இரலை காண்பேனோ

இரலையொடு உகள துள்ளிச் சென்ற 
மடமான் மடமையாய் சாலையைக் கடந்ததோ!
அடி பட்டு வீழ்ந்திருக்கிறதே! துயர்கண்டு வருந்திய முகில் 
மட மட என மழை பொழிகின்றதோ!

கானம் செழித்த சிறு தூரத்தில்
அன்பு நெஞ்சோடு மடமானைத் தேடி 
நிற்கும் திரிமருப்பு இரலை காண்பேனோ
அதன் துயர் நீக்க என்ன சொல்வேன் மடந்தை நானே!

3 கருத்துகள்:

  1. அருமை. உங்க தமிழ் புலமை ஆச்சரியப்பட வைக்கிறது கிரேஸ். இரலை, உகள, திரிமருப்பு போன்ற சொற்களை தெரிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கத்தமிழ் நூல்கள் படிப்பதால் கற்றுக் கொண்டவை ஸ்ரீனி! இந்தச் சொற்கள் முல்லைப்பாட்டில் உள்ளன. நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.