மெக்கின்சி ஆய்வறிக்கை கூறும் கல்வித்தரம்

இந்தியா மற்றும் சீனப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கியக் கோடிக்கணக்கான பட்டதாரிகள் உலகின் சிறந்த பட்டதாரிகளுடன் போட்டியிடும் திறமை அற்றவர்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா? Masters of Management என்ற நூலில் ஆசிரியர் ஆட்ரியன் வூல்ட்ரிட்ஜ் (Adrian Wooldridge) இப்படிச் சொல்லியிருக்கிறார்.



பொறியியல் மற்றும் கணினிப் படிப்பில் இந்தியாவும் சீனாவும் அமேரிக்கா உருவாக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையைவிட இருமடங்கு பட்டதாரிகளை உருவாக்குகின்றனர். அமேரிக்காவில் பட்டம் பெறுபவர்களில் ஐம்பது சதவிகிதம் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர் மற்றும் சீனர் என்பதையும் கருத்தில் கொண்டால் மேற்சொன்ன எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்திய மற்றும் சீனப் பட்டதாரிகள் தங்கள் மேலை நாட்டுப் பட்டதாரிகளை விடக்  குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கின்றனர்.
இந்தியப் பட்டதாரியின் விலை அமெரிக்கப் பட்டதாரியின் விலையில் வெறும் பனிரெண்டு சதவிகிதம் என்று சொல்கிறார் ஆட்ரியன். இந்தியப் பட்டதாரிகள் சராசரியாக ஆண்டிற்கு 2350 மணிநேரங்களும் அமெரிக்கப் பட்டதாரிகள் ஆண்டிற்கு 1900 மணிநேரங்களும் ஜெர்மனியின் பட்டதாரிகள் 1700 மணிநேரங்களும் உழைக்கிறார்களாம்.

இருந்தாலும் தகுதிக் குறைபாடு இருக்கிறதாம். அது ஏன்? கோடிக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கும் இந்தியாவிலும் சீனாவிலும் தகுதித் தட்டுபாடு எவ்வாறு இருக்க முடியும்? இதனை ஆராய்ந்தால் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற கல்விமுறை வளர்ச்சி இல்லையாம். மேலும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மேலைப் பொருளாதாரத்தைவிடப் பல ஆண்டுகள் கழித்தே உருவாகத் தொடங்கின என்பதும் காரணம். இந்தியப் பொருளாதாரம் 1990களில் தான் உலகமயமாகத் துவங்கியது. சீனாவோ 1966 இலிருந்து 1976 வரை சிறந்த அறிவாளிகளைச் சிறையில் தள்ளியிருக்கிறது. இதெல்லாம் கடந்து வந்தால் கல்விமுறை மேலைத் தரத்திற்குத் தகுதியாக இல்லையாம்.


இந்தியா, சீன, அமேரிக்கா ஆகிய நாடுகளில் பொறியியல் படிப்பு பற்றி ஆய்வு செய்த விவேக் வாத்வா (Vivek Wadhwa) என்பவர் இந்தியா ஆண்டு தோறும் உருவாக்கும் நான்கு இலட்சம் (400,000) 'பொறியாளர்'களில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் (170,000) பேர் மட்டுமே மேற்கத்தியர் கூறும்  'பொறியாளர் ' என்ற வரைமுறைக்குள் வருகின்றனர் என்கிறார்!

மெக்கின்சி & கம்பெனி (McKinsey & Company) உலக பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் ஒரு நிறுவனமாகும். அதன் ஆய்வில் என்ன சொல்கிறார்கள் என்றால் "இந்தியா உருவாக்கும் பொறியியல் பட்டதாரிகளில் இருபத்தைந்து சதவிகிதமும் (25%), நிதி மற்றும் கணக்கு அலுவலர்களில் பதினைந்து சதவிகிதமும் (15%), மற்ற எந்த பட்டம் பெற்றவர்களிலும் வெறும் பத்து சதவிகிதமும் (10%) மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் தகுதி உள்ளவர்கள்", என்று!!
மேலும் இந்த ஆய்வு அறிக்கை போலந்து மற்றும் ஹங்கேரியின் பொறியாளர்களில் ஐம்பது சதவிகிதமும் சீனப் பொறியாளர்களில் பத்து சதவிகிதமும் தகுதியானவர் என்று சொல்கிறது..
While 50 percent of engineers in Poland or Hungary are suitable to work for multinational companies, only 10 percent of Chinese ones and 25 percent of Indian ones would be suitable (Exhibit 2).

 மெக்கின்சி அறிக்கையைப் படிக்க விரும்புவோர் இந்த இணைப்பைப் பார்க்கவும். இந்தப் பக்கத்தில் அறிக்கையைத் தரவிறக்கம் செய்யலாம்.

கல்விமுறை மாற்றம் குறித்துப் பலர் பேசினாலும் தேவை என்று சொன்னாலும் மாற்றம் வருவது மட்டும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் என்ன ஆகுமோ? இப்பொழுது வளர்ந்து வரும் சிறு நாடுகள் இந்தியாவை விடக் குறைந்த ஊதியத்திற்கு உழைக்கத் தயாராக இருக்கின்றனர். இந்தியக் கல்வித்  தகுதியும் முன்னேறாவிட்டால் என்னவாகும்?

மற்றவருக்குக் குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் வேலைக்காரர்களை உருவாக்குவதை விடச்  சிறந்த கல்வியாளர்களையும் தொழில் அதிபர்களையும் தலைவர்களையும் நாம் உருவாக்க வேண்டும். மதிப்பெண் மட்டுமேக்  குறியாக ஓடும் ஓட்டம் நிறுத்தப் படவேண்டும். சுயச்சிந்தனையும் தனித்திறமைகளும் ஊக்குவிக்கப்படவேண்டும். இப்பொழுதும் விழிக்காவிட்டால்...

(நூலில் படித்ததைப் பகிரத் தோன்றியது.)

20 கருத்துகள்:

  1. வணக்கம்
    படித்தை எங்களின் பார்வைக்கு பகிர்ந்தமைக்கு நன்றி நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நம்ம திரு.முத்துநிலவன் ஐயாவின் "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே..." எனும் புத்தகத்திலும் அழுத்தமாக கூறி உள்ளார்... படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, படித்துவிட்டேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி அண்ணா

      நீக்கு
  3. மதிப்பெண் மட்டுமேக் குறியாக ஓடும் ஓட்டம் நிறுத்தப் படவேண்டும். சுயச்சிந்தனையும் தனித்திறமைகளும் ஊக்குவிக்கப்படவேண்டும். இப்பொழுதும் விழிக்காவிட்டால்...
    நிரந்தர இருளில் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அண்ணா, வருத்தமாக இருக்கிறது.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  4. தேவையான பகிர்வு. பகிர்ந்த முறை நன்று. எப்போது விழிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை. நல்லதை எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பகிர்ந்த முறை நன்று// மகிழ்ச்சி ஐயா. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  5. பொறியியல் படிப்பை வர்த்தக ரீதியில் மட்டும் அணுகி தெருக்கு தெரு 'Engineering College' வைக்க அனுமதி கொடுத்தா தரம் எங்க இருந்து வரும்.

    மிகவும் தேவையான பதிவு ... சூப்பர் கிரேஸ்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு.

    மதிப்பெண் எடுப்பது மட்டுமே சிறந்தது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கட்டுரை... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இது குறித்து நானும் பல நாள் யோசித்ததுண்டு... நம் கல்வி முறை வெறும் தொழிலாளர்கள் அல்லது அடிமைகளை மட்டுமே உருவாக்கும் கல்வி முறையாக அமைந்துள்ளது... இது மாறி இன்னும் அறிவு சார்ந்த தொழிலதிபர்களை உருவாக்கும் கல்வி முறையாக இது மாறியே தீர வேண்டும்... வெறும் பட்டங்களைக் கொண்டு வருங்காலத்தில் எதுவுமே செய்ய இயலாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பிரியா. சீக்கிரம் நல்ல மாற்றம் வர வேண்டும்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  9. அருமையான பதிவு சகோதரி! நமது இந்தியக் கல்வி தரம் தாழ்ந்துதான் இருக்கின்றது. நாம் இன்னும் நம்மை புதுமைகள் செய்து, ப்ராக்ட்டிகல் கல்வி முறைக்க்கு மேம்படுத்திக் கொள்ளவில்லை. இது கல்லூரிகளுக்கு மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பொருந்தும். நம்மை உயர்த்திக் கொள்ளவில்லை என்றால், தனித் திறமைகளும், சிந்தனைகளும் ஊக்குவிக்கப்படவில்லை என்றால், மதிபெண்கள் மட்டுமே முக்கியமாகக்கருதப்பட்டால் நம் நிலை இன்னும் மோசமாகும். னாம் சொல்லுகின்றோமே தவிர நடைமுறைக்கு இன்னும் கொண்டுவரவில்லை...வேதனைதான்..நம் இந்தியா முழுவதும் எல்லோருக்கும், கிராமத்தார் உட்பட அடிப்படைக் கல்வி முதலே/ஆரம்பக் கல்வி முதலே ஒரே கல்வி முறையாக வேண்டும். பலவிதப்பாடத்திட்டங்கள் அல்லாமல் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே விதமான பாடத்டிட்டங்களும், கற்றல் குறைபாடுகள் உள்ளவர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வி கொடுக்கப்பட்டு, அவர்களது தனித் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படுமானால் நமக்கு இருக்கும் மனித வளம் இந்த உலகின் முடி சூடா மன்னன் ஆகி இந்தியா உலக அரங்கில் ஒளிரும்...

    கீதா: எனது மகன் அங்கு வந்து நார்த் அமெரிக்கன் வெட் லைசன்ஸ் வாங்கிய போது அறிந்தது இதுவே. நம் ஊர் கால்நடைக் கல்விக்கும் அங்குள்ள கால்நடைக் கல்விக்கும் பெரிய வித்தியாசம்....மலைக்கும் மடுவுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம். மகன் இங்கிருக்கும் போதெ அங்குள்ளவற்றையும் இணையத்தில் கற்றதால் எளிதாக இருந்தது. அவர்கள் நம்மூர் வெட் டிகிரியை மதிப்பதில்லை. ம்ம்ம் அது உலகறிந்த விஷய்மதாம்....ஆனால் நம் ஊரில் இருக்கும் வேளாண்மை, கால்நடைத் துறை மேம்படுத்தப்பட்டால் அதுவும் சாத்தியமாகும்...மகன் அதைச் செய்யத்தான் முயன்றுகொண்டிருக்கின்றான்..ஆனால் அங்கு வொர்க் பெர்மிட் கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது...பார்ப்போம் நல்லது நடக்கும்...

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...