Friday, July 31, 2015

அப்துல் கலாம் அஞ்சலி


வானூர்தியைப் பார்த்து வியந்து நின்றீர்
வானம் தாண்டியும் முத்திரைப் பதித்தீர்
வாழும்பூமி காக்க வாலிபரை ஊக்குவித்து
வாழ்ந்தது போதுமென்று எங்கே சென்றீர்?கனவிற்கு புது இலக்கணம் கொடுத்தீர் 
கனவுபல இலட்சியமாக்கி எங்கே சென்றீர்
நீர் விதைத்த விதைகள் துளிர்க்கும்
இருந்து பார்க்காமல் எங்கே சென்றீர்?
இமயம் முதல் குமரி வரை
இதயம் கனக்க அழும் மக்கள்
அன்புள்ளம் படைத்த நீர் இதை
அனுமதித்து எங்கே சென்றீர்?


சகல மக்களின் மனங்கள் மட்டுமல்ல
சமூக தளங்களும் உன்நினைவால் நிறைய
சமூகத்தைக் கண்ணீரில் ஒன்றாக்கி
சிறந்த மனிதரே எங்கு சென்றீர்?


உம்மைத் தேடும் மாணவர் தவிக்க
உறங்கநீர் சென்றுவிட்டீர் உள்ளம் கலங்கினும்

உம்  கனவை நிறைவேற்றுவோம்

அமைதியில் இளைப்பாறும் ஐயா

அட்லாண்டா மாநகர் தமிழ்ச்சங்கம் சார்பாக ஜூலை 30ஆம் நாள் மேதகு டாக்டர் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு நான் வாசித்த கவிதை.22 comments:

 1. எங்கும் செல்லவில்லை. அவர் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம், உண்மைதான்.
   உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 2. எனது நூலைப் பாராட்டி அவர் எழுதிய கடிதம் எனது இல்ல நூலகத்திலும், அலுவலக மேசையிலும் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது. நான் பாதுகாக்கும் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம என்பதே நமக்குப் பெருமை.

  ReplyDelete
  Replies
  1. இதைவிட உங்களுக்கு வேறு எவரின் பாராட்டுக்கள் வேண்டும் சார்...நமது பதிவரும் இப்படி ஒரு அவார்ட் வாங்கி இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமைதான்

   Delete
  2. பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விசயம் ஐயா. வாழ்த்துகள் உங்களுக்கு.
   சகோ சொல்வது போல எங்களுக்கும் பெருமையும் மகிழ்ச்சியும்.

   Delete
  3. ஐயா! எவ்வளவு பெரிய விருது அது! வாழ்த்துகள்! பாராட்டுகள்! நாங்கள் பெருமைப்படுகின்றோம் ஐயா....

   Delete
 3. அவரின் கனவை நனவாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்...

  ReplyDelete
 4. மகத்தான மனிதருக்கான அஞ்சலிக் கவிதை அசத்தல் தேனு ! அவர் ஆத்மா சாந்தியடைய பிறரார்த்திப்போம்.

  ReplyDelete
 5. அட்லாண்டா தமிழ் கவிஞர் கிரேஸ் அவர்கள் எழுதிய அஞ்சலிக் கவிதை அருமை பாராட்டுக்கள் கவிஞரே

  ReplyDelete
  Replies
  1. ஆஹா!! சகோ உங்கள் அன்பும் ஊக்கமும் பெரிது..நான் இன்னும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
   மிக்க நன்றி சகோ

   Delete
 6. வணக்கம்

  மாமனிதருக்கு சிறப்பு படைக்கும் கவிதை அஞ்சலி

  ( இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் ! )

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   கருத்திற்கு மிக்க நன்றி. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

   Delete
 7. Wow excellent Grace, மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாவ்! வாவ்! உன் வருகை மகிழ்ச்சி, கருத்து அதைவிட மகிழ்ச்சி லாவண்
   நன்றி :)

   Delete
 8. மாமனிதருக்கு சிறந்த கவிதாஞ்சலி..

  ReplyDelete
 9. அப்துல் கலாம்! வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத மகாத்மா !அவருக்கான
  இந்தக் கவிதையும் மனதை நெகிழ வைத்தது நன்றி தோழி .

  ReplyDelete
 10. கவிதை அருமையாக இருக்கிறது கிரேஸ்...
  வாழ்த்துக்கள்
  தம +

  ReplyDelete
 11. அமைதியான கவிதாஞ்சலி! அட்லாண்டாவிலும் தொடரும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி.
  த.ம.5

  ReplyDelete
 12. சகோதரி அவரது கனவை நாம் நனவாக்குவோம்! அதுதான் நாம் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை! அவர் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்கின்றார். விதை ஊன்றப்பட்டுவிட்டது.....முளைக்கவும் தொடங்கிவிடும்....ஆலமர விருட்சமாய்...

  ReplyDelete
 13. கவிதை அருமை சகோதரி! எங்கள் எல்லோரது உள்ளப் பிரதிபலிப்பும்....

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...