புத்தகம்


சத்தமில்லாமல் 
பல தகவல் சொல்கிறான் 
சீராகச் சிந்திக்க வைக்கிறான் 

ஆர்ப்பாட்டமில்லாமல் 
சிலநேரம் அழ வைக்கிறான் 
சிலநேரம் சிரிக்க வைக்கிறான்

காலநேரமில்லாமல் 
எப்பொழுதும் எனக்காக இருக்கிறான் 
பிரிந்தாலும்  எனக்காகக் காத்திருக்கிறான் 

எதிர்பார்ப்பில்லாமல் 
எனக்காகப் பக்கம் துடிக்கும்  
அன்புக் காதலன் ..

புத்தகம்!



12 கருத்துகள்:

  1. அருமையான கவிதை கிரேஸ்.. நான் எழுதி இருந்தால் இன்னொரு வரியையும் சேர்த்து இருப்பேன் "சிலநேரம் தூங்க வைக்கிறான் :-)".. ஹா ஹா !!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் காதலனை எல்லோரும் காதலிக்க வேண்டும்...

    சூப்பர்...

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் உங்களை கவிபாட வைக்கிறான்......

    பதிலளிநீக்கு
  4. Grace, if you haven't given the title as book, I would have guessed your lover as a different person. As usual nice poem and the flow is also good.. --Dhiyana

    பதிலளிநீக்கு
  5. அன்பின் கிரேஸ் - புத்தகம் பற்றிய கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...