கடற்கரை


நுரைக்கும் வெள்ளியைக்  கொலுசாய் அணிவிக்க
காலை வருடும் அலைகள்
அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
புதையச் செய்யும் மணல்

பனை விசிறிகள் விசிறுவது போல
இதமாய் குளிர்விக்கும் தென்றல்
நாங்களும் இருக்கிறோம் என்று சொல்ல
கானம் பாடும் கடற் காக்கைகள்

வானவில்லைப் பிரித்து கவிழ்த்ததுப் போன்ற
வண்ண வண்ணக் குடைகள்
பாரபட்சம் இல்லாமல் பலதரப்பினர்  கட்டிய
பலவித மணல் கோட்டைகள்

திருவிழாவில்  களிப்பூட்டும் கழைக்கூத்தாடியைப் போல
காற்றில் இடமும் வலமும்  ஆடும் வண்ணப் பட்டங்கள்
இந்தக் காட்சிகளை எல்லாம் வானோடு 
கைசேர்த்து ரசித்துப் பார்க்கும் கடல்!

14 கருத்துகள்:

  1. //அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
    புதையச் செய்யும் மணல்// - ஆஹா .. என்ன ஒரு கற்பனை... ரசித்தேன் :-)

    பதிலளிநீக்கு
  2. அழகனா உவமைகளுடன்
    செவ்வனே தொடுக்கப்பட்ட
    இனிய கவிதை...
    அருமை...அருமை...

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் இருக்கிறோம் என்று சொல்ல
    கானம் பாடும் கடற் காக்கைகள்//காக்கையும் காணமப் வைத்தமை அருமை

    பதிலளிநீக்கு
  4. அலையில் நிற்கும் போது நீங்கள் சொல்லும் அனைத்தும் தோன்றும்...

    அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ரம்மியமான சூழல் அது!

      பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  5. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
    காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்திற்கு வருகை தந்து பதிவுகளைப் படித்து வலைச்சரத்தில் நல்லதொரு விமர்சனமும் கொடுத்திருக்கிறீர்கள். வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி திரு.அரசன் அவர்களே!
      மகிழ்ச்சி!

      நீக்கு
  6. அன்பின் கிரேஸ் - அருமையான கவிதை - கடற்கரையில் நின்று கவனித்து இரசித்து கவிதை எழுதியமை நன்று - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனா அவர்களே!

      நீக்கு
  7. அருமை கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...