி அழகு! மழை மண்ணை நனைக்க, மழைக்கவிதை மனத்தை நனைக்கும் வசீகரம்! பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  11. @கீதமஞ்சரி: //மழைக்குப் பின்னரான வானம் தெளிவு! மழைக்குப் பின்னரான பூமி அழகு!// அழகாகச் சொன்னீர்கள்.
    மிக்க நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  12. @SRH: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...