வாசித்தல்..நூல்கள்..நூலகம்

பள்ளி விடுமுறை துவங்கியதும் நூலகத்தில் சம்மர் ரீடிங் ப்ரோக்ராம் துவங்கியது. Every hero has a story என்னும் தலைப்பில்.என் பிள்ளைகள் இதில் பெயர் கொடுத்ததும், முகநூலில் பதிந்திருந்தேன். அதை இங்கே இன்று தொகுத்துப் பகிர்கிறேன்.

ஜூன் 7
நான்கு வயதிற்கு மேல் இங்கு நூலகங்களில் பயனர் அட்டை கொடுப்பார்கள். இப்பொழுது சம்மர் ரீடிங் ப்ரொக்ரம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு குழந்தையும் சம்மரில் இத்தனை புத்தகங்கள் படிப்பேன் என்று சொல்லி, படிக்கும் ஒவ்வொரு நூலையும் அவர்களுக்குரிய அக்கொளண்ட்டில் குறிக்க வேண்டும். சொன்ன எண்ணிக்கை படித்தவுடன் நூலகத்தார் ஒரு புத்தகம் பரிசாகக் கொடுப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் நூல்களிலிருந்து தேர்ந்த்தெடுத்துக் கொள்ளலாம்.
என் மூத்தவனுடைய குறிக்கோள் 50, இளையவன் 70. இன்னும் 61 நாட்கள் இருக்கிறது.

குறிக்கோளைத் தாண்டிச் செல்வார்கள் போல் தெரிகிறது. :-)

ஜூலை 7:
Alvin's reading progress. 70 நூல்கள் வாசிப்பேன் என்று குறிக்கோள் வைத்திருந்தான். அதற்கு மேலேயே வாசிப்பான் போல..

ஜூலை 30
நூலகத்தில் விடுமுறை வாசித்தல் பழக்கம் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இதில் பங்குகொள்ள பெயர் கொடுக்கும் பொழுது எத்தனை நூல்கள் வாசிப்பேன் என்றும் குழந்தைகள் சொல்ல வேண்டும். லட்சியத்தை நிறைவேற்றியவுடன் நூலகத்தினர் ஒரு நூல் மற்றும் சான்றிதழ் பரிசாகக் கொடுப்பர். என் மூத்தவன் 50உம் இளையவன் 70உம் சொன்னார்கள். இது ஜூன் 7ஆம் தேதி என்று நினைக்கிறேன். யாரும் இத்தனை நூல்கள் சொல்லவில்லை என்றும் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் நூலகத்தில் வேலை செய்யும் பெண்மணி சொன்னார். ஆனால் மனதில் நினைத்துக் கொண்டேன், பிள்ளைகள் முடித்துப் பரிசு வாங்காவிட்டாலும் பரவாயில்லை, முடிவெடுத்ததை மாற்றக் கூடாது என்று. இதோ இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கும் நிலையில் ஜூலை 28ஆம் தேதி நிறைவேற்றிவிட்டனர். இன்னும் வாசித்துக் கொண்டு இருக்கின்றனர். 29 ஆம் தேதி நூலகம் சென்று பரிசை வாங்கி வந்தோம். இந்த வாசித்தலை மேதகு அப்துல் கலாம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். ஆரம்பிக்கும்பொழுது இது அவருக்கு அஞ்சலியாக மாறும் என்று நினைக்கவில்லை. இதைப் போன்று இந்தியாவிலும் வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சிகளும் அருமையான நூலகங்களும் நிறைய வரவேண்டும்.

 நூலகப் பெண்மணி சொன்னார், "நீங்கள் பெருமைப்பட வேண்டும், உங்கள் மகன்கள் மிக அதிகமான நூட்களை வாசித்துள்ளனர்" என்று! சிலநேரங்களில் "புக்க மூடி வச்சுட்டு வரீங்களா?" என்று திட்டியிருந்தாலும் பெருமைப்படுகிறேன். :-)
வாசித்தல் இலட்சியத்தை நிறைவேற்றியக் குழந்தைகளின் பெயர்கள் நூலக சுவற்றில்




self check out


 
பரிசாகக் கிடைத்த நூல்கள்

26 கருத்துகள்:

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. குட்டிச் செல்லங்களுக்கு எனது வாழ்த்துகளும்.... வாசிப்பு பழக்கம் இந்த வயதிலேயே இருந்துவிட்டால் நல்லது.

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  3. இருவருக்கும் அன்பான வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  4. உங்களுடைய பிள்ளைச் செல்வங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  5. >>> இதைப் போன்று இந்தியாவிலும் வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சிகளும் அருமையான நூலகங்களும் நிறைய வரவேண்டும்.<<<

    வரவேண்டும்.. வரவேண்டும்.. வாசித்தல் மிகவும் நல்ல வழக்கம்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள சகோதரி,

    அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போல செல்வங்கள் வ(ள)ரட்டும்...வாழ்த்துகள்...!

    த.ம.5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா. தட்டச்சுவது கடினமாய் இருக்கும்போதிலும் வந்து வாழ்த்தியது பெரும் நெகிழ்ச்சி!

      நீக்கு
  7. அம்மாவை போல பிள்ளைகளும் சமத்துதான் போலிருக்கிறது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. அன்புச் செல்வங்களுக்கும் அவர்கள் பெற்றோர்களாகிய உங்களுக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    உங்களைப் போன்றோரைப் பார்த்து ஏனைய பெற்றோரும் இப்படி
    நல்ல விடயங்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களாகவே பிள்ளைகளுக்குப்
    பிடித்த நூலை வாங்கிப் பரிசளித்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான வாழ்த்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி .
      நல்ல ஆலோசனை தோழி

      நீக்கு
  9. வாழ்த்துக்கள். இவ்வாறான பழக்கத்தை ஆரம்பத்தில் மேற்கொள்ளுதல் என்பது குழந்தைகளை நல்ல நிலைக்கு அழைத்துச்செல்லும்.

    பதிலளிநீக்கு
  10. வாசிப்பு பழக்கம் ....அவசியமான ஒன்று ....தங்களின் மகன்களுக்கு எனது வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  11. அருமையான விஷயம்.வாழ்த்துக்கள் கிரேஸ்... குட்டீஸ்களுக்கும் உங்களுக்கும்... நம்மைப் பார்த்துத்தானே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  12. சமீபத்தில் வந்திருந்த இரண்டு நண்பர்கள் இதைதான் குறிப்பிட்டிருந்தனர்
    அமரிக்கர்களின் வாசிப்பு மோகம் பொறாமை கொள்ளவைப்பது ...
    தம +

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...