"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."
என்று சொல்லிய அன்புத் தலைவியே கேள்
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே, எனக்கு எதுவென்றால்
ஓங்கு மலையில் தேனாய் இனிக்கும்
மென்புல வைப்பின் நாட்டில் புதுப்புனலாய் பொழியும்
தண் துறை ஊரில் கரும்பாய் இனிக்கும்
பெருங்கடல் நாட்டில் முத்தாய் இமைக்கும்
பாலை மலரும் கோங்கம் போலப் பொன்னாய் மின்னும்
ஐந்து திணையிலும் ஒளிவீசும் தமிழே!
அதனால் அன்புத் தலைவியே,
உன் நட்பை விட உயர்வு என் நட்பே!
ஓங்கு மலை - குறிஞ்சி நிலம்
மென்புல வைப்பின் நாடு - முல்லை நிலம்
தண் துறை ஊர் - மருத நிலம்
பெருங்கடல் நாடு - நெய்தல் நிலம்
கோங்கம் - cochlospermum gossypium or yellow cotton tree
"நிலத்தினும் பெரிதே..." என்று துவங்கும் குறுந்தொகைப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் நேற்று என் மனதில் சற்றுத் திரிந்து சங்கப் பாடல்கள் மேலான என் காதலை இணைத்து இக்கவிதை எழுத வைத்தது.
ஆக சங்கம் கூறும் ஐந்து திணைக்கும் மேலே அப்பாற்பட்டது என் காதல் அல்லவா? ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா? :)

கோங்கம் |

//ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா? :)//
பதிலளிநீக்குகிரேஸ், நீ வளர்த்தி வைத்து பேசலையே? Just Kidding..அருமையான கவிதை கிரேஸ்..தினமும் அருமையெனு சொல்லி போர் அடிக்குது.. வேற ஏதாவது வார்த்தை சங்க இலக்கியத்தில இருக்கானு பார்த்து சொல்லேன்..
தியானா, தலைவன் நான் சொன்னது தமிழை :)...சிறு குழப்பம் இருந்த காரணத்தால்
நீக்கு"அதனால் அன்புத் தலைவியே" என்ற வரியைச் சேர்த்து விட்டேன்..நன்றி நன்றி :)
தமிழைத் தலைவன் என்று நான்தான் முதலில் சொல்லியிருக்கிறேனோ தெரியவில்லை...பாட்டோடு இணைக்க அப்படி சொல்லிவிட்டேன்..தவறென்று சான்றோர் சொன்னால் என் பாட்டை தலைவன் கூற்றாக மாற்றிவிட வேண்டியதுதான்:)
வார்த்தையில் என்ன இருக்கிறது..பாராட்டு தானே முக்கியம் :)
சூப்பர் கிரேஸ்.. பல புதிய சொற்களையும் தெரிந்து கொண்டேன்..
பதிலளிநீக்கு//ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா? :)// - அழகு :)
நன்றி நன்றி ஸ்ரீனி!
நீக்குஇனிக்கிறது ஐயா இனிக்கிறது....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக மிக நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
நீக்கு//ஐந்து திணைகளின் தலைவர்கள் யாவருக்கும் மேலாய் என் தலைவன் அல்லவா//
பதிலளிநீக்குஒ அப்படியா கலக்கல்
நன்றி திரு.பிரேம்
நீக்கு