இங்கிவர்களை நான் பெறவே என்ன தவம் செய்தேன்

திருக்குறள், ஆத்திசூடி என்று தமிழ் நூல்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எனக்குப் பிடித்தமானது. அவசியம் என்றும் கருதுகிறேன். பேசும்பொழுது என் உச்சரிப்பைப் போல் இருந்தாலும் திருக்குறள் சொல்லும்பொழுது உச்சரிப்பு சரியாகக் கொண்டுவருவது கடினமானதாக உள்ளது. தூய தமிழ் பிள்ளைகளுக்கு புரிவது கடினமாகவே இருக்கிறது. சரி, 8 மற்றும் 4 வயதுதானே ஆகிறது, பெரிதாகும் பொழுது புரியும் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு எப்பொழுது நன்றாக புரிய ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. சரி, முன்னுரை போதும். விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் பள்ளி முடிந்து வந்த என் பெரியவன், "அம்மா, என் நண்பன் ஒரு விசயம் சொன்னான். அது சரிதானா என்று சொல்லுங்கள்" என்று விசயத்தைச் சொல்லிக் கேட்டான். நானும் ஆமாம் என்று சொன்னேன். அதற்கு அவன், "நீதானே எந்த விசயம் யார் சொன்னாலும் உண்மைதானா என்று அறிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தே, அதான் கேட்டேன்" என்றான். எதைப் பற்றி அவ்வாறு சொன்னான் தெரியுமா?

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சரி, சொல்லிக்கொடுப்பது பதிந்திருக்கிறது என்று மகிழ்ந்தேன்.

சரி, என் சிறியவனுக்கு பாரிசில் உள்ள "ஈபிள் டவர்" மிகவும் பிடிக்கும். எப்படி அதைப் பிடித்தான் என்று தெரியாது, ஆனால் அது மாதிரி பிளாக் வைத்துக் கட்டுவது, வரைவது, அது மாதிரி கால்களை விரித்து கைகளை உயரே தூக்கி சேர்த்து "இப்படி தான் ஈபிள் டவர் இருக்கும் என்று சொல்வது எல்லாம் செய்வான். நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பது அவனது விருப்பம். நேற்று என்னிடம் கேட்டான், "அம்மா, பாரிஸ்ல இங்கிலீஷ் பேசுவாங்களா"? நான் சொன்னேன், " இல்லடா, பிரெஞ்சு பேசுவாங்க." அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? "நான் போய் தமிழ் பேச வச்சுருவேன். அப்புறம் பாரிஸ்ல தமிழ் தான் பேசுவாங்க."

இங்கிவர்களை நான் பெறவே என்ன தவம் செய்தேன்!

10 கருத்துகள்:

  1. அட.. அட.. அருமை.. அருமை... மெய் சிலிர்கிறது. உங்க இரத்தமாச்சே.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? :-)

    பதிலளிநீக்கு
  2. சிறு குழந்தைகளுக்கு மனதில் எதுவும் எளிதில் பதியும்... பதிக்க தான் வேண்டும் நல்லவற்றை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  3. அன்பின் கிரேஸ் - குழந்தைகள் நாம் சொல்லும் அறிவுரைகளை அப்படியே பின் பற்றுவது குறித்து மகிழ்வோம். பெற்ற்வருக்கு இது தான் இன்பம் - நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. இனிமையாக உள்ளது பதிவு.
    நல்லது நடக்கட்டும்.
    வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  5. அழகாய் ,இயல்பாய் வளரும் இளைய தலைமுறை.... வாழ்த்துக்கள் கிரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...