இங்கேயுமா கள்ளநோட்டு - தொடர்ச்சி

தானியங்கி வங்கி இயந்திரத்திலும் கள்ளநோட்டு வருவதைப் பற்றியப் பதிவு இங்கேயுமா கள்ளநோட்டு? அதன் தொடர்ச்சியாகக் கள்ளநோட்டை நல்லநோட்டிலிருந்துப்  பிரித்துப் பார்ப்பது எப்படி என்று இந்தப் பதிவு.


நல்ல நோட்டைக் குறிக்கும் குறியீடுகள்:
1. இடது மேல் பக்கத்தில் ஒரு புள்ளிக்கு மேலே 500 என்பதற்கான ஒரு அச்சு.
2. இடது கீழ்ப் பக்கத்தில் புள்ளிக்குக் கீழே  வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும் 500.
3. நோட்டின் பின்புறம் கீழ்ப் பகுதியில் நடுவில் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம் அச்சடிக்கப்பட்டிருக்கும்..

கள்ள நோட்டில் மேலே சொன்ன மூன்று குறியீடுகளும் இருக்காது. மேலும் வலது பக்கம் ஒரு வெள்ளி கோடு தெரிந்தால் நல்ல நோட்டு என்று கேட்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது அக்கோடு கள்ளநோட்டிலும் இருக்கிறதாம்.

இந்தக் குறிப்புகள் கள்ளநோட்டைக் கண்டுகொள்ள அனைவருக்கும் பயன்படலாம் என்று பதிவிடுகிறேன். தெளிவாக சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
தூயதோர் சமுதாயம் அமைய வழிசெய்வோம்! நன்றி!

நல்ல நோட்டையும் கள்ள நோட்டையும் படம் எடுத்து குறியீடுகளைக் குறித்துக் கொடுத்த என் கணவருக்கு நன்றி!

8 கருத்துகள்:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    எல்லோரும் இனி விழித்தொழுந்திடுவார்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பதிவும் பகிர்வும் தோழி!

    இங்கு நல்ல கள்ள நோட்டு கண்டுபிடிக்கக் கருவியே உள்ளது.
    சாதாரணமாக இப்படிக் கள்ள நோட்டு உலாவ முடியாது. ஆனால் அசாதாரனமாக உலாவினால்.. உலாவினாலும் என்று இக் கருவியை விற்கின்றார்கள். கடைக்காரர் வாங்கி வைத்திருப்பார்கள்.

    மக்களும் சிலர் வைத்திருக்கின்றார்கள். ஐரோப்பிய ஒன்றலின்பின் இங்கும் இந்த அவதானிப்புப் பெருகிவருகிறதுதான்.

    உவ்விடம் நிலமை கவலைக்கிடம்தான்...

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள பதிவு கிரேஸ் :).. நன்றி இருவருக்கும்

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள பகிர்வு..... தினம் தினம் பார்த்தாலும் சில சமயங்களில் மாட்டிக் கொள்கிறோம்... :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...