மனிதன் ஹோமினிட் என்று வழங்கப்படும் உயிரினத் தொகுதியைச் சேர்ந்தவன். இத்தொகுதி மனிதன் மற்றும் குரங்கு சேர்ந்த தொகுதியாகும். இத்தொகுதியின் பரிணாம வளர்ச்சியைப் படித்தால் கடந்த இருபது இலட்சம் (இரண்டு மில்லியன்) ஆண்டுகளில் மூளை மூன்று மடங்கு பெரிதாகியிருக்கிறதாம். மூளையில் சுருக்கங்களும் மடிப்புகளும் ஏன் வந்தன?
மூளையின் கதை- பாகம் 1 இன் இணைப்பு.
கீழே பச்சை நிறத்தில் இருக்கும் பத்திகளில் நான் சொல்லியிருக்கும் தகவல்கள் காட்சியகம் பார்த்து வந்தபின் மேலும் அறிந்துகொள்ள நான் இணையத்தில்தேடித் படித்தது. கொஞ்சம் அறிவியல் சொற்கூறுகள் இருக்கும், வேண்டாம் என்று நினைப்பவர்கள் பச்சை நிற எழுத்தில் இருக்கும் பத்திகளை விட்டுவிடுங்கள். :-)
மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உயிரினப் படிவம் (fossils) முக்கிய பங்கு வகிக்கிறது. உயிரினப் படிவம் அல்லது தொல் எச்சம் ஆகிய வார்த்தைகள் பாசிலைக் குறிக்கின்றன. இந்த உயிரினப்படிவங்களை ஆய்வு செய்யும் அறிவியல் புலம் பாலியோ ஆந்த்ரோபாலஜி (Paleo Anthropology) என்பதாகும். இது பழங்கால உயிரினங்களின் ஆய்வான பாலியண்டாலஜி (Paleontology) மற்றும் மனித வாழ்க்கை ஆய்வான ஆந்த்ரோபாலஜி(Anthropology) ஆகிய இரு துறைகளையும் இணைத்து இருப்பதால் இப்பெயர் பெற்றது.
சரி, அகழ்வாராய்ச்சியில் பழங்கால உயிர்ப்படிவங்கள் ஏதேனும் கிடைத்தால் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ள டைப் ச்பெசிமென் (type specimen), அதாவது இந்த இந்த கூறுகள் இருந்தால் இந்த இனம் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரிப்புகளைக் கொண்டு ஒப்பீடு செய்து இந்த ஸ்பீசீஸ் (species) என்று வகைப் படுத்துவர். ஒரே குடும்பத்திலிருக்கும் இனங்கள் இந்த டைப் ச்பெசிமென் கொண்டு வேறு வேறு ஸ்பீசீஸ் ஆக வகைப்படுத்தப் படும். அப்படி ஹோமினிட் (hominid) என்பது மனிதன், கொரில்லா, ஒராங்குட்டான், சிம்பன்சிஸ் ஆகியவற்றை உள்ளடக்குவதாகும்.
இந்த ஹோமினிட் குடும்பத்தின் ஆஸ்திரேலோபிதிக்கஸ் அபாரென்சிஸ் (Australopithecus afarensus) என்ற இனம் மூன்றிலிருந்து நான்கு மில்லியன் ஆண்டுகள் முன் வாழ்ந்த இனம்.அவர்களுடைய மண்டையோட்டுக்குரிய கொள்ளளவு 375 இலிருந்து 550 சிசி ஆக இருந்திருக்கிறது. பின்னர் இது வளர்ச்சியுற்று 1.8 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) என்ற இனத்தில் 750 இலிருந்து 1225 சிசி வரை இருந்திருக்கிறது. இன்றைய மனித இனத்தின் மண்டையோட்டுக் கொள்ளளவு சராசரியாக 1350 சிசியாக இருக்கிறது.
படம் 2 |
படம் 2 இல் 1 என்று குறியிடப்பட்ட மூளைத்தண்டும் (brain stem) சிறுமூளையும் (cerebellum) பாலூட்டிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்டன. இன்றும் அவை பல்லி இனங்களில் காணப்படுகின்றன. இந்த பகுதிகள் அடிப்படை அசைவுகளை ஏற்படுத்துவன. படம் 2 இல் 2 எனக் குறிக்கப்பட்டுள்ள லிம்பிக் அமைப்பு (limbic system) அனைத்துப் பாலூட்டிகளிடமும் காணப்படுகின்றன. உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் இந்த பகுதி காரணமாக இருக்கிறது.
புறணி பகுதி (Cortex) எனப்படும், படம் 2 இல் 3 எனக் குறிக்கப்பட்டுள்ளப் பகுதி, பாலூட்டிகளில் மேம்பட்ட வளர்ச்சியடைந்த புறப்பகுதியாகும். குரங்கு மற்றும் மனித இனங்களில் மேலும் வளர்ச்சியடைந்த இப்பகுதி மண்டையோட்டிற்குள் பொருந்துவதற்காக மடிப்புகளையும் சுருக்கங்களையும் பெற்றது.
4 என்று குறிக்கப்பட்டுள்ள முன்மண்டை ஓடு (prefrontal cortex) மனிதனுடையத் தனித்துவமான திட்டமிடுதலுக்கும் கடினமான முடிவுகளை எடுப்பதற்கும் துணை செய்யும் பகுதியாகும்.
3 எனக் குறிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ப்ரோகாஸ் மற்றும் வெர்நிக்ஸ் ( Broca's and Wenicke's areas) மனித மொழி வளர்ச்சிக்குக் காரணமான பகுதிகளாகும். இவை படம் 2 இல் இடதும் வலதும் சிறியதாக உள்ள இரு பச்சை நிறப் பகுதிகள். இடது பக்கத்தில் இருப்பது ப்ரோகாஸ், வலதில் இருப்பது வெர்நிக்ஸ். ப்ரோகாஸ் பேச்சுத்திறனையும் வெர்நிக்ஸ் மொழிகளைப் உள்வாங்கிப் புரிந்துகொள்ளும் திறனையும் கட்டுப்படுத்துகின்றன. இப்பகுதிகள் உயரினத் தொகுதியில் இருக்கும் குரங்கினங்களிலும் இருக்கின்றன. மனிதக் குரங்குகள் மற்றும் மனிதரில் இவை ஒரேமாதிரியான சில பயன்பாடுகளைக் கொடுக்கின்றன. பேச்சில்லாத வாய் மற்றும் கை அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த இனங்கள் ஒருவர் ஒருவருடைய முக பாவனைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. ஆனால் மனித மூளையின் இப்பகுதிகள் பேச்சுத்திறன் மற்றும் மொழிகளின் புரிதலையும் கொடுக்கின்றன.
மனிதன் மற்றும் மனிதக் குரங்குகளில் இப்பகுதிகளுக்கு சில ஒற்றுமைகள் இருந்தாலும் இவை மனித மூளையில் இன்னும் முன்னேற்றம் அடைந்துள்ளன. குரங்குகளில் ஒலிகளை ஏற்படுத்த மூளைத் தண்டும் லிம்பிக் அமைப்புமே உதவுகின்றன. குரங்கினங்களில் தொடர்பில்லாமல் இருக்கும் ப்ரோகாஸ் மற்றும் வெர்நிக்ஸ் பகுதிகள், மனித மூளையில் ஆர்குவேட் பசிகுலஸ் பாத்வே (Arcuate fasciculus pathway) எனப்படும் நரம்பணு முடிச்சுகளால் இணைக்கப்பட்டுள்ளன.
மூளையின் கதை தொடரும்...
விளக்கம் மிகவும் சுவாரஸ்யம்... 4 ரொம்பவும் முக்கியம் எனப்படுகிறது... நன்றி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
நீக்குஆமாம் மனிதனின் தனித்தன்மை அல்லவா?
அருமையான தொடர் சகோதரி. ஆங்கிலத்தில், அறிவியலிலும், தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக மூளையைப் பற்றி அறிந்து கொள்ள அதற்கான புத்தகங்களை வாசித்து அறிந்திருந்தாலும், தமிழில் நீங்கள் இவ்வளவு அழகாக அதை உரைத்து, அதை வாசிக்கும் போது இன்னும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவது மட்டுமன்றி மூளையுடன் ஒரு அன்யோன்யம் ஏற்படுகின்றது. தாய் மொழியில் அறிந்து கொள்வதாலோ? அறிவியல் பெயர்களை அப்படியே கொடுத்து தமிழில் படிப்பது நன்றாக இருக்கின்றது. அந்த வார்த்தைகளுக்குத் தமிழில் வார்த்தைகளும் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குசுஜாதா அவர்கள் கூட ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். நமது நாட்டிலும், ஜப்பான் போன்று தாய்மொழி வழிக் கல்வி நிச்சயமாக அறிவு வளர உதவும் என்று. உபயோகமாக இருக்கும் என்று. எனவே, ஆங்கிலத்திலும், தமிழிலும் என்று பாடத்திட்டத்திலேயே இருந்தால் நம் மாணவர்கள் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளவும், இரு மொழிகளும் கற்கவும் எளிதாக இருக்குமோ? ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை, தமிழ் வழிக் கல்வி கற்பவர்களுக்கு ஆங்கிலம் சிரமமாக இருப்பதால் இந்த யோசனை அடிக்கடித் தோன்றும்.
மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கும். தொடர்கின்றோம்.
மிக்க நன்றி அண்ணா. நம்மைப் பற்றிய செய்தி, அதுவும் தாய்மொழியில் இனிமையாக இருக்கிறது இல்லையா அண்ணா? மீண்டும் நன்றி.
நீக்குஉண்மைதான், தாய்மொழி வழிக் கல்வி அறிவை நிச்சயமாக வளர்க்கும். இரு மொழிகளிலும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பயனுள்ளதாகவும் இருக்கும். உண்மையைச் சொன்னால் நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றதால் அறிவியல் சொற்கள் மலைப்பாக இருந்த காலம் உண்டு. என் உறவில் தமிழ் வழிக் கல்வி கற்ற ஒரு பெண்ணுடன் சேர்ந்து பாடம் விவாதிக்கும் பொழுது வார்த்தைகள் தெரியாமல், புத்தகங்களைப் பிரித்து படங்களை ஒப்பீடு செய்து தெரிந்து கொள்வோம். பின்னர் கல்லூரியில் தமிழ் வழிக் கற்றுவந்த ஒரு தோழிக்குப் பாடம் புரிய உதவி செய்யும்பொழுதும் இப்படித்தான். ஆங்கில வழிக் கல்வியில் தமிழ் சிரமமாக இருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.
வளரும் அறிவியலுக்கேற்ப தமிழ் சொற்களைத் தமிழ் பாடநூலில் சேர்க்க வேண்டும். ஆனால், இப்பொழுது தமிழே படிக்காமல் அல்லவா மாறுகிறார்கள்? :-(
உங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி அண்ணா
நாங்கள் இதை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம் சகோதரி. இங்கு சில மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியிலிருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியிருப்பதால் அவர்களுக்கு படிப்பது சற்று சிரமமாக இருப்பதால், இது உதவும் என்ற வகையில். மிக்க நன்றி க்ரேஸ்.
பதிலளிநீக்குகீதா
மிகுந்த மகிழ்ச்சி கீதா. இதில் இன்னும் தகவல் வேண்டும் என்றால் சொல்லுங்கள், மகிழ்ச்சியுடன் செய்வேன்.
நீக்குமனமார்ந்த நன்றி கீதா
இதை நானும் செய்வேன்...
நீக்குரொம்ப நன்றி அண்ணா..மகிழ்ச்சி. :))
நீக்குமூளை பற்றி இதுவரை அறியாத செய்திகள்
பதிலளிநீக்குதங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மூளையில்
ஏறிக் கொண்டிருக்கின்றன சகோதரியாரே
நன்றி
தம +1
மகிழ்ச்சி அண்ணா..
நீக்குமிக்க நன்றி கருத்துரைக்கும் வாக்கிற்கும்.
மூளையைப் பற்றி தொடர்ந்து படித்துவருகிறேன். பலபுதிய செய்திகளை அறியமுடிகிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து படித்து ஊக்கம் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா.
நீக்குஅருமையான தொடர் சகோதரி...
பதிலளிநீக்குவிளக்கமாய்... விவரமாய் தொகுத்துத் தருகிறீர்கள்....
வாழ்த்துக்கள்.
இனிய கருத்திற்கு நன்றி சகோ
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
மூளை பற்றிய படங்களுடன் சிறப்பான விளக்கம்... கண்டு மகிழ்ந்தேன் அறிய முடியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி. த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். மிக்க நன்றி
நீக்குஆகா.. அருமை!...
பதிலளிநீக்குமூளையைப் பற்றிய புதிய செய்திகள் உற்சாகமாக இருக்கின்றன..
தங்கள் பணி சிறப்பானது.. நல்வாழ்த்துகள்!..
எப்படி கிரேஸ்..இவ்வளவு வார்த்தைகள் கண்டு பிடிச்சு போடு இருக்கீங்க .. செம்ம.. நிறைய தெரிந்து கொண்டேன்.. சூப்பர்
பதிலளிநீக்கு:)) நன்றி ஸ்ரீனி
நீக்குவணக்கம் சகோ.
பதிலளிநீக்குகலக்கல் பதிவு
சமீபத்தில் நான் அறிவியல் பதிவுகள் எழுதவில்லை
அந்தக் குறை தங்கச்சி மூலம் சரிசெய்யப்ட்டுவிட்டது.
நானும் தொடங்க இருக்கிறேன்...
மீண்டும்
வகுப்பில் பயன்படும் பதிவு
தம +
வணக்கம் அண்ணா.
நீக்குமிக்க நன்றி. உங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
மூளையின் பல பெயர்களுக்கு இன்று தமிழ் பெயர்கள் கற்றுக் கொண்டேன்; அல்லது தமிழ் பெயர்களுக்கு ஆங்கிலச் சொற்கள் கற்றுக் கொண்டேன். இன்னும் அறிய ஆவல் அதிகமாகிறது.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்!
மகிழ்ச்சி அம்மா. இத்தொடரை எழுதும் வகையில் நானும் கற்றுக்கொள்கிறேன்.
நீக்குஉங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிம்மா.
சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குதகத்ததாயத் தமிழைத் தாபிக்கும் உங்களின் பணி வாழ்க.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.