கனவில் வந்த காந்தி

பாவம் காந்தி தாத்தா, கனவில் வருகிறேன் என்று முத்துநிலவன் அண்ணா மூலமாகச் சொல்லி அனுப்பினார். அவரை அப்புறம் வாருங்கள் என்று வேண்டி அனுப்பிவிட்டேன். அவரும் பொறுமையாக காத்திருந்து நேற்று என் கனவில் வந்தார். அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே...

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

என் பெற்றோருக்கே மகளாய், அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு.

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் நேரத்தில் நாட்டிற்கு எது தேவையோ அதைச் செய்வேன்.

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?
நல்லதிற்குக் குரல் கொடுத்து நிற்கும் பொழுது எதிர்ப்புகள் வரவேச் செய்யும். எதிர்ப்பு வந்தால் நாம் நாட்டிற்கான நல்ல திசையில் செல்கிறோம் என்று மகிழ்ந்து முன்னேறுவேன்.

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?
    
முதியோர் என்றால் என்ன? சோர்ந்து போய்விட வேண்டுமா? வயதாகிவிட்டது என்று நினைத்து அடையும் சோர்வே, அதிகம். அது வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, செய்வேன். உதாரணத்திற்கு, முதியோர் மற்றும் பேரப்பிள்ளைகள் பங்கெடுக்கும் விளையாட்டுகள், திருவிழாக்கள், வகுப்புகள். முதியவருடன் செலவழிக்கும் நேரத்தைப் பற்றிப் பிள்ளைகள் பள்ளியில் பகிர வேண்டும், அதற்கு கிரேடிங் உண்டு.

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
இப்போவே இருக்குங்க, அரசியல் ஒரு பதவி இல்லை, சேவை என்று. அதைப் பின்பற்ற வைப்பேன். தன் பணிக்காலத்தில் வேலையைச் சரியாய் செய்துவிட்டுப் பின்னர் தன் சொந்த வேலையைப் பார்க்க போய்க்கொண்டேயிருக்க வேண்டும். 'முன்னாள்' என்பது கூடவே கூடாது!

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
பாடம் புரிந்திருக்கிறதா என்று செயல்முறையாகப் பரீட்சித்து விரும்பும் கல்லூரி சேரலாம் என்று சொல்லச் சொல்வேன். மதிப்பெண்ணிற்கு மதிப்பு கொடுத்தது போதும், மதிக்குக் கொடுக்குமாறு செய்வேன்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
விஞ்ஞானிகள் உழைப்பைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுத்து இந்தியாவிலேயே ஆராய்ச்சியைத் தொடருமாறுச் செய்வேன். அரசியல் தலையீடு, இருக்கக் கூடாது.

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
நம்பிக்கை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வேறொன்றும் உதவாது. என் ஆட்சியில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றக்களைப் பார்த்து கண்டிப்பாக அனைவரும் தொடர்வர். அரசியலைத் திருத்தி எழுதியவர் என்று என் பெயர் உலக வரலாற்றில் நிலைக்கும். ( எப்படி? :) ப்ளாக்லயாவது சொல்ல விடுங்கப்பா..)

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
நம் வரலாற்றைப் புரட்டி முன்பிருந்த அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற அருமையான விசயங்களைக்  கண்டறிந்து வெளிக்கொண்டு வருபவருக்கு பாராட்டும் பரிசும் கொடுத்து அதனை உலகறியச் செய்ய உலக மாநாடுகளுக்கு அனுப்புவேன். நம் களஞ்சியத்தைத் தோண்டி யாரோ அயலார் காப்புரிமை வாங்குவதைத் தடுப்பேன். (நம்ம ஊர் தோப்புக்கரணத்தை 'brain yoga' என்ற பெயரில் பரப்புகிறார்கள்பா, டென்ஷன் ஆகுது! இதுபோல நிறைய இருக்கு.)

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
இந்தப் பிறவியில் செய்ய வேண்டியவற்றைச் செய்து இறைவன் காலடி சேரவே விரும்புகிறேன். தமிழ் பேசும் மானிடப் பிறவி தவிர வேறொன்றும் வேண்டாம். 

நான் தாமதமாகக் கனவு கண்டதால் காந்தியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டேன். யாரிடமும் அனுப்பவில்லை. எல்லா இடமும் சென்ற பிறகே இங்கு வந்தார் என்று நினைக்கிறேன்...அட, இருங்க இருங்க, ஒருத்தர் இருக்கார். கோவைவீரன் ஸ்ரீனி, வாங்க வாங்க, காந்தித்தாத்தா வராராம், ப்ளாக் பக்கம் வாங்க. :))
என் மூளையைக் கசக்க வைத்த முத்துநிலவன் அண்ணாவிற்கு நன்றி!

23 கருத்துகள்:

 1. 9 வது பதில் மிக அருமை...... நம்ம ஆளுங்க இன்னும் தூங்கி கொண்டிருக்காங்க.. நாம் காலம் காலமாக பயன்படுத்திய பல விஷயங்களை இவர்கள் புதுப் பெயருடன் அறிமுகப்படுத்தி நல்லா காசு பாக்கிறாங்க...ஹும் எனக்குதான் டென்ஷன் வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ..
   உண்மைதான், டென்ஷன் தான் வருது..என்ன பண்ணலாம் சொல்லுங்க..
   எல்லோர்கிட்டேயும் நம்மகிட்ட இருக்கிற நல்ல விசயங்களைப் பகிர்வோம். பணம் வராவிட்டாலும் , ஓ இது அவங்க சொன்னது, தமிழ்நாட்டில்/இந்தியாவில் இருக்கே அப்டின்னு நினைக்க வைக்கணும். :)

   நீக்கு
 2. மீண்டும் தமிழ்ப் பேசும் மானிடப் பிறவி
  ஆகா
  அருமை சகோதரியாரே
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதில்க I must be dreaming அருமையான படம் வேறு..
  தம மூன்று

  பதிலளிநீக்கு
 4. இயல்பாய் மனதில் இருப்பதை அழகாய் சொல்லியிருக்கீங்க....

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதில்கள் கிரேஸ்... என்னோட பதிலை விரைவில் சொல்லுறேன் :)

  பதிலளிநீக்கு
 6. அருமை... அருமை...

  நாலும் ஆறும் நடந்து விட்டாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்தது...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் காலையில் பதிவை ''செல் ''லில் படித்ததால் கருத்து ''சொல் '' லமுடியவில்லை சாதாரணமாக ரொம்பகூலா காந்திஜி கூட பேசியது போலவே இருக்கிறது பதில்கள் வாழ்த்துகள்
  த.ம. 5

  பதிலளிநீக்கு
 8. நான் ரசித்த மறுமொழி தமிழ் பேசும் மானிடப்பிறவிக்காகத் தாங்கள் ஏங்குவது.

  பதிலளிநீக்கு
 9. அருமையான, வித்தியாசமான பதில்கள்! வாழ்த்துகள் டியர்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...