மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

 மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்தநாளில் நடத்தப்பட்ட இணையவழிச்  சிறப்பு நிகழ்வில் கவிதை வாசித்த வாய்ப்பிற்கு நன்றியுடனும் மகிழ்வுடனும் இங்கே பகிர்கிறேன். 

'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்

 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின்  'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.

திரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை



திருவாரூர் திரு.வி.க.கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைப்பு: 'நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?' என் உபதலைப்பு: 'காடு' கவியரங்கத் தலைவர்: Na. Muthunilavan | நா. முத்துநிலவன் 12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் .

நான் மட்டும் மாறியிருக்கிறேன்


சடசடத்துப் பெய்யும் மழையும்
பட்பட்டென்று மறையும் குமிழும்
காற்றிலாடும் மரங்களும்
அவற்றில் ஆடும் இலைகளும்

500ஆவது பதிவு பன்னாட்டுக் கவியரங்குடன்




தேன் மதுரத் தமிழில் 500ஆவது பதிவு!
சென்ற வாரம்தான் யதார்த்தமாகப் பார்த்துவிட்டேன் ஐந்நூற்றைத் தொட இன்னும் இரண்டு பதிவுகள் என்று! என்ன எழுதலாம் என்ற யோசனையும் எழுந்தது! கவிதையா? கட்டுரையா? சங்க இலக்கியமா? புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? இதுவா? அதுவா? இப்படியா? அப்படியா? என்று!! அலுவலகப் பணிகளும் குழந்தைகள் பள்ளிக் கடமைகளும் பெருக இதனை பின்னடுப்பில் வைத்துவிட்டேன். நான் விட்டாலும் கவிதை விடாது என்பது போல வந்தது கவியரங்கம் கைகொடுத்து!!
ஒன்றா.. இரண்டா.. கவிதைகள்?
12 நாடுகளிலிருந்து வரும் 16 கவிஞர்களின் கவிதைகளுடன் அரங்கேறுகிறது
  திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி நடத்தும் 
பன்னாட்டுக் கவியரங்கம் அண்ணன் திரு.முத்துநிலவன் தலைமையில்!
என்னுடன் அன்புச் சகோதரிகள்/உறவுகள்  கீதாவும் மைதிலியும்!
இவர்களுடன் சகோதரி பெண்ணியம் செல்வக்குமாரியும் சகோ மீரா செல்வகுமாரும் வலைத்தள நண்பர் யாழ்பாவாணனும்!

கவியரங்கத் தலைப்பு:
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?
என்னுடைய உபதலைப்பு காடு!
என் மனதிற்கு மிகவும் இணக்கமான இயற்கையும் கவிதையும் இனிமையாய் இணைந்து, இதோ என் ஐநூறாவது பதிவு!
தொடர்ந்து இணைந்தும் ஊக்குவித்தும் வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பின் நன்றிகள்!
கவியரங்க அழைப்பிதழ் இங்கே, இணைவதற்கு வேண்டிய தகவல்களுடன்!
இணைய வழியில் இணையுங்கள் நண்பர்களே!
இது நம் திருவிழா!
நன்றி!

விருப்பமுள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைவதற்கு ஓர் இணைப்பு இது.. பயன்படுத்திப் பயன்பெறலாம்! நன்றி!

இணைய மேடை இங்கிதங்கள்

படம்: நன்றி இணையம்

இணையவழி இணைப்புகளில் (Zoom) இணையும் பொழுது நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

நூல்கள் எனும் நுட்ப ஒளி

படம்: நன்றி இணையம் 

கண்டதும் காதல் காணாமல் காதல்

கடிதத்தில் காதல் கணினியில் காதல்

என்னென்னவோ சொல்கிறார்கள்

என் காதல் துளிர்த்ததெப்போது எப்படி?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.