மக்குவதைத் தடுக்காமல் இரு!

சிறிது சிறிதாக உயர்ந்து
முகிலோடு முட்டி 
மழை பொழியச் செய்து 
பறவையுடன் பேசி 
அணிலுடன் அளவளாவி 
மண்ணைச் சேர்த்துப் பிடித்து
பலன் பல தந்து 
பின்பு ஒரு நாள் 
வேருடன் விழுந்தேன்

முடியவில்லை என் பணி
முக்கியமானது தொடரும் இனி
கரையானுக்குக் கொஞ்சம் கரைந்து
நுண்ணுயிருக்கும் கொஞ்சம் உணவாகி
வண்டுகளும் வயிறார விட்டு
மண்ணோடு மண்ணாக மக்கி
உரம் தரும் உரமாகி
வளம் பெருக வளமாக்கி
மண்ணாகவே மாறிடுவேன்


விதை பல உயிர்க்கும்
செடி பல செழிக்கும் 
உயர்ந்து மரமாகும் 
முகிலோடு முட்டும்
மழை பொழியச் செய்யும் 
பறவையுடன் பேசும் 
அணிலுடன் அளவளாவும்
பலன் பல தந்து வீழும்
சுழற்சி தொடரும்...




ஆனால், மனிதனே! 
மரத்தை வெட்டாதிரு! 
மக்குவதைத்  தடுக்காமல் இரு!
மக்காப் பொருட்களை
உன் வசதிக்குச்  சேர்க்காமலிரு!
மண்ணையும்  விட்டுவிடு!
எங்கும் மாளிகை ஆக்காமலிரு! 
பறவைகளையும் விலங்குகளையும் துரத்தாமலிரு!
தன்னைப் பார்த்துக் கொள்ளும் பூமி!
தன்னைப் பார்த்துக் கொள்ளும்!!

26 கருத்துகள்:

  1. நியாயமான அறிவுறுத்தல் நன்று

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. உயரிய கருத்துடன் கூடிய அழகான கவிதை கிரேஸ். மிகவும் தேவையானது. படங்களும் அருமை..

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய - இல்லை இல்லை... உணர வேண்டிய வரிகள்... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. மனிதனே!
    மரத்தை வெட்டாதிரு!
    மக்குவதைத் தடுக்காமல் இரு!

    தேமதுரத்தமிழோசை ..!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த சிந்தனை. கருத்துச் செறிந்த கவிதை!
    வாழ்த்துக்கள் தோழி!

    இயற்கையுடன் இணைந்துவிடு!
    இயற்கையாய் இருக்கட்டும்விடு!!...

    பதிலளிநீக்கு
  6. மனிதனே!
    மரத்தை வெட்டாதிரு// இந்த ஒன்று போதும். பல பிரச்சினையை சமாளிக்க. செய்கிறோமா நாம்? இதுவரை எத்தனை மரங்களை நட்டிருப்போம் நாம்? அடுத்த சந்ததியருக்கு தண்ணீரில்லா, வெறும் காங்க்ரீட் காடுகளை தான் நாம் தரப்போகிறோம். இன்றைய சூழலின் பிரதிபலிப்பு கடைசி பத்தியில். அருமை....

    பதிலளிநீக்கு
  7. ஆழமான கருத்துடன் கூடிய
    அருமையான கவிதை
    தலைப்பு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஆமாம், தேவையை அனைவரும் புரிந்துகொண்டால் நல்லது..நன்றி ஸ்ரீனி!

    பதிலளிநீக்கு
  9. உண்மை, உணர்ந்தால்தானே செயல்படுத்தமுடியும். நன்றாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  10. @இராஜராஜேஸ்வரி: மிகவும் நன்றி! உங்கள் கருத்துரையை ரசித்தேன், நன்றி பல!

    பதிலளிநீக்கு
  11. அனைத்து வரிகளும் அருமை தோழி... வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  12. @இளமதி:
    பாராட்டி வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி தோழி!
    //இயற்கையுடன் இணைந்துவிடு!
    இயற்கையாய் இருக்கட்டும்விடு!!...// அருமை, உண்மை! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. @ராபர்ட்: ஆமாம், மரங்களைக் காப்பாற்றினால், மேலும் வளர்த்தால் அனைத்தும் வளமாகும். முயற்சிப்போம். வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  14. @ரமணி: கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா! தலைப்பையும் பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. "....மக்காப் பொருட்களை
    உன் வசதிக்குச் சேர்க்காமலிரு!......தன்னைப்பார்த்துக்கொள்ளும் பூமி." நிச்சயமாக மனிதனே உணர்ந்துகொண்டு செயல்படு.

    அருமையான கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. த‌ற்பொழுது மிக‌வும் தேவையான‌ அறிவுறுத்த‌ல் கிரேஸ். எப்பொழுதும் போல் க‌விதை அருமை. க‌ருத்து மிக‌ அருமை.. ப‌டங்க‌ள் மிக‌ மிக‌ அருமை.. :‍))

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. அருமையான அறிவுறுத்தல்...இன்னமும் புரிந்து கொள்ளாமல் போனால் புதைந்து போவது மானிடர்தான்...

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் எழில்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. கடைசி வரி “உன்னையும் பார்த்துக் கொள்ளும்” என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்- தாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு முதல் நன்றி தாஹா அவர்களே! ஆமாம், நீங்கள் சொல்வதும் சரிதான், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  21. பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...