மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இலக்கியச் செல்வங்களை
தேடிக் கண்டுபிடித்துத் தூசி தட்டி அச்சில் ஏற்றி
தமிழ் இலக்கியத்தை உயிர்ப்பித்த தாத்தா!
சிலப்பதிகாரத்தின் சிலம்பொலியும்
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்
நமக்கு எட்டிப் போகாமல் பக்குவமாய்ச் சேர்த்த தாத்தா!
மகாத்மாவும் தாகூரும் போற்றி வியந்த தாத்தா
பெரும் புலவன் பாரதி 'கும்பமுனி' என்று போற்றிய தாத்தா
'மகாமாஹோப்பத்தியாய' என்ற ஆசானுக்கெல்லாம் ஆசான் பட்டமும்
தக்சின கலாநிதி பட்டமும் பெற்ற தாத்தா!
பல நூல்கள் வெளியிட்ட தாத்தா
வட இசையின் ஆதிக்கச் சூழலில் தமிழ் இசையை
வெளிக்கொணர்ந்த அன்பு தாத்தா!
கடைசி மூச்சு வரை தமிழுக்கு அர்ப்பணித்த
இந்த தாத்தா இல்லையேல் இன்று தமிழ் இலக்கியம் இல்லை
தமிழன் என்று நாம் பெருமை பேச நூல்களும் இல்லை!
இத்தனை அரும் செயல் செய்த தாத்தா
உ.வே.சாமிநாதய்யர் என்று பெயர் கொண்ட எம் தமிழ் தாத்தா!
அவரின் பிறந்த தினமான இன்று அவருக்கு நினைவாஞ்சலி!
கலக்குரிங்க கிரேஸ் .. நம் தமிழ்க்கு பெரும் பணியாற்றிய உ.வே.சாமிநாதய்யர் அவர்களை பலரும் மறந்த நிலையில், அவர் பிறந்த நாளை மனதில் வைத்து அவருக்கு நினைவாஞ்சலி தந்தது மிக மிக அருமை. என்றும் தொடரட்டும் உங்கள் பதிவுகள் :-)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி! வேர்களைத்தேடி வலைப்பதிவில் முனைவரின் இடுகையைப் பார்த்தவுடன்தான் நினைவு வந்தது. http://www.gunathamizh.com/2013/02/blog-post_18.html
நீக்குஅதனால் நன்றி அவருக்கே! :-)
வரிகள் மேலும் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
நீக்குமகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கக் காரணமான 41 பழந்தமிழ் இலக்கியங்களில் 17நூல்களை முதன்முதலாகப் பதிப்பித்த பெருமைக்குரிய அந்த தமிழ்த்தாத்தா பிறந்த பிப்ரவரி-19இல், தஞ்சைப் புத்தகக் கண்காட்சியில் அவரது “சமயம் கடந்த தமிழ்த்தாத்தா அவர்களின் தமிழ்ப்பணிகள்” குறித்துப் பேச என்னை அழைத்திருந்தார்கள். அந்த மேடையில் நான் பேசியதும், நண்பர் கரந்தையார் வீட்டுக்கும் சென்றுவந்ததும் பசுமையாக நெடுநாள் நினைவிருக்கும். உங்களின் எளிமையான நினைவாஞ்சலிக்கு உண்மையில் மதிப்பு மிக மிக அதிகம் சகோதரி. நன்றி.
பதிலளிநீக்குபோன வருடத்தின் இப்பதிவைக் கண்டு படித்து கருத்திட்டமைக்கு உளமார்ந்த நெகிழ்ச்சியுடன் நன்றி ஐயா! உங்கள் பேச்சைப் பதிவாக இடுவீர்களா? ஆவலாக இருக்கிறது..
நீக்குகரந்தை சகோதரர் வீட்டுக்குச் சென்றது மகிழ்ச்சியானது என்று புரிகிறது ஐயா...வலைத்தளம் பல நல்ல உறவுகளையும் நட்புகளையும் தருகிறது.
உங்கள் கருத்துரை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஊக்குவிக்கவும் செய்கிறது ஐயா , சிரம் தாழ்ந்த நன்றிபல!