Monday, October 12, 2015

இனிதே நிறைவுற்ற வலைப்பதிவர் விழா 2015

"உங்களைக் கீழே தள்ளுவது முடியாத விசயம் என்றாகும் வரை மேலே, மேலே உயர்ந்து கொண்டே இருங்கள்" - நைஜீரிய எழுத்தாளர் மைக்கேல் பஸ்ஸி ஜான்சன்.

நன்றியுடன் திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் தளத்திலிருந்து

வலைப்பதிவர்த் திருவிழா இனிதே நடந்து முடிந்தது. வர இயலவில்லை எனினும் இணைய உதவியுடன் இணைய முடிந்தது.

நேரலை ஒளிபரப்பை உணவு இடைவேளைக்குச்சற்று முன் வரை (அமெரிக்காவில் அதிகாலை 3.15 வரை) கண்டு மகிழ்ந்தேன்.

திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் தலைமையில் விழாவினை அருமையாகத் திட்டமிட்டு நடத்திய புதுக்கோட்டை நண்பர்கள் அனைவருக்கும் வலைச்சித்தர் தனபாலன் அண்ணாவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள். ஒவ்வொரு விசயத்திற்கும் திட்டமிட்டுக் குழுக்கள் அமைத்து ஆர்வத்துடன் இரவு பகலாகப் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. விழாக்குழுவினர் மிகப் பிரமாதமாக அசத்திவிட்டனர். அடுத்து நடத்துவோருக்குச் சவாலாக இருக்கும். தமிழ் வலையுலகத்தின் வளர்ச்சிக்கு உதவும்  நேர்மறை சவால்!

நேரலை ஒளிபரப்புத் தெளிவாக இருந்தது, யூகே இன்போடெக் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி.

நூல் வெளியிட்ட கரந்தை ஜெயக்குமார் அண்ணா மற்றும் சகோ ரூபன் இருவருக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்.

இனிமையாகப் பாடி மகிழ்வித்த சுபாவிற்கு நன்றியுடன் வாழ்த்துகளும்.

விழாவைச் சிறப்பித்த சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. தமிழ்ப் பதிவுலகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிட்டது என்றே நம்புகிறேன். அதற்கான முயற்சியாக மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டவுடன் என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.சூழல் பற்றி நான் அறிந்துப் பகிர வேண்டும் என்று நினைத்திருந்த விசயங்களைத் தள்ளிப்போடாமல்  பதியவும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவே மகிழ்ச்சி என்று நினைத்திருந்த வேளையில் பரிசொன்றும் (கணினியில் தமிழ் வளர்ச்சிக்கான கட்டுரை) கிடைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கிற்று. நடுவர்களுக்குச்  சிறப்பு நன்றிகள்.

என் சார்பில் பரிசினைப் பெற்றுக்கொண்டச் செல்லக் குட்டிப்பதிவர் நிறைமதிக்கு நன்றியுடன் அன்பு முத்தங்கள். (காணொளியைப் பார்த்து இங்கு இருவர் பொறாமைப்பட்டார்கள் என்பது வேறு விசயம் :) )


போட்டிகளுக்கு வந்த படைப்புகளை முழுமையாகப் படித்துமுடிக்கவில்லை என்றாலும் நிறையக் கற்றுக்கொண்டேன்.கலந்துகொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி. ஒவ்வொன்றாக அனைத்துப் படைப்புகளையும் வாசிப்பேன். கலந்துகொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.விழாவிற்கான பதிவுகள், பின்னூட்டங்கள் என்று கலகல என்றிருந்தது. அதே உற்சாகத்தில் பதிவுகளைத் தொடர்வோம்.

40 comments:

 1. நீங்கள் இல்லாத குறைமா அப்பா வருவாங்கன்னு நினச்சேன்,,,,....நன்றி கூறியமைக்கு மகிழ்ச்சிமா...தொடர்வோம்..

  ReplyDelete
  Replies
  1. அப்பாவுக்கு முடியலை கீதா. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

   Delete
 2. Replies
  1. கலக்கிட்டீங்க அண்ணா, நன்றி

   Delete
 3. தங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ நான் பதிவர் விழாவை நேற்றே வெளியிட்டு விட்டேன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! இப்படி ஒரு போட்டியா? :) உங்க பதிவைப் பார்த்துவந்தேன் சகோ. நன்றி

   Delete
 4. உங்களுக்கு பரிசு அறிவித்த போது அரங்கின் வெளியே வந்து கொண்டிருந்தேன் கிரேஸ் . நம் தோழிக்கு பரிசு என்று ஆனந்தப்பட்டேன்... பாமாயில் குறித்து எழுதிய பதிவா? படிக்கவில்லையெனில் இனி படிக்கிறேன் . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி எழில். பாமாயில் பற்றி எழுதியது இல்ல எழில், கணினிப் பயன்பாட்டியல் பற்றிய கட்டுரை.
   http://thaenmaduratamil.blogspot.com/2015/09/growth-of-tamil-from-computer-to-cloud-computing.html

   Delete
 5. வணக்கம் சகோதரி
  பரிசு பெற்ற தங்களுக்கு முதலில் வாழ்த்துகள். விழா சிறக்க தங்களைப் போன்றோரின் பங்களிப்பும் காரணம் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். நிறைமதியை மேடையில் பரிசு வாங்க ஒருவன் அழைத்து வந்தானே பார்த்தீர்களா சகோதரி? அது நான் தான் அடையாளம் தெரிந்ததா! ஹாஹா! பகிர்வுக்கு நன்றிங்க சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. நலமா?
   வாழ்த்திற்கு நன்றி.
   ஹாஹா! நேரலையில் சரியாகக் கவனிக்கவில்லை சகோ, என்னடா குழப்பம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் கானொளியைப் பார்க்கும்போது உங்களைப் பார்த்தேன் சகோ. மனமார்ந்த நன்றிகள்

   Delete
 6. 'அமெரிக்காவில் அதிகாலை 3.15 வரை) கண்டு மகிழ்ந்தேன்' - இந்த ஆர்வம்தான் எங்களையும் தூங்கவிடாமல் செயல்பட வைத்தது.. வேறென்ன?
  'நேரலை ஒளிபரப்புத் தெளிவாக இருந்தது, யூகே இன்போடெக் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி' - உண்மையிலேயே நன்றிக்குரியவர்கள் அந்த சாதனை இளைஞர்கள் தான் மா. எனக்கு எந்தஞானமும் இல்லாத பகுதியது. இதைச் சாதித்துக் காட்டியதுதான் விழாவின் பெருவெற்றியாக அந்தத் தம்பிகளை நான் மிகவும் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன். உன் பாராட்டுக்கும் நன்றிம்மா
  சூடான உன் பதிவுகண்டு வியந்து மகிழ்ந்தோம் தங்கையே! நீ சொன்னது போல “விழாவிற்கான பதிவுகள், பின்னூட்டங்கள் என்று கலகல என்றிருந்தது. அதே உற்சாகத்தில் பதிவுகளைத் தொடர்வோம்“ அதுதான் என் வழிமொழிதலும். நன்றிடா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா, கலக்கிட்டீங்க :) அடுத்து இப்படி நடத்த முடியுமா என்பது சந்தேகம் தான். உங்க உழைப்பும் திட்டமிடலும் மிக அருமை அண்ணா. மனம் நிறைந்த நன்றிகள்!
   //இந்த ஆர்வம்தான் எங்களையும் தூங்கவிடாமல் செயல்பட வைத்தது.. வேறென்ன?// அட!! உங்க ஆர்வமும் முயற்சியும்தான் எனக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தியது அண்ணா. இவ்வளவு பிரமாதமாகத் திட்டமிடுகிறார்களே என்றே பதிவர்கள் பலருக்கும் ஆர்வம் அதிகமாகியது.
   நிச்சயம் அண்ணா, யூகே இன்போடெக் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
  2. தேனு நானும் 3 . 15 மட்டும் இருந்து பார்த்து விட்டு எழும்ப மனமில்லாமலே சென்று தூங்கினேன். ரோம்ப உற்சாகமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். எல்லாவற்றையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது. எல்லோருடைய சுறுசுறுப்பும் திட்டமிடலும் கண்டு. விழா சிறக்கப் பாடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.
   தங்களுக்கு பரிசு கிடைத்ததும் அதை மகிழ்நிறை வாங்கியதும் கண்டு ஆனந்தம் கொண்டேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா. நன்றி !

   Delete
  3. ஆஹா! நாமிருவரும் ஒரேமாதிரி பார்த்திருக்கிறோமே ! :)
   உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி தோழி!

   Delete
 7. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பரிசு பெற்றமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திற்கு மனம்நெகிழ்ந்த நன்றி ஐயா

   Delete
 9. விழாவை இணைய வழி பார்த்து நன்றி பகிர்வு எழுதியமைக்கு வாழ்த்துக்கள்...
  மேலும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வணக்கம்
  சகோதரி

  நன்றி சொல்லி எழுதியுள்ளீர்கள் தங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் தங்களின் உடல் மட்டும் அமெரிக்காவில் இருந்தாலும் நினைவுகள் பதிவர் திருவிழா பற்றித்தான்... வாழ்த்துக்கள் .பரிசு பெற்றமைக்கு பாராட்டுக்கள் த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   உங்கள் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!
   ஆமாம், மனமெல்லாம் அங்கே தான் சகோ ..
   பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்.

   Delete
 11. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.

   உங்கள் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் அண்ணா

   Delete
 12. நம்பிக்கை தந்த திருவிழா
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  வலைப்பதிவால் உலகத்தை மட்டு மன்றி
  வளைத்திடலாம் மனங்களையும் என்ப தற்கே
  அலையலையாய்ப் புதுக்கோட்டை நகரந் தன்னில்
  அணிவகுத்த தமிழறிஞர் குழுவே சாட்சி !
  வலைச்சித்தர் தனபாலின் முயற்சி யாலும்
  வழியமைத்த முத்துநிலவன் துணையி னாலும்
  அலைகடலை வானத்தைக் கடந்தி ருந்த
  அருந்தமிழர் ஒன்றாகக் கைகள் கோர்த்தார் !

  கணினியெனும் தமிழ்ச்சங்கம் ; தமிழி ணையக்
  கல்வியெனும் கழகமுமே ஒன்றி ணைந்து
  மணியாகப் புதுமரபு கவிதை யோடு
  மனம்விழிப்புக் கட்டுரைகள் போட்டி வைத்தும்
  தனித்தனியாய் செயல்பட்ட பதிவர் தம்மைத்
  தமக்குள்ளே அறிமுகம்தாம் செய்ய வைத்தும்
  இனிதாகப் பரிசளித்தும் நூல்வெளி யிட்டும்
  இயற்றமிழைக் கணினிக்குள் உயர்த்தி வைத்தார் !

  தமிழ்ப்பரிதி ரவிசங்கர் சுப்பை யாவும்
  தமிழ்மொழியை இணையத்துள் மேம்ப டுத்தும்
  அமிழ்தான கருத்துரைத்தும் ; கல்வி யாளர்
  அருள்முருகன் செயல்பாட்டை எடுத்து ரைத்தும்
  நிமிர்ந்துதமிழ் நிற்பதற்கே வழிய மைத்தார்
  நிறைந்தரங்கோர் கைதட்டி உறுதி யேற்றார்
  தமிழோங்கும் புதுப்பொலிவில் எனும்நம் பிக்கை
  தந்ததுவே புதுக்கோட்டை திருவிழாதான் !

  ReplyDelete
  Replies
  1. அருமையான பாவிற்கு மனமார்ந்த நன்றி ஐயா

   Delete
 13. இனிய நன்றி நவிலல். திருவிழா முடிந்த சோகம் கலந்த சந்தோஷம்.

  ReplyDelete
 14. இந்த முறை துல்லிய திட்டமிடலுடன் விழா இனிதே நடந்ததில் மகிழ்ச்சி! தங்கள் படைப்புக்கள் பரிசினை வென்றதில் மேலும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ.
   மகிழ்ந்து வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 15. குழுவில் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்ற நிலையில் தேனீ போல சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும் பணியாற்றிய விதத்தை நேரில் கண்டு வியந்தோம். பின்வரும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கு இவ்விழாவினை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அனைவருக்கும் நன்றி. அங்கிருந்து பகிர்ந்து மகிழ்ந்த தங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீங்க ஐயா. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. விக்கிப்பீடியா பற்றிய உங்கள் உரைக்கும் நன்றி ஐயா

   Delete
 16. எனக்கும் ஒரு பரிசு தோழி....ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..உங்களுக்கு இரட்டைப் பரிசல்லவா? மகிழ்ச்சி சகோ..வாழ்த்துகள்!

   Delete
 17. சிறப்பான பகிர்வு. பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சோகம் இருந்தாலும் சந்திக்கும் நண்பர்களை நினைத்து மகிழ்ச்சி.

  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் கிரேஸ்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, எனக்கும் அதே தான்.

   வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

   Delete
 18. சென்னையில் இருக்கும் நானே காணொளிதான் கண்டு ரசித்தேன்!என்ன செய்வது?

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஐயா..எல்லோராலும் நேரில் செல்ல முடிவதில்லை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 19. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

  இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

  நன்றி...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. ஓ நீங்கள் கலக்குங்கள் அண்ணா.. :)
   மிக்க நன்றி

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...