குரு தட்சிணை - அன்றும் இன்றும்

 ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். ஏகலைவன் என்ற இளைஞன் வில் வித்தை கற்க விரும்பினான். துரோணர் என்ற குருவை அணுகியபொழுது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சத்ரியர்களுக்கு வில் வித்தைப் பயிற்சி அளிக்கும்பொழுது தொலைவில் இருந்து பார்த்தே ஏகலைவன் கற்றுக்கொண்டான். ஏகலைவன் வில் வித்தையில் கெட்டிக்காரனாய் மாறினான். இது துரோணருக்குக் கவலை அளித்தது. தன்னுடைய சீடனான அர்ஜுனனுக்குப் போட்டியாக ஏகலைவன் வந்து விடுவானோ என்று ஒரு எண்ணம். அதனால் ஏகலைவனிடம் குரு தட்சிணையாக ஏகலைவனுடைய வலது கை கட்டை விரலைக் கேட்கிறார். பின்னர் ஏகலைவன் எங்கே வில் வலைப்பது? அம்பு எய்வது? பிரச்சனை தீர்ந்துவிடும் அல்லவா? சரி, ஏகலைவன் என்ன செய்தான்? சட்டென்று தன வலது கை கட்டைவிரலை அறுத்துக் கொடுத்துவிட்டான். குரு தட்சிணை ஆயிற்றே? மறுக்க முடியாதல்லவா? அப்படியா என்று கேட்காதீர்கள், முன்னொரு காலத்தில் அப்படித்தான் இருந்தது என்று வாசித்தேன். சிறு வயதில் இந்த கதை படித்த பொழுது ஏகலைவன் மேல் பரிதாபமும் துரோணர் மேல் கோபமும் வந்தது.

சரி, அதை விடுத்து இன்றைய தினத்திற்கு வருவோம். இன்று குரு தட்சிணை மதிக்கப்படுகிறதா? குருவின் மேல் மரியாதையாவது இருக்கிறதா? குருவும் மாணவர் மேல் அக்கறை கொண்டு கற்றுக் கொடுக்கிறாரா? என்று பல கேள்விகள் அடுக்காய் எழுகின்றன. மனிதருக்கு மனிதர், இடத்திற்கு இடம் இவை எல்லாம் வேறுபடுகின்றன.


சரி, என்னதான் சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விசயத்திற்கு வருகிறேன். நம் ஊரில் செப்டம்பர் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். அது அனைவரும் அறிந்ததே. இங்கு ஒரு வாரம் "ஆசிரியர் பாராட்டு வாரம்" (டீச்சர் அப்பிரிசியசன் வீக்) என்று மே மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. வாரம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பாராட்டையும் நன்றியையும்  தெரிவிக்கும் வகையில் பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து பல விசயம் செய்வர். ஆசிரியருக்குப் பிடித்த பரிசு கொடுப்பது, ஒரு நாள் ஆசிரியர் நிதானமாக உணவு உண்ண வழிசெய்யும் வகையில் பெற்றோர் யாராவது இரண்டு மூன்று பேர் உணவு இடைவேளையில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, பிள்ளைகள் கைப்படச் செய்த நன்றி அட்டைகள் கொடுப்பது, வகுப்பு மாணவர்களை எல்லாம் ஆசிரியரைப் பற்றி ஒன்றிரண்டு பிடித்த விசயம் எழுதவைத்து அவற்றை கற்பனைக்கு ஏற்றபடி ஏதாவது ஒரு பெற்றோர் அழகாக வடிவமைத்துப் பரிசளிப்பது என்பவை சில உதாரணங்கள்.


masking tape painting 
அப்படி இந்த வருடம் என் நான்கு வயது மகன் தன் ஆசிரியர்களுக்காகச் செய்த அட்டைகளின் முன்பக்கம் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன். ஒரு அட்டையில் மாஸ்கிங் டேப் கொண்டு எழுத்துகளை ஒட்டி, மேலே வண்ணம் தீட்டிப் பின்னர் காய்ந்தவுடன் டேப்பை எடுத்துவிட்டோம். உள்ளே ஆசிரியரின் பெயர் மற்றும் மகனின் பெயர் எழுதி அவனுக்குப் பிடித்ததை வரைந்தும் வைத்தோம். அப்படி எடுத்த டேப் எழுத்துகளை வேறொரு அட்டையில் ஒட்டி அதிலும் படம் வரைந்து பெயருடன் பள்ளியின் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கொடுத்தோம். அந்த படங்கள் கீழே இணைத்துள்ளேன்.
நன்றி அட்டைகளுடன் வேறு சிறிய பரிசும் சேர்த்துக் கொடுத்தாலும் ஆசிரியர்களுக்கு இந்த அட்டைகள் மிகவும் பிடித்திருந்தன.

chevrolet car 

volks wagon car 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்றை யவை 
அழிவில்லாத செல்வம் ஒருவனுக்கு கல்வியே ஆகும், மற்ற பொருட்கள் எல்லாம் செல்வம் இல்லை என்று திருவள்ளுவர் சொன்ன கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு நன்றி உரைப்பது மிகவும் சரியானதும்  நியாயமானதும் அல்லவா?

15 கருத்துகள்:

  1. ஆஹா.. அருமை, அருமை. கண்டிப்பாக ஆசிரியர்கள் நெகிழ்ந்து இருப்பார்கள் :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல யோசனை.உங்களின் ஆசிரியர் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் குழந்தைகளுக்கும் கற்றுதந்தமைக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது மிகச்சரியே...

    நன்றி அட்டைகள் அழகு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. @ஸ்ரீனி: ஆமாம் ஸ்ரீனி மிகவும் பிடித்தது என்று சொன்னார்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  5. @கவியாழி கண்ணதாசன்: கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. @திண்டுக்கல் தனபாலன்: மிக்க நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அழகான அட்டைகள்.. வாழ்த்துகள் உனக்கும் குட்டிக்கும்!!!

    பதிலளிநீக்கு
  8. மாணவர்களின் அன்பையும் பாசத்தையும் பெறவேண்டுமானால் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் எவ்வளவு இனிமையானவையாக இருக்கவேண்டும்? புன்னகை மாறாமல் பணியாற்றும் பல ஆசிரியர்களைப் பார்க்க வியப்பாக இருக்கும். நாம் ஒன்றிரண்டு குழந்தைகளை சமாளிக்கவே பெரும்பாடாய் இருக்கையில் வகுப்பு நிறைந்த குழந்தைகளோடு நாள் முழுதும் பணியாற்றுவதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்யேக கவனமெடுத்து கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் போற்றுதலுக்குரியவர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி கிரேஸ். உங்கள் மகனின் நன்றி நவிலும் அட்டைகள் அழகு.

    பதிலளிநீக்கு
  9. அருமையான யோசனை... அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாப்பூவை ஆசையாய் எங்கள் ஆசிரியைக்கு கொண்டு சென்ற நாட்கள் நினைவில் வருகிறது....

    பதிலளிநீக்கு
  10. @கீதமஞ்சரி : ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான், எப்படி கோபம் ஏதும் காட்டாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வியப்புதான். வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. @எழில்: வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில். ரோசாப்பூ ஆசிரியருக்கு மிகவும் பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய வலைச்சரத்தில் இந்த அருமையான் பதிவு.
    வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே! பல காரணங்களினால் இணையப்பக்கம் வர முடியாமல் இன்று தான் பார்க்கிறேன்..மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  13. கிரேஸ்! உண்மையிலேயே மிக அழகான வாழ்த்து அட்டை!! இது நிறைமதிக்கு பிடிக்கும்:)) இந்த வார இறுதியில் செய்துபார்த்துவிட வேண்டியது தான்:))

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...