இலைக் கம்பளம் விரித்து
கிளைக் குடைப் பிடித்து
வளைந்து சென்ற காட்டுப்பாதை
வலமாகத் திரும்ப
கண்ணைக் கவர்ந்து
விரிந்திருந்தது ஒரு ஏரி!
நீரலை வரிகள்
சித்திரம் வரைய
சுற்றி உயர்ந்த மரங்கள்
எட்டியேப் பார்க்க
பச்சை வண்ணத்தில்
பளபளத்த பசுமை!
அங்கும் இங்கும் தோன்றிய
நீர்க் குமிழ்கள்
மீன்களின் வணக்கங்கள்
ஏற்று பதில் சொல்ல
மீன்பிடித்து மீண்டும்
ஏரியில் விட்டோம் மகிழ!
