துளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்

பாக்களின் ராணி தென்றல் 
   பார்க்கவே கொடுத்தேன் என்நூல் 
பூக்களால் மாலை கோர்த்து 
   பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே  
   ஆனந்தமாய் சொல்வேன் நன்றி

உளமெலாம் இன்பம் பூக்க 
   உன்கவி பாடி விட்டாய் 
களஞ்சிய நிறைபொன் ஈடோ 
    களிக்கிறேன் உன்பா கண்டு 
அளவிலா நன்றி யதனை 
    அன்புடன் ஏற்பாய்த் தோழி!

தோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன், 

12 கருத்துகள்:

  1. நட்பின் பெருமைக்கு நல்ல உதாரணம்!
    இட்டீரே நன்றி!.பாவாய் இங்கு!

    நண்பிக்கு தந்த நன்றிக் கவிதை அருமை தோழி!

    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    த ம.2

    பதிலளிநீக்கு
  2. பாகாய் உருகிப் பாவடித்தாய் பண்பெனவே
    நோகாமல் நொய்ந்தே நவின்றாயே நன்றியை
    நட்பின் வலிமையை நன்கே உணர்ந்தாய்நீ
    விட்டகலா தொட்டும் நிலைத்து !

    ஆழ்ந்த நட்பும் அழகான விருத்தமும். வாழ்க பல்லாண்டு ...!
    நலம் தானேம்மா !

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகளால்
    ஓர் நன்றியுரை
    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. பாட்டுக்குப் பாட்டு. தென்றல் சசிகலாவின் கவிதைக்கு நீங்கள் சூட்டிய பாமாலை. பாராட்டுக்கள்.
    த.ம.5

    பதிலளிநீக்கு
  5. அட!!! விருத்தத்தால் நன்றி நவிலலா!! சூப்பர் டியர்! செம ! செம!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் அனைவரின் கருத்து கண்டு மகிழ்ந்தேன், மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...