செம்மொழியின் செம்மொழி

தினம் ஒரு திருக்குறள் என்றும் தினம் ஓர் அறநெறிப்பாட்டு என்று சிறப்பாகச் சொல்கிறாள் ஒரு சிறுமி! அழகான தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பார்த்து வாசிக்காமல்  மனதிலிருந்து சொல்லி அதற்கான பொருளையும் கூறும் விதம், நம்மை ஈர்க்காமல் இருப்பதில்லை!

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி, குட்டி  பதினாறடி, அப்படியென்றால் இவள் முப்பத்து இரண்டு அடி! சரிதான்! புரியவில்லையா?
அட, நம்ம திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் பெயர்த்தி இந்தச் செல்லம்!

செம்மொழி சொல்லும் செம்மொழி அழகு!
செம்மொழி சொல்லும் செம்மொழி இனிமை!


நீங்களே பாருங்கள்:


மூதுரைப் பாடல்

அப்படியே செம்மொழியின் மற்ற பாடல் காணொளிகளையும் கண்டு மகிழுங்கள்!

8 கருத்துகள்:

 1. தினமும் ஒரு புத்துணர்வு...
  "கணினித் தமிழ்ச் சங்கம்" குழுமம் மூலம்...

  செல்லத்திற்கு பாராட்டுகள் & வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. நானும் கேட்டு ரசிக்கிறேன் செல்லம்மா குரலில்..

  பதிலளிநீக்கு
 3. உங்களின் பகிர்வால் செம்மொழிக்கு ஊக்கம் வலுப்பெறும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் செய்ய வேண்டியதே , மகிழ்வுடன். செம்மொழிக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்

   நீக்கு
 4. நன்றிம்மா. நெகிழ்வான நன்றியும் வணக்கமும்.
  32 அடியோடு, அவளது அம்மாவையும் சேர்த்தால் 64அடி!
  இதில் என் பங்கு -என் பேத்தி என்பதைத் தவிர, அவளுக்குப் பேர் வைத்ததைத் தவிர- வேறொன்றும் இல்லை மா
  எல்லாம் என் மகன் அ.மு.நெருடாவும் அவனது இணையர் ஞா.பாரதியும் செய்யும் பணிகளே! இந்தப் பெயர் செம்மொழிவழி அவர்களுக்குத்தான் சேரவேண்டும். என் பேத்தி என்று தற்போது அறியப் படுபவள், இன்னும் 15,20 ஆண்டுகளில் “செம்மொழியின் அப்பா தான் எழுத்தாளர் அ.மு.நெருடா, செம்மொழியின் தாத்தா தான் கவிஞர் முத்துநிலவன்” என்று அறியப்பட்டால் அதைவிட எனக்குப் பெருமை வேறென்ன?
  “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை..” என்று நம் குறளாசான் இதைத்தானே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறான். மீண்டும் நன்றி தங்கையே! வணக்கம்.

  பதிலளிநீக்கு
 5. குழந்தைகளை வளர்ப்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது. பெற்றோருக்கு வாழ்த்துகள். தாத்தாவுக்கு இதைவிட மகிழ்ச்சிதருவது வேறென்ன? பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...