பாக்களின் ராணி தென்றல்
பார்க்கவே கொடுத்தேன் என்நூல்
பூக்களால் மாலை கோர்த்து
பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே
ஆனந்தமாய் சொல்வேன் நன்றி
உளமெலாம் இன்பம் பூக்க
உன்கவி பாடி விட்டாய்
களஞ்சிய நிறைபொன் ஈடோ
களிக்கிறேன் உன்பா கண்டு
அளவிலா நன்றி யதனை
அன்புடன் ஏற்பாய்த் தோழி!
பார்க்கவே கொடுத்தேன் என்நூல்
பூக்களால் மாலை கோர்த்து
பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே
ஆனந்தமாய் சொல்வேன் நன்றி
உளமெலாம் இன்பம் பூக்க
உன்கவி பாடி விட்டாய்
களஞ்சிய நிறைபொன் ஈடோ
களிக்கிறேன் உன்பா கண்டு
அளவிலா நன்றி யதனை
அன்புடன் ஏற்பாய்த் தோழி!
தோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன்,