மூளையின் கதை - பாகம் 4

ஆயிரம் துண்டுகளாக இருக்கும் ஒரு படத்தைச் சரியாக ஒன்றாக்கித் தாருங்கள் என்றால் சரி என்று முயற்சிப்பீர்கள். ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்யுங்கள் என்றால்? 13 கணப் பொழுதில் (மில்லி செகண்டில்) செய்யுங்கள் என்றால்?

அதைத் தான் நம் மூளை நாம் காணும் ஒவ்வொரு காட்சிக்கும் செய்கிறது.

முந்தையப் பதிவுகளைப் படிக்க,
மூளையின் கதை - பாகம் 1
மூளையின் கதை - பாகம் 2
மூளையின் கதை - பாகம் 3

கண்ணால் பார்க்கிறேன், கண்ணால் பார்க்கிறேன் என்று சொல்கின்றோமே. அந்தக் கண்ணால் மட்டும் பார்ப்பதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? வெளியிலிருந்து ஒளி வடிவங்களை கண்கள்  மூளைக்கு மின்னதிர்வுகளாக அனுப்புகின்றன. அவற்றை வண்ணம், வடிவம், இயக்கம் என்று ஆராய்ந்து ஒன்று சேர்த்து நாம் காணும் காட்சியாகக் கொடுப்பது மூளையின் சில நரம்பணுக்கள்.
 நரம்பணுக்கள் நாம் வாசிக்கும் வார்த்தைகளைப் படங்களாகப் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தான் சிறு குழந்தைகள் கூட வார்த்தைகளைக் கண்டு பிடிக்கிறார்கள், வாசிக்கத் தெரியாமலேயே. வார்த்தைகள் தவறாக எழுதியிருந்தாலும் நாம் அதைச் சரியாகப் படித்துவிடுவது இதனால் தான்.
இதுபோலவே பரிச்சயமான முகங்களையும் நம்மால் இனம் கண்டுகொள்ள முடிகிறது. இந்த இரண்டும், மூளையின் இருவேறு பகுதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. வார்த்தைகளை அடையாளம் காண மூளையின் இடது பக்கமுள்ள பூசிபார்ம் கைரஸ் (fusiform gyrus) உதவுகிறது. மூளையின் வலது பக்கமுள்ள பூசிபார்ம் கைரஸ்முகங்களை அடையாளம் காண உதவுகிறது. இதன் உதவியாலேயே மங்கலாக உள்ள படங்களிலும் முகங்களை அடையாளம் காண நம்மால் முடிகிறது.


சரி, வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு வருவோம். வார்த்தைகளின் ஒலிகளுக்கேற்ப அவற்றை எழுதவும் வாசிக்கவும் கற்பிக்கப்பட்டுள்ளோம். (phonological recognition). ஆனால் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவமையம் (Georgetown University Medical Centre GUMC) நடத்திய ஆய்வில், நரம்பணுக்கள் வார்த்தைகளைப் படங்களாகப் பதிவு செய்வதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் இருபத்தைந்து நபர்களுக்கு அறிந்த அர்த்தமுள்ள வார்த்தைகளை வாசிக்கச் செய்தும், அர்த்தமற்ற புதிய  வார்த்தைகளை வாசிக்கச் செய்தும், அதே அர்த்தமற்ற வார்த்தைகளை சிறிது படித்ததற்குப் பிறகு வாசிக்கச் செய்தும், மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஸ்கேன் மூலம் பார்த்தனர். இதில் அர்த்தமற்ற வார்த்தைகளை முதலில் வித்தியாசமாக உணர்ந்த நரம்பணுக்கள், அதே வார்த்தைகளைப் படித்த பின்னர் அவற்றை சரியான வார்த்தைகளைப் போலவே உணர்ந்தனவாம். இந்த ஆய்வு வாசித்தல் குறைபாடு, குறிப்பாக எழுத்தறிவு குழப்பம் (dyslexia) உள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு உபயோகமாகும் என்று கருதுகின்றனர்.

கண்ணோடு சேர்ந்து காண்பதற்கு உதவுவதைப்  போலவே நம் தோலோடும் தசையோடும் இணைந்து உணர்வுகளைத் தருகிறது மனித மூளை. சொமோடோ சென்சரி கார்டெக்ஸ் (somoto sensory cortex) என்னும் மூளையின் மேற்பகுதி உடம்பு முழுவதிலுமிருந்து வரும் தொடுஉணர்ச்சிகளை உணர்ந்துகொள்ள உதவுகிறது. கூர் உணர்வுடைய (sensitive) உடம்பின் பாகங்களுக்கு, அதாவது கை மற்றும் உதட்டிற்கான சென்சரி கார்டெக்ஸ் பகுதி பெரியதாகவும் அதிக நரம்பணுக்கள் உடையதாகவும் இருக்கும். மாறாக மணிக்கட்டு, தோள் போன்ற குறைந்த உணர்வுடைய பாகங்களுக்கு சொமோடோ சென்சரி கார்டெக்ஸ் பகுதி சிறியதாகவும் குறைந்த நரம்பணுக்கள் உடையதாகவும் இருக்கும்.



ஸ்பீக்கர் ஆன் செய்து படத்தின் மேல் மௌஸைக் கொண்டு செல்லவும்

மழையை ரசித்து விட்டிர்களா? இப்பொழுது மழை எங்கிருந்து வந்தது என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.


மனித மூளை நம் உணர்வுகளை ஒன்று சேர்த்து நம்மைச்சுற்றியுள்ளவற்றைத்தீர்மானிக்கிறது. மழைபொழியும் படத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டதால்  மழையோசை போல இருப்பது உண்மையில் வறுக்கப்படும் உணவுப் பொருள்.

மேலே சொல்லியிருக்கும் படத்தோடு மூளையின் உணர்தலுக்கான காணொளி இணைப்பு.


மூளையின் கதை தொடரும் ...

34 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. நரம்பணுக்கள் என்னவெல்லாம் செய்கிறது... ஆச்சரியம்...!

    மழை எங்கிருந்து வந்தது... அட....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித் தான் படங்களில் சவுண்ட் எபக்ட்ஸ் கொடுக்கிறார்கள்..
      நன்றி அண்ணா

      நீக்கு
  3. கருத்திட வரும் நண்பர்களுக்கு : // படத்தின் மேல் மௌஸைக் கொண்டு செல்லவும் // அதற்கு முன் Speaker On...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குத்தான் டிடி அண்ணா வேணும்கிறது :)
      ரொம்ப நன்றி அண்ணா.பதிவிலும் மாற்றிவிடுகிறேன்.

      நீக்கு
    2. படத்தின் மீது மௌஸைக் கொண்டு சென்றவுடன், சற்றும் முற்றும் திரும்பியும், வெளியிலும் பார்த்தேன்... அட...! அருமையான தொழிற்நுட்பம்... தங்களின் சம்மதத்தோடு எனது பதிவுகளில் பயன்படுத்திக் கொள்ளலாமா...?

      நீக்கு
    3. கண்டிப்பா அண்ணா..நீங்க கேக்கணுமா என்ன?

      நீக்கு
  4. அறிவியலிலும் அசத்துகிறீர்கள் தோழி!
    புதிய தொழில் நுட்பங்கள்!.. புகுந்து விளையாடுகிறீர்கள்!

    ஆச்சரியம்! அருமை! சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகையே மகிழ்ச்சி தோழி, கருத்தும் இட்டால் பன்மடங்கு மகிழ்ச்சி!

      மனம் நெகிழ்ந்த நன்றி தோழி

      நீக்கு
  5. நல்ல தகவல்..
    படத்தின் மீது மௌசை நகர்த்தியதும் மழையில் நனைந்தேன்...
    அட பொரிக்கும் சத்தமா? சூப்பர்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல் மூளையைப் பற்றி! ஸ்பெஷல் குழந்தைகளுக்குக்கான மூளைத்திறன் பற்றியும் வாசித்ததுண்டு. நீங்கள் மிக அழகாகத் தமிழில் சொல்லி வருகின்றீர்கள் கஹ்கோதரி. தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  7. அறியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ஒரு சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்து மட்டும் சரியான இடங்களில் இருந்தால் போதும். இடையில் இருக்கும் எழுத்துக்கள் எங்ஙனம் இடம் மாறியிருந்தாலும் சரி. நம்மால் அந்த வார்த்தைகளை எளிதாக கண்டுபிடித்து வாசித்து விட முடியும். இந்த தகவலை பல முறை முகநூலில் படித்ததுண்டு.

    பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இத்தொடர் மூலம் பல புதிய தகவல்களை அறிந்து கொள்கிறேன். மனமார்ந்த நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வார்த்தைகளை நம் மூளை ஏற்கெனவே சேமித்து வைத்திருப்பதால்..

      மிக்க நன்றி தோழி

      நீக்கு
  8. தொழில் நுட்பத்திலும் தங்களுக்கு இவ்வளவு திறமை இருப்பது கண்டு வியந்து நிற்கின்றேன் தோழி !வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வலைத் தளத்தில் ஒருவர் இவ்வாறு இருப்பது அது என்னவோ தெரியவில்லை கூடப் பிறந்தவர்கள் வெற்றி
    காண்பது போல் தோன்றும் எனக்கு ! இந்த சொந்தம் மட்டும் எப்போதும் வேண்டும் என்று உள்ளம் சொல்கிறது தோழி !நன்றிடா மென் மேலும் நல்லா வரவேண்டும் நீங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறேன் தோழி. வார்த்தைகளே வரவில்லை. கண்டிப்பாகத் தொடரும் இந்த சொந்தம். உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மனங்கனிந்த நன்றி தோழி. இப்படி நட்புகள் கிடைத்தது என் பாக்கியம் அன்றி வேறென்ன

      நீக்கு
  9. ஆச்சர்யப்படவைக்கும் தகவல்கள். தகவல்களைக் காட்சிகளாக பதிவு செய்து வைக்கிறது என்று படித்திருக்கிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து படிக்கிறேன். இவ்வாறான பதிவுகளை மனதில் இருத்திக்கொள்ள கூடுதல் மூளை வேண்டும் போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றி ஐயா.
      நீங்கள் செய்யும் களப்பணிக்கும் ஆராய்ச்சிக்கும் முன் இது தூசு ஐயா

      நீக்கு
  11. >>> கண்ணால் பார்க்கிறேன், கண்ணால் பார்க்கிறேன் என்று சொல்கின்றோமே. அந்தக் கண்ணால் மட்டும் பார்ப்பதில்லை..<<<

    ஆகா.. பள்ளியில் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்ததில் மகிழ்ச்சி..

    இப்படிக் காணொளிகள் இல்லாமலேயே அன்றைக்கு - பாடத் திட்டத்தில் இருந்த வரைக்கும் - எங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா..

      ஆமாம், என்னுடைய சில ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  12. அறிவின் செல்வங்கள் அனைத்தையும் தமிழிற்சேர்க்கும் பயனுள்ள முயற்சி.

    தொடர்கிறேன்.

    ““““““கண்ணால் பார்க்கிறேன் என்று சொல்கின்றோமே. அந்தக் கண்ணால் மட்டும் பார்ப்பதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? வெளியிலிருந்து ஒளி வடிவங்களை கண்கள் மூளைக்கு மின்னதிர்வுகளாக அனுப்புகின்றன. அவற்றை வண்ணம், வடிவம், இயக்கம் என்று ஆராய்ந்து ஒன்று சேர்த்து நாம் காணும் காட்சியாகக் கொடுப்பது மூளையின் சில நரம்பணுக்கள்.““““““““““

    நாம் கண்ணால் காண்பதெல்லாம் உண்மையா என்பது பற்றிய பதிவொன்றிடக் காரணமாகின்றன இவ்வரிகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும் நன்றி அண்ணா.

      உங்கள் பதிவைக் காண ஆவலுடன்..

      நீக்கு
  13. செம்ம கிரேஸ் ... மூளை படிப்பில் Ph. D ஏதாச்சும் பண்ணுரிங்கலா??... உங்க மூளை மூளை பத்தி பிரிச்சு மேயுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி ஸ்ரீனி
      Ph.D பண்ண ஆசைதான். எதுல பண்றதுன்னு தான் தெரிலை :) :)

      நீக்கு
  14. நல்ல எடுத்துக்காட்டுகளுடன்
    அருமையான தொடர்
    தொடருங்கள்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  16. அசத்தல் பதிவு ...
    வாழ்த்துக்கள்
    தம +

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...