கோடிக்கோடியாய் பணம் சேர்ப்பதா உண்மைச் செல்வம்? அதனினும் பெரிது தன்மானம் இல்லையா? இதனை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் நம் அவ்வையார். நான்கு கோடி பாடல் ஒரு இரவுக்குள் இயற்றவேண்டும் என்ற ஒரு சவாலைச் சந்தித்த சூழலில் இப்பாடலைப் பாடியிருக்கிறார் அவ்வையார். என்னே ஒரு நுண்மதி! இதோ அந்த பாடல்...
மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்உண் ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்
தன்னை மதிக்காதவர்கள் வீடு தேடி செல்லாமல் இருப்பது கோடி பெறும் உணவு உண்ணுங்கள் உண்ணுங்கள் என்றுத் தாங்கி உபசரிக்காதவர்கள் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பதே கோடி பெறும்.
கோடி கொடுத்தாலும் நன்மக்களோடு நட்பு வைத்துக் கொள்ளவேண்டும்.
கோடிக்கு மேல் கோடி கொடுத்தாலும் தன்னுடைய நாக்கின் வாக்கு தவறாமல் காப்பது கோடி பெறும்.
இதற்கு மேல் ஆணித்தரமாக தெளிவாகச் சொல்வது கடினம் என்றே கருதுகிறேன். அவ்வையின் சொல்லாட்சியைக் கண்டு வணங்கி வியக்கிறேன்.

எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலான அவ்வையின் நல்வழி கூற்றுகளை பகிர்ந்தமைக்கு நன்றி :-)
பதிலளிநீக்குஈடில்லா கோடிகள்...
பதிலளிநீக்குநன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
நீக்கு