இணைந்தே பயணிக்க


மகிழ்ச்சி பலதந்து மங்கிடா நட்பை
நெகிழவேச் சேர்த்து நிறைந்திட்ட  ஆண்டே
மகிழ்ந்தே பலநன்றி மாலையாய்ச் சூட்டி
நெகிழ்ந்தே அனுப்புகிறோம் நின்னை!இணைந்திட்ட நட்பின் இதயமெலாம் புத்தாண்டே
இணைந்தே பயணிக்க இன்னருள் தாராய்!
இணையிலா அன்பு இனிதாய் நிலைபெற
இன்முகம் என்றும்நீ   காட்டு!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

36 கருத்துகள்:

 1. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
 3. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  பதிவினில் தேர்ந்தெடுத்த படங்களும், கவிதை வரிகளும் சிறப்பாக உள்ளன.

  த.ம.1

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாடல் கிரேஸ் .. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ
  இறைவன் நல்லருள் புரிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

  பதிலளிநீக்கு
 7. இனிய கவிவாழ்த்து! அருமை!

  உளம் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. new year வெண்பா அசத்தல் டியர்:) உங்களுக்கும், அண்ணனுக்கும், குட்டீஸ் கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் மகன்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்தி பேசும் சொற்களெல்லாம் வந்து உங்களை சேரட்டும் என்று இந்த புத்தாண்டு தினத்தில் வாழ்த்துகிறேன். இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள் ஆசைபட்டவைகள் விரும்பியவைகள் நம்பியவைகள் அனைத்தும் உங்களை வந்து சேரவும் பிரார்த்திக்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அன்பான வாழ்த்திற்கும் பிரார்த்தனைக்கும் உளமார்ந்த நன்றி சகோ..
   உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. அழகான வாழ்த்து சகோ !

  இனிய பாடலாய் இன்புறட்டும் வாழ்வு அருமை !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  நன்றி !

  பதிலளிநீக்கு
 17. வெண்பா வாழ்த்து அசத்தல் மிக்க நன்றிம்மா ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!

  பதிலளிநீக்கு
 18. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 19. உங்க புத்தாண்டு வெண்பாவில் ஆரம்பமாகியுள்ளது. நல்ல ஆரம்பம்! :) நீங்க எல்லாம் நட்பைப் பத்தி இத்தனை உயர்வாகப் பேசும்போது எனக்குக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, கிரேஸ்! உங்களுக்கு 2015 இன்னும் பலநூறு நல்நட்புக்கள் கிடைக்கட்டும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வருண்..நன்றி :)
   ஏன் பயம் வருண்? நட்பில் பயமில்லை :)
   2014இல் பல நல்ல நட்புகள் கிடைத்தீர்கள்..அந்த மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்த்திற்கு நன்றி .

   நீக்கு
 20. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...