உலக முடிவு வரை

உயிருக்குயிராய் நேசித்தேன் என்னவளை 
அவளும் அப்படியே சொன்னாள் 
அது மட்டுமா சொன்னாள்?
சூரியன் இருக்கும் வரை, சந்திரன் இருக்கும் வரை 
உலக முடிவு வரை 
நேசிப்பேன் என்று சொன்னாள்

உள்ளம் குளிர மனம் மகிழ 
அவ்வளவு நேசமா என்று பூரித்தேன் 
சூரிய சந்திரனின் வாழ்வு சிலநாள் என்று 
அவள் நினைத்தது புரியாமல்!
உலக முடிவு அருகில் என்று 
அவள் நினைத்தது தெரியாமல்!

12 கருத்துகள்:

  1. பாருங்க... எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  2. ஐயோ பாவம்...கடவுளே !!!!பொண்ணுங்க ஏமாத்தற மாறியே கவிதை எழுதறது இந்த பசங்க எப்ப தான் நிறுத்துவாங்க ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா, நான் ஒரு பெண்தான்! எழுதிய பிறகு தோன்றியது என்னவளை என்னவன் என்று மாற்றி விடலாமா என்று..ஆனால் விட்டு விட்டேன்..

      நீக்கு
  3. haha.. same side goalnugaruthu ithu dhaanoo :-).. arumaaiyana karppanai Grace :)

    பதிலளிநீக்கு
  4. சொன்ன சொற்களும்
    சூரிய சந்திரர்கள் போல ஆயிற்றே...

    பதிலளிநீக்கு
  5. //உலக முடிவு அருகில் என்று
    அவள் நினைத்தது தெரியாமல்!/ இங்க தான் வைச்சீங்க ட்விஸ்ட்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் கிரேஸ் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் - காதலில் எசரிக்கையுடன் இருக்க வேண்டும் - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், இருபாலாருக்கும் பொருந்தும் கருத்து. நன்றி சீனா அவர்களே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...