பொன்றாக் காதல்

உன் மீதானக் காதலை கல்வெட்டுகளில் செதுக்கவில்லை 
நிலம் அல்லது நீரின் அடியில்அமிழ்ந்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலைக் கட்டிடமாய் நிர்மாணிக்கவில்லை 
இயற்கைச் சீற்றங்கள் அழித்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலைப் புத்தகமாய் வெளியிடவில்லை 
மங்கியோ  கிழிந்தோ அழிந்து  விடுமோ என்று;

உன் மீதானக் காதலைக் கணிப்பொறியிலும் பதிக்கவில்லை 
கணிப்பொறியின் நச்சுநிரல் அழித்து விடுமோ என்று;

உன் மீதானக் காதலை இணையத்திலும் இணைக்கவில்லை 
பிணையக் கோளாறு ஏதேனும் நிறுத்தி விடுமோ என்று;

ஆதலால் உன் மீதானக் காதலை என் சுவாசத்தில் நிரப்புகிறேன் 
அசைவளியில் கலந்து பொன்றாக் காதலாய் என்றும் நிலைத்திருக்கும் என்று!

9 கருத்துகள்:

  1. ஆஹா !! அற்புதம்.. அற்புதம் :)

    பதிலளிநீக்கு
  2. ''..அசைவளியில் கலந்து பொன்றாக் காதலாய் என்றும் ...''
    மிக அருமையான கவிவரிகள் .
    இனிய அன்பர்கள் தினவாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே!
      உங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்!

      நீக்கு
  3. //உன் மீதானக் காதலைப் புத்தகமாய் வெளியிடவில்லை
    மங்கியோ கிழிந்தோ அழிந்து விடுமோ என்று
    உன் மீதானக் காதலைக் கணிப்பொறியிலும் பதிக்கவில்லை
    கணிப்பொறியின் நச்சுநிரல் அழித்து விடுமோ என்று;;//
    ஏன் பா இப்படி எல்லாம் எழுதுறிங்க ?
    பொறாமையாவும் ,பெருமையாவும் இருக்கு //அசைவளியில் கலந்து பொன்றாக் காதலாய் என்றும் நிலைத்திருக்கும் என்று!// வாழ்க தோழி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  4. அழகான வார்த்தைப் பிரயோகங்கள்! அழிந்துவிடக்கூடிய பொருட்களின் முன் அழியா அன்பை முன்னிறுத்திய பாங்கு வியக்கவைக்கிறாது. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...