கருங்கடர்க் கொண்டல்


படம்: நன்றி இணையம் 
கீழ்த்திசைக் கதிரோன் கடலெழும் முன்பே
பளிச்சிட்ட ஒளியில் கண்கள் மலர்ந்தேன்
வாள்ஒளி வானம் கீறக் கண்டேன்
வாட்சண்டை வீரர் முழங்கக் கேட்டேன்

கடல் முகந்தக் கரும்பெட்டி உடைபட
கொட்டித் தீர்த்தது கருங்கடர்க் கொண்டல்
பகலும் இருண்டிருக்கே பகலவன் எங்கென்றேன்
ஆழியுடன் தான்பெற்ற மேகங்கள் கடமையாற்ற
களிப்புடன் கண்மூடிக் கடல்சேரச் செல்கிறான்
தெளிந்த வானின் மீன்கள் கண்சிமிட்ட
அலையாடை சலசலக்கக் குளிர்வாளோ அவள்?

6 கருத்துகள்:

  1. அர்த்தமுள்ள, ஆழமான, இரசனையான, ஈர்ப்பான வரிகள் பொதிந்த கவிதை.

    வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...