ஐங்குறுநூறு 16, ஓரம்போகியார்,
மருதம் திணை - தோழி தூது வந்த பாணனிடம் சொன்னது
"ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால்
சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே"
எளிய உரை: ஓங்கி வளரும் பூக்களை உடைய நாணல் செடிகளின் உள்ளே வெறுமையாய்க் குழல் போல் இருக்கும் தடித்தக் காம்பினுள்ளே வேலை செய்யும் பெண்கள் கண்மையை வைத்திருக்கும் பூக்கள் நிறைந்ததுமான ஊரைச் சேர்ந்தவனை எண்ணி பூப்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல மஞ்சள் நிறம் போர்த்தனவே.
விளக்கம்: நாணல் செடியின் தடித்தக் காம்பு உள்ளே வெறும் குழலாய்த் திடமின்றி இருந்தது போல தலைவனும் தலைவியின் மேல்கொண்டக் காதலில் திடமில்லாமல் போனானே என்று தோழி வருந்துகிறாள். பிற பெண்களிடம் சென்ற தலைவனின் செயலால் வருந்தி அவனையே எண்ணிய தலைவியின் மலர்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல் மஞ்சள் நிறம் கொண்டதே, இப்படித் தலைவியை தலைவன் வருத்திவிட்டானே என்று சினமுற்றத் தோழி தலைவியைப் பார்க்க முடியாது என்று தூதுவந்த பாணனிடம் சொல்கிறாள்.
சொற்பொருள்: ஓங்கு பூ வேழத்து - உயர்ந்து வளரும் பூக்களை உடைய நாணல், தூம்பு உடைத் திரள் கால் - உள்ளே வெறுமையாய் உள்ள தடித்த காம்பு, சிறு தொழு மகளிர் - வேலைசெய்யும் பெண்கள், அஞ்சனம் பெய்யும் - கண்மை வைக்கும், பூக்கஞல் - பூக்கள் நிறைந்த, ஊரனை - ஊரைச் சேர்ந்தவனை, யுள்ளி - எண்ணி, பூப்போல் - பூவைப் போன்ற, உண்கண் - மையிட்ட கண், பொன் போர்த்தனவே - பொன்னைப் போல மஞ்சள் நிறம் ஆகினவே
என் பாடல்:
"உயர்ந்து பூத்த நாணலின் உள்ளீடற்றத்
தண்டினுள் கண்மை வைக்கும் பெண்கள்
உள்ளம் உடைத்தத் தலைவனின் செயலால்
கண்மையிட்டும் மஞ்சளாய்த் தலைவியின் கண்கள்"

தோழியின் மன இயல்பை இந்த காலத்தில் யாரும் விளக்குவதில்லை ஏன் தோழி என்ற ஒரு கதாபாத்திரத்தை கூட யாரும் எழுதுவதில்லை அக்கால இலக்கயத்தில் என்ன அழகாக சொல்லியிருக்காங்க பாருங்க. அதை நீங்க விளக்கிய விதமும் அதற்கு இணையாக தொடுத்த கவி வரிகளும் சிறப்புங்க. இது போன்ற பகிர்வுகளை தொடருங்கள்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மைதான் தோழி. உங்களுடைய ஆழமான கருத்துரைக்கு நன்றி சசிகலா..கண்டிப்பாகத் தொடர்வேன் உங்கள் ஊக்கத்துடன்.
நீக்குஅருமையான சிந்தனையில் மலர்ந்த தங்கள் சொந்த வரிகள்.
பதிலளிநீக்குபணி தொடர இனிய வாழ்த்து.
முதலில் நண்பர் வலையால் வந்தேன்.
இப்போது எனது ஆக்கமிடும் போது தமிழ் மணத்தில்
ஐங்குநுநூறு என்று பார்த்து வந்தேன்...சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கோவைக்கவி.
நீக்குஉங்கள் வாழ்த்திற்கும் நன்றிபல!
அர்த்தம் துளியும் மாறாமல்
பதிலளிநீக்குஅற்புதமாகக் கொடுத்த படைப்பு
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்கள் மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!
நீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குஇலக்கியத்தியதை விளங்கிக்கொள்ளவும்
பதிலளிநீக்குஅதற்கு இணையாகக் கருத்துபிழை ஏற்படாமல்
இலகு தமிழ்ச் சொற்களில்
பாவியற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல...
அத்தனை அருமையாக உள்ளது நீங்கள் தந்த விளக்கமும் கவிதையும்.
உங்கள் திறமைக்கு ஒரு சான்று இது!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.3
உங்கள் மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி. மேலும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் கருத்துரை பார்த்து உவகை அடைந்தேன். உளமார்ந்த நன்றி தோழி!
நீக்குஅருமையான பாடல் வரிகள்..!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையான பாடலுக்கு அருமையான விளக்கம் பதிவு நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சகோதரிக்கு வணக்கம்..
பதிலளிநீக்குபொருள் மாறாத ஐங்குறுநூறு பாடலுக்கு ஒத்த அற்புதமான கவிதையை படைத்த விதம் வியக்க வைக்கிறது அதே சமயம் மிக பெருமையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோதரி. (இணையக் கோளாறு காரணமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை)
வணக்கம் சகோதரரே!
நீக்குஉங்கள் மனமார்ந்த பாராட்டிற்கும் கருத்திற்கும் மனக்கனிந்த நன்றிகள்!
அழகான பாடல். அதை எளிய தமிழில் சொன்ன உங்கள் கவிதை அருமை.... தொடரட்டும் பகிர்வுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்!
நீக்குஅருமை... அருமை... சங்க பாடலுக்கு எளிய வடிவம் கொடுக்கும் தங்கள் திறன் வியக்கதக்கது.. நன்றிகள் பல பல !!
பதிலளிநீக்கு:) நன்றி ஸ்ரீனி!
நீக்குநல்ல பணி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
தொடர்க ...
மிக்க நன்றி மது!
நீக்குசிறப்பான விளக்கம் அக்கா...
பதிலளிநீக்கு