நட்பிற்கு இடைவெளி உண்டோ?

 ஒன்றாய்ச் சிரித்து
ஒன்றாய்ப்  படித்து
வெவ்வேறு திசைகளில்
சிறகு விரித்த நட்புள்ளங்கள்

ஆண்டு பலகடந்து சந்தித்தாலும்
இடைவெளி எதுவும் உணருவதில்லை
தயக்கம் எதுவும் தலைக்காட்டுவதில்லை
பழைய நினைவுகள் இனிதாய் மலர

நேற்றுப்  பிரிந்து இன்றே  சேர்ந்தது  போலக்
குதூகலித்தே உரையாடுவர்
ஆண்டுகளில் கடந்த நிகழ்வுகள்
எளிதாய்ப் பரிமாறி மகிழ்வர்

பழைய நிகழ்வுகளை நினைந்து 
முத்துகள் சிதறியதைப் போலச் சிரித்து
மகிழ்ந்து அன்பாய்க் கூடும்
நட்பிற்கு இடைவெளி உண்டோ?

12 கருத்துகள்:

  1. அருமை...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      வலைச்சர செய்திக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுடைய தொடர் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி!

      நீக்கு
  2. ஆஹா.. அற்புதமா சொல்லி இருக்கீங்க கிரேஸ்
    //நேற்றுப் பிரிந்து இன்றேச் சேர்ந்ததுப் போலக்
    குதூகலித்தே உரையாடுவர்// - மிக மிக சரி.. எனக்கு நிறைய தடவை நடந்து இருக்கு :-)


    பதிலளிநீக்கு
  3. அன்புச் சகோ கிரேஸ்!

    நட்புக்கு ஏது எல்லை
    நட்புக்கு ஈடுஇல்லை
    நட்பே வாழ்வின் உண்மை
    நட்பே இணைத்ததெம்மை.....

    வலைச்சரத்தில் அறிமுகமாகி நட்புச்சரத்தில் இணைந்தோமிங்கு.

    நல்ல கவி படைத்திருக்கின்றீர்கள். அருமை.வாழ்த்துக்கள்!

    அங்கு உங்கள் வரவினை என் முந்தைய பதிவில் நீங்கள் கருத்துரை இட்டதை இப்பொழுதுதான் கண்டேன். மிக்க நன்றி சகோ...
    தொடரட்டும் நம் நட்பு. இனிய வாழ்த்துக்கள் மீண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நட்புச் சரத்தில் இணைந்த
      இளைய நிலாவே
      வருக வருக
      தொடர்வோம் இனிதாய் நட்பை!

      கவி மட்டும் அல்ல கலையும்
      அழகாகச் செய்கிறீர்கள் , வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. உண்மை கிரேஸ்.. உன்னுட‌னும் ந‌ம் தோழியுட‌னும் பேசிய‌து ம‌கிழ்ச்சி..ஆனால் கெரிடிட் எங்கே?

    பதிலளிநீக்கு
  5. உணர்வுகள் கவிதை வரிகளில்

    நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு உளமார்ந்த நன்றி மது!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...