மேகம்

அழகு வடிவம் ஈர்த்தாலும் 
அணைத்துக்  கொஞ்ச இயலாது!
பஞ்சணை போல் இருந்தாலும் 
படுத்து உறங்க முடியாது!

பலவிதமாய் உருமாறும் தோற்றம் 
ஆனால் அனைத்தும் அழகு!
பிரமாண்டமாய் உருவம் இருந்தாலும்
ஊடுருவிச் செல்லும் மென்மை!

நிலவையும் கண்டு மயங்காமல் 
அனலியையும் கண்டு தயங்காமல் 
சேரும் இடம் நோக்கி 
கடமையாய்ப்   பயணிக்கும் பயணி!

நிலை இல்லாத நாடோடி
ஆனால் வானம் உன் வசம்!
நிலம் குளிர்விக்கும் முன்னோடி
நகர்ந்து செல்லும் மேகம்!

அனலி - சூரியன் 


7 கருத்துகள்:

  1. அருமை அருமை
    மேகம் போல் மனம் குளிர்வித்துப்போகிறது
    தங்கள் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கற்பனை கிரேஸ் !!
    அருமையான வரிகள்
    "நிலவையும் கண்டு மயங்காமல்
    அனலியையும் கண்டு தயங்காமல்"

    பதிலளிநீக்கு
  3. அழகே உன் கவியழகு, அதிலே உன் கற்பனை மிக அழகு
    அந்தியிலே நான் மயங்கநினைக்கும் வேளையிலும், உன் கவி என்னை அழைக்கிறது, உன் கவியை புகழ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தோழியே கேள், உன் விமர்சனம் வியக்க வைக்கும் அழகு!
      என்னை ஊக்குவிக்கும் கவியே, உன்னை நான் ரசிக்கிறேன்!
      தோழிக்கு நன்றி எதற்கு என்றாலும், நன்றி பல! :-)

      நீக்கு
  4. //நிலவைக் கண்டு மயஙுங்காமல்
    அனலியைக் கண்டு தயஙுங்காமல்
    சேரும் இடம் நோக்கி
    கடமையாய் பயணிக்கும் பயணி//
    அசத்தல் வரிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...