கிறிஸ்துமஸ் காலம் - கைவினை

இதையும் அதையும் துடைத்து
இதையும் அதையும் குறித்து

பச்சை மரத்தில் தொங்கவிட
பதமாய் வீட்டில் ஆபரணம் செய்து

பனி வேண்டும் இங்கே என்று
பனித் துளிகள் செய்தோம் காகிதத்தில்


முன்னாடியே செய்வது எது
முதல்நாள் செய்வது எது

நானாகச் செய்வது எது
நான் பெற்றவர்  செய்வது எது

குடில் வைப்பது எங்கே
குழந்தைகள் விளையாடுவது எங்கே

இதைச் செய்து விட்டோமே
இன்னும் எதைச் செய்யலாம்

இப்படிப் பல திட்டங்கள்
இப்படிப் பல கிளர்ச்சிகள்

இனிதாக வருகிறது அருகில் ஒரு தினம்
இன்பம் தரும் கிறிஸ்து பிறப்பு தினம்44 கருத்துகள்:

 1. கவினையும் கவிதையும் அசத்தல்!..

  பனித்துளி தாளில் மிக அழகாக வெட்டி அமைத்துள்ளீர்களே!

  ம். நத்தார் வரும்போது மனதில் மகிழ்ச்சி வருவதும் இயல்பே...

  அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி! இணையத்தில் பார்த்ததுதான் தோழி.
   நத்தார் என்ற வார்த்தையை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன், மிக்க நன்றி!
   வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 2. திட்டங்கள் மேலும் சிறக்கட்டும்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அழகு.. கிறிஸ்துமஸ் கலை கட்ட ஆரம்பச்சுடுச்சு :).. தங்கள் கைவண்ணத்திலான பொருட்களும் அழகு :)

  பதிலளிநீக்கு
 4. திருவிழாக்கொண்டாட்டம் தெரிகிறது கவிவரிகளில்.... குடிலையும் கிறிஸ்துமஸ் மரத்தையும் சோடிக்கக் கிடைக்கும் உற்சாகம்... நம் கைவண்ணத்தில் உருவாகும் அழகும் மகிழ்வும்... ஈடாமோ வேறெதற்கும்? வாழ்த்துக்கள் கிரேஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தோழி...உங்கள் அழகான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி கீதமஞ்சரி!

   நீக்கு
 5. அருமை ஒரு விழாக்கால கிளர்வு கவிதையில் ரொம்ப ஜோர்
  மெரி கிறிஸ்துமஸ் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மது. உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

   நீக்கு
 6. சகோதரிக்கு வணக்கம்..
  திட்டங்களைக் கவியாய் தந்த விதம் அருமை சகோதரி. அருகில் ஒரு நன்னாள் கிருஸ்துமஸ். தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் முன்கூட்டியே நல்வாழ்த்துக்கள் சகோதரி. பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே! உங்கள் இனிய கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி! உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

   நீக்கு
 7. கவிதையும் கைவினைப் பொருட்களும் அழகு கிரேஸ்!!

  பதிலளிநீக்கு
 8. கிரேஸ் நல்லா இருக்கீங்களா?

  திருவிழா கலைகட்ட ஆரம்பிடுச்சி... வாழ்த்துக்கள்...

  நல்ல கவிதை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக இருக்கிறேன் வெற்றிவேல், நன்றி! நீங்க எப்படி இருக்கீங்க?
   வாழ்த்துக்கும் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 9. மார்கழி மாதம் வந்தாலே மகிழ்ச்சிதான். விழாகால வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 10. வணக்கம்

  ஏசு பிறப்பை ஏதிர்நோக்கும் இக்கவிதை
  வீசும் இனிமை விரித்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 11. எங்காத்துல ஒரு கிரிஸ்த்மஸ் ட்ரீ வச்சிருக்கோம். நெஜம்மாத்தான். கிரிஸ்த்மஸ் அன்னைக்கு சாண்டா க்ளாஸ் வந்து ப்ளாக் ஃப்ரைடே அன்று "நல்ல சேல்" ல நாங்க காலையில் எழுதுபோய் வாங்கி வச்சிருக்க கிஃப்ட்டை எல்லாம் எடுத்து அவர் கொடுக்கிமாரி விநியோகம் செஞ்சி "க்ரிடிட்" வாங்கிக்குவார்! :)

  I love giving gifts rather than getting gifts. So, we "celebrate" Christmas for that reason! :)

  உண்மையைத்தான் சொல்றேன் கிரேஸ்- உங்ககிட்ட இதைச் சொல்லி நல்ல பெயர் வாங்குறதுக்காக அல்ல! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது வருண்...சாண்டா பரிசு கொடுப்பதில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி பலமடங்கு அல்லவா? :)
   நம்பாமல் என்ன? கிருஸ்துமஸ் வாழ்த்துகள்!

   நீக்கு
 12. நலமா சகோதரி ? தங்களது கைவினைகளை காண ஆவலாய் உள்ளேன்.

  தங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம்தான் சகோதரி. பிள்ளைகளின் பள்ளி விழாக்கள் அவர்களுக்கு சிறு உடல்நலக் கோளாறுகள் என்று வலைப்பக்கம் வரமுடியவில்லை.
   மிக்க மகிழ்ச்சி, கண்டிப்பாகப் பகிர்கிறேன்.
   உங்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! :)

   நீக்கு
 13. உங்களின் விழாக்கால கிளர்வு ... கவிதையில் தெரிகிறது...

  இனிய நத்தார் வாழ்த்துக்கள்...(நானும் பார்த்தேன் அர்த்தம் கிருஸ்து பிறப்பு நத்தார் என்றும் அழைக்கபடுகிறது என்பது இன்று தான் எனக்கு தெரியும்)
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் ...

  விழாகால கவிதை இப்போ http://thaenmaduratamil.blogspot.com/ இல் பகிர அனுமதி உண்டுதானே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மது! ஆமாம், நானும் இளமதி அவர்களின் பின்னூட்டம் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.
   பிள்ளைகளின் பள்ளி விழாக்கள் அவர்களுக்கு சிறு உடல்நலக் கோளாறுகள் என்று வலைப்பக்கம் வரமுடியவில்லை. அதனால் உங்கள் பின்னூட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன்...தாராளமாகப் பகிரலாம்..நன்றி!
   உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் மது!

   நீக்கு
 14. https://www.facebook.com/malartharu தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்... உரிமையோடு

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்
  சகோதரி

  கவிதையும் படமும் மிக அழகு திட்டங்கள் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
  எனது புதிய தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்

  தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
  dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன். மிக்க நன்றி!
   பிள்ளைகளின் பள்ளி விழாக்கள் அவர்களுக்கு சிறு உடல்நலக் கோளாறுகள் என்று வலைப்பக்கம் வரமுடியவில்லை. சான்றிதழ் நேற்றுக் கிடைத்தது, மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி!

   நீக்கு
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...