மீன்பிடித்து மீண்டும்


இலைக் கம்பளம் விரித்து
கிளைக் குடைப் பிடித்து
வளைந்து சென்ற காட்டுப்பாதை
வலமாகத் திரும்ப
கண்ணைக் கவர்ந்து
விரிந்திருந்தது ஒரு ஏரி!

நீரலை வரிகள்
சித்திரம் வரைய
சுற்றி உயர்ந்த மரங்கள்
எட்டியேப் பார்க்க
பச்சை வண்ணத்தில்
பளபளத்த பசுமை!

அங்கும் இங்கும் தோன்றிய
நீர்க் குமிழ்கள்
மீன்களின் வணக்கங்கள்
ஏற்று பதில் சொல்ல
மீன்பிடித்து மீண்டும்
ஏரியில் விட்டோம் மகிழ!

16 கருத்துகள்:

  1. கவியெழுதி காட்சி காட்டும் கலைகண்டேன்
    செவியிருந்தால் போதுமே சித்திரம் காண
    குவிகின்ற எண்ணங்கள் கூறுதே காவியமாய்
    புவிதனில் உனக்கினை புகழ்பெற யாரம்மா...

    அருமையான 'காட்சிக்கவி' தோழி!
    வாழ்த்துக்கள் பல!

    பதிலளிநீக்கு
  2. மீன் பிடித்தது நமக்கு மகிழ்ச்சி
    நீரில் விட்டது மீனுக்கு மகிழ்ச்சி
    யாரைம் பாதிக்காத மகிழ்ச்சி தானே
    உண்மையான மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. அட.. அட. என்ன ஒரு ரசனையான கவிதை. காட்சி கண் முன்னே வந்து போகிறது . சூப்பர் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன்... மகிழ்ந்தேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஆம்.. மீனும் மகிழ்ந்திருக்க வேண்டுமே.. நல்ல கவிதை கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  6. @இளமதி: //புவிதனில் உனக்கினை புகழ்பெற யாரம்மா...

    அருமையான 'காட்சிக்கவி' தோழி!
    வாழ்த்துக்கள் பல!// - மெய் சிலிர்த்தேன், உள்ளம் குளிர்ந்தேன்! ஊக்கம் பெற்றேன்! இப்படி மனம் மகிழ பாராட்டி 'காட்சிக்கவி' பட்டம் கூறிப் பாராட்டுவது உங்கள் இனிய மனமே அன்றி வேறொன்றுமில்லை தோழி! தலைவணங்கி நன்றி கூறுகிறேன்! நன்றி பல!

    பதிலளிநீக்கு
  7. @ரமணி: //மீன் பிடித்தது நமக்கு மகிழ்ச்சி
    நீரில் விட்டது மீனுக்கு மகிழ்ச்சி
    யாரைம் பாதிக்காத மகிழ்ச்சி தானே
    உண்மையான மகிழ்ச்சி// உண்மைதான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. @ஸ்ரீனி: //காட்சி கண் முன்னே வந்து போகிறது .// - அப்படியா? மிக்க மகிழ்ச்சி, நன்றி ஸ்ரீனி!

    பதிலளிநீக்கு
  9. @திண்டுக்கல் தனபாலன்: //ரசித்தேன்... மகிழ்ந்தேன்...// ரசித்தது கேட்டு நானும் மகிழ்ந்தேன், மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  10. @தியானா: //மீனும் மகிழ்ந்திருக்க வேண்டுமே.. நல்ல கவிதை கிரேஸ்..// ஆமாம், நன்றி தியானா!

    பதிலளிநீக்கு
  11. மீன்களின் வணக்கங்கள்? புதுமையான கற்பனை! :-)

    பதிலுக்கு நீங்களும் வணக்கம் சொன்னீங்களா?!

    பதிலளிநீக்கு
  12. @வருண்: ஏனோ அப்படித் தோன்றியது. ஆமாம், 'ஆஹா' என்று வியந்து, 'சீக்கிரம் விடு' என்று நீரில் விட்டதே எங்கள் வணக்கம் :) வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இது மனதுக்கு புத்துணர்ச்சி தரும் செயலாகும்

    பதிலளிநீக்கு
  14. இளமதியை அப்படியே ஆமோதிக்கிறேன். அற்புதமான காட்சிக்கவி... பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  15. @கீதமஞ்சரி: மிகவும் நன்றி கீதமஞ்சரி. மகிழ்ச்சியாக உள்ளது, அதேநேரம் தகுதி கொண்டுள்ளேனா என்ற சந்தேகமும் எழுகிறது. வெளியூர் சென்றதால் தாமதமாய் மறுமொழி பதிவுசெய்கிறேன். பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...