குழம்பின மேகங்கள்

தீபாவளித் திருநாள்
திக்கு எட்டு  எங்கிலும் 
திணற வைத்த ஒளியும் ஒலியும்

என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்

ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்

மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின

மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச்  சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே 

குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே

பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள்  நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!

14 கருத்துகள்:

  1. மெய்க் கண்டறிய ஆவலுடன்
    மெல்லச் சென்றுப் பார்க்கவே
    மென்மழையைத் தூதனுப்பின
    >>
    மெய்யா!? இல்ல மெய்யா!? எதை காண!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'மெய்யாலுமே' - அந்த 'மெய்' ராஜி :)
      உங்கள் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. வணக்கம்
    தீபாவளி நினைவுகள் சுமந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. மேகங்கள் தேடிய ஒலி ஓளியை ரசித்தேன்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. //மெய்க் கண்டறிய ஆவலுடன்
    மெல்லச் சென்றுப் பார்க்கவே
    மென்மழையைத் தூதனுப்பின//

    அற்புதம் கிரேஸ் .. உங்கள் கற்பனைக்கு தான் ஏது எல்லை :)

    பதிலளிநீக்கு
  5. கவலைப்படாதீர்கள் கொஞ்ச நாட்களில் மேகத்திற்கே ராக்கெட் அனுப்புவார்கள்..இந்தியாவில் பட்டாசு வெடிக்கும் எல்லோரும் விஞ்ஞானிகள்தான்.

    பதிலளிநீக்கு
  6. தீபாவளியை சுற்றி பின்னப்பட்ட கதையாக ஒரு அற்புதமான கவிதை!

    பதிலளிநீக்கு
  7. அருமையான கற்பனை கிரேஸ்!!!

    பதிலளிநீக்கு
  8. மென் மழைத்தூது அருமை நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  9. சகோதரிக்கு வணக்கம்.
    இயற்கையை ரசித்து கவியாய் அந்த அழகு அருமை. தங்களின் கற்பனைத் திறன் கவிவரிகள் ஜொலிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள். தொடர எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றிபல!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...