Saturday, August 8, 2015

உள்ளதில் நீயுமடா



காடழித்துக் கானகம் நாடாக்கி
நாகரிக மனிதன் நானென்று  
மார்தட்டி மயங்கும் மனிதா பார்
மார்புவற்றிப் பூமித்தாய் தவிப்பதை



பிள்ளைபல இழந்து விட்டேன்
உள்ளதைக் காக்க வழியுண்டோ
என்றவள் ஏங்கித் துடிக்கிறாள்
உள்ளதில் நீயுமடா மனிதா

30 comments:

  1. உள்ளதைக் காக்க வழியுண்டோ
    என்றவள் ஏங்கித் துடிக்கிறாள்
    அருமை சகோதரியாரே அருமை
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகை :)) மகிழ்ச்சி அண்ணா.
      கருத்துரைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு சகோ நாளை அனைத்து மனிதனிடமும் பணம் இருக்கும் ஆனால் உணவு ?
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. அதப்பத்தி நமக்கு என்ன? இன்று எனக்கு இருக்கில்ல?
      இப்படிப்பட்ட எண்ணம் தான். :-(

      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ

      Delete
  3. அப்படி கேளுங்க சகோதரி... அருமை...

    ReplyDelete
  4. தாயின் தவிப்பை புரிந்திட்டாய் எம்பாயும்
    நோயினில் வீழ்ந்திடுமே நொந்து !

    தேனு வேதனையாகவே உள்ளது. அருமைம்மா! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அருமையான பா இனியா
      ஆமாம், இங்கு என் வீட்டருகே ஐம்பது ஏக்கர் மரங்கள் வெட்டி இடம் தயார் செய்யப்படுகிறது வீடுகள் கட்டுவதற்கு. :-(
      நன்றி இனியா

      Delete
  5. வாவ்! என்ன ஒரு அருமையான வரிகள்! சிறியதாய் பெரிய கருத்து..ஒன்றைச் சொல்லி விட்டீர்கள்! அருமை சகோ!!!

    ReplyDelete
    Replies
    1. இனிய அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோ

      Delete
  6. Replies
    1. உன் வரவு
      என் மகிழ்வு
      நன்றி இனிய தோழியே

      Delete
  7. வணக்கம்
    சகோதரி
    கேட்ட கேள்விகள் நன்றாக உள்ளது.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  8. அருமை.

    நாளை பற்றி கவலை இல்லாது பூமித்தாயை பாழ் படுத்திக் கொண்டிருக்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  9. கானகம் அழித்து கானல் நீர் காட்சியாக்கி விட்டார்கள்! அருமையான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. கானகம் அழித்துக் கானல் நீர்காட்சி - அருமை சகோ
      கருத்திற்கு நன்றி

      Delete
  10. மனித இனம் தனக்கும் சேர்த்துத் தான் அழிவைத் தேடிக் கொள்கின்றது..

    ஆனால் - யாராவது கேட்பார்கள் - என்கின்றீர்கள்!?..

    ReplyDelete

  11. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    ReplyDelete
  12. நம்மை நாமே தின்றுகொண்டு இருக்கிறோம். வேதனையே.
    தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  13. நிகழ்வை நின்று காண்பாரும் இல்லை
    கேட்பாரும் இல்லை.
    நல்ல விழிப்புணர்வுக் கவிதை தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. இன்று நமக்கு இருக்கு நாளை ?
    மனிதன் விழித்துக் கொள்ளவேண்டும்.
    அருமையான கருத்தைச் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வணக்கம்,
    மார்பு வற்றி பூமித்தாய் ,,,,,,,,
    அருமையான வரிகள்,
    உண்மை தானே,,,
    நன்றி.

    ReplyDelete
  16. அருமையான கேள்வி சகோதரி.

    ReplyDelete
  17. சூப்பர் கிரேஸ் ...

    ReplyDelete
  18. தாமத வருகைக்கு மன்னிக்கவும் பா.
    படமும் பாடலும் சிந்திக்க வைத்தது.
    சிந்திக்கவும் நேரமின்றி ஓடும் மானுடம்.

    ReplyDelete
  19. ஒரு தாயின் வேதனை... உணர்ந்து திருந்துவோர் எத்தனைப் பேரோ?

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...