Tuesday, January 12, 2016

உணரா மனிதம்


கருங்கல் சுமந்தால் கவள உணவு
கரும்பலகைப்  பாடம் கனவே எமக்குகழிவு பொறுக்கிக் கடக்கும் பொழுதில்
ஒலிக்கும் மணியோசை உள்ளம் உருக்கிடும்

கல்வி வறுமை ஒழிப்பதேது  எங்களைக்
கொல்லும் பசிப்பிணி கொத்தடிமை ஆக்கும்

கணக்கற்ற  பிஞ்சுகள் ஏங்கிக் கருகும் 
உணர்ந்தும் உணரா மனிதம் வாழ்க!


41 comments:

 1. நல்ல ஆக்கம் சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! உடனே வந்து ஊக்குவிக்கும் கருத்தும் வாக்கும், நன்றி சகோ!

   Delete
 2. உண்மைதான். இதற்காக வெட்கப்படவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 3. சிறப்பான வரிகள்! சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 4. Replies
  1. அதே தான் அண்ணா..நான் சொல்லியிருப்பது வஞ்சப் புகழ்ச்சி
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 5. குழந்தைகளின் கல்வியின் அவசியம் .நல்லப் படைப்பு
  இதையும் படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com/2016/01/blog-post_10.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா
   இதோ படிக்கிறேன்.

   Delete
 6. மனம் வெம்பும் பிஞ்சுகள்.

  ReplyDelete
  Replies
  1. வேதனைப்படுத்தும் உண்மை! இதை ஒழிக்க முடியவில்லையே! :(
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்

   Delete
 7. மொபைல் வழி வரும்போது சில தளங்களில் தமிழ்மணம் வாக்களிக்க இயலாது. நாளைக் காலை கணினி வழி வந்து வாக்களிப்பேன். :))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எனக்கும் இப்பிரச்சினை உண்டு. no problem, வருகையும் கருத்துமே பெரிது! :)
   மிக்க நன்றி

   Delete
 8. இனிமையும், எளிமையும்,
  மரபிற் புதுமையும அருமை.

  தொடர்கிறேன்.

  த ம 5

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த நன்றி அண்ணா. ஊக்கத்திற்கும் கற்பித்தலுக்கும் பிழை இருப்பின் திருத்துவதற்கும் :)

   Delete
 9. வணக்கம்

  சகோதரி

  எல்லாம் வயிற்று பசிக்குத்தான் வரிகள் மனதை நெகிழவைத்தது. த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 10. நல்ல கருத்து.
  உலகம் விழிக்கட்டும்.
  (வேதாவின் வலை)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி

   Delete
 11. சமூக சிந்தனை தழைத்தோங்குக,,,

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 12. மனிதம் என்பதன் பொருள் மறந்து பலகாலமாகிவிட்டதே தோழி.. வலியின் அவலம் உணர்த்தும் வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி, மறந்து விட்டோம் அல்லது அதன் பொருள் சிதைத்துவிட்டோம்...
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 13. வேதனை தரும் வரிகள்
  ஆயினும் உண்மை வரிகள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
  2. உள்ளம் நெகிழ வைத்த கவிதை!

   Delete
 14. உங்கள் கவிதையப் படித்தவுடன், ஐ.நா. மன்றத்தின் வழியே உலகநாடுகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. ஏனெனில் குழந்தைகள் நலன் என்ற பெயரில் செலவழிக்கப்படும் தொகை சரியான முறையில் உரியவரை சென்றடைவதில்லை. .

  ReplyDelete
  Replies
  1. சரிதான் ஐயா.. ஐ.நா. மன்றம் கவனித்தால் நல்லது. ஆனால் ஓவ்வொரு அரசும் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

   Delete
 15. என்றுதீரும் இந்த அவலம்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில்...உடனே தீர வேண்டும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி

   Delete
 16. வேதனையான வரிகள். எப்போது மாறும் இந்நிலை?
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. வேதனைதான்... உடனே மாற வேண்டும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

   Delete
 17. அருமையான பதிவு..உண்மை தான் நமது அரசு கொடுக்கும் இலவசத்தில் முக்கியமாக இருக்க வேண்டியவை கல்வி..கிடைக்கிறது ஆனால் தரமானதா என்று பார்த்தால் இல்லை..எவன் ஒருவன் கல்வி எனும் வாசலில் நுழைகிறானோ அவன் வறுமை எனும் பிடியில் இருந்து தப்பிக்கிறான்..

  தங்களின் பதிவு நான் இப்பொழுது மேற்கொள்ள இருக்கும் சமூகப் பிரச்சனை அல்லது மாற்ற நினைக்கும் செயல் மற்றும் அதற்கான தீர்வு ஆய்வுக்கு உதவும்..தாங்களும் இந்த சமூகத்தில் என்ன மாற்ற விரும்புகீரீர் என்பதை பகிருங்கள் சகோதரி..

  நன்றி..

  ReplyDelete
  Replies
  1. //எவன் ஒருவன் கல்வி எனும் வாசலில் நுழைகிறானோ அவன் வறுமை எனும் பிடியில் இருந்து தப்பிக்கிறான்..// அருமை வைசாலி. உங்கள் ஆய்விற்கு உதவுமேயானால் அதைவிட வேறென்ன மகிழ்வு இருக்கமுடியும்? நன்றியும் வாழ்த்துக்களும் வைசாலி. மாற்ற வேண்டியவை சமூகத்தில் நிறைய இருக்கிறது - பெண்ணடிமை, சாதி, மத வெறி, குழந்தைத் தொழிலாளி, ஊழல்.... எதைச் சொல்வதம்மா?

   Delete
 18. குழந்தை உழைப்பு, இன்றைய சமூகத்தின் கூடப்பிறந்த நோய்.
  “வெள்ளரி
  பிஞ்சுகள்
  விற்கின்றன” என்றொரு சிறு கவிதை நெடுநாளாய் நெஞ்சை அறுக்கின்றது. உன்கவிதையின் உள்ளடக்கம் அப்படியானது கிரேஸ். இதற்குத் தீர்வுகாணாத எந்தச் சமூகமும் முன்னேற முடியாது. (நாங்கள் அறிவொளி பரப்பிய காலத்தில், இதுபற்றிச் சில பாடல்களைப் பாடுவதுண்டு. விரித்தால் பெருகும்)

  ReplyDelete
 19. அழுத்தமான வரிகள் ..சூப்பர்

  ReplyDelete
 20. மனம் வேதனை அடையச் செய்யும் அருமையான வரிகள்...சகோ..

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...