ஐங்குறுநூறு 10, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வள நனி சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன்
தண் துறை ஊரன் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமே"
"வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வள நனி சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன்
தண் துறை ஊரன் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமே"
எளிய உரை: வாழ்க ஆதன், வாழ்க அவினி. மழை பொழியட்டும். வளம் மிகுந்து சிறக்கட்டும் என்று விரும்புகிறாள்
தாய். மாமரத்தின் அருகே
நாற்றமெடுக்கும்படி வாழும் சிறு மீன்களை உடைய குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்த தலைவன் தலைவியைத் திருமணம்செய்து தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.
விளக்கம்: சேரமன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் அழைக்கப்பட்டனர். மன்னனை வாழ்த்திப் பின்னர் தலைவன் ஊரைப்பற்றியும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி. மாமரம், மீன், பூக்கள் ஆகியவை கருப்பொருளாகும்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன். வாழ்க அவினி, மாரி வாய்க்க - மழை பொழிய, வள நனி சிறக்க - வளம் மிகுந்து சிறக்கட்டும், என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய், யாமே – நான், பூத்த மாஅத்து - பூத்திருக்கும் மாமரம், புலால் அம் சிறுமீன் - நாற்றம் கொண்ட சிறு மீன், தண் துறை ஊரன் - குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவன், தன்னோடு – அவனோடு, கொண்டனன் செல்க - திருமணம் செய்து அழைத்துச் செல்ல, என வேட்டேமே - என விரும்புகிறேன்
ஆதன் ,அவினி என்பது மன்னர்கள் பெயரோ?தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல விளக்கம்... நன்றி...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
அருமை கிரேஸ் . சங்க இலக்கியச் சுவையை தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு நன்றிகள் பல :)
பதிலளிநீக்குமற்றுமொரு அழகானப் பாடல் மற்றும் விளக்கம்..வாழ்த்துகள் கிரேஸ்..
பதிலளிநீக்குஅழகானப் பாடல் - விளக்கம்
பதிலளிநீக்குVetha.Elangathilakam.V