புதுக்கோட்டை புத்தகத் திருவிழா




எல்லோருக்கும் எங்கும்
சுவாசித்தல் போல
வாசித்தல்



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020
நகர் மன்றம்
பிப்ரவரி 14 முதல் 23 வரை
காலை 9.30 முதல் இரவு 9 வரை
நடத்துபவர்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்று வாங்கி வாசிப்பவர் : நாம் தான்
பயனடைபவர்: நாமே தான்.


சுவாசிக்க வாசிப்போம், வாசிக்க சுவாசிப்போம்



கருங்கடர்க் கொண்டல்


படம்: நன்றி இணையம் 
கீழ்த்திசைக் கதிரோன் கடலெழும் முன்பே
பளிச்சிட்ட ஒளியில் கண்கள் மலர்ந்தேன்
வாள்ஒளி வானம் கீறக் கண்டேன்
வாட்சண்டை வீரர் முழங்கக் கேட்டேன்

செம்மொழியின் செம்மொழி

தினம் ஒரு திருக்குறள் என்றும் தினம் ஓர் அறநெறிப்பாட்டு என்று சிறப்பாகச் சொல்கிறாள் ஒரு சிறுமி! அழகான தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பார்த்து வாசிக்காமல்  மனதிலிருந்து சொல்லி அதற்கான பொருளையும் கூறும் விதம், நம்மை ஈர்க்காமல் இருப்பதில்லை!

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்

       வேலூரில் வாழும் அத்தை வீட்டில் தங்கி மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் படிக்கும் திட்டத்தில் சென்னையிலிருந்து வேலூர் செல்கிறான் கிச்சா. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதனால் அக்கௌன்ட்டன்சி பாடத்திற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடு. வாத்தியார் வீட்டைத் தேடி செல்லும் அவன் தெருமாறிச் சென்று உமாவைச் சந்திக்கிறான். இச்சந்திப்பு கிச்சா மற்றும் உமாவின்  வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தது என்பதை அவர்கள் குடும்பப் பின்னணியோடு இணைத்து தெளிந்த நீரோட்டம் போலச் சீராகச் சொல்கிறது Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் என்கிற நாவல்.

வேதராஜ் தாத்தா


கரும்பாறையினைக் கல்லினால் உராய்ந்ததைப் போல வானில் ஓர் ஒளிக்கீற்று. மனத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நா.. எண்ணுவதற்குள் ஒலித்தது இடி. மூன்று மைல் தொலைவில் மையம் கொண்டிருத்த புயலினால் ஏதோ மரமுதிர்த்த இலைகள் திசை அறியாமல் என் வண்டியின் முன் கண்ணாடியில் தஞ்சம் புகவந்தன. ஆனால் எனக்குச் சாலை காட்டத் துடித்துகொண்டிருந்த முன்துடைப்பான் இலைகளை நொடியில் தள்ளிவிட்டது.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.