என் தமிழை, உலகமே கேள்!

என் தாய் மொழியாம் தமிழ் எவ்வளவு மேன்மை உடையது
பேசுவதற்கான ஒரு மொழி மட்டுமா என் தமிழ்?
இல்லை இல்லை - எவ்வளவு சிறப்பு மிக்கது 
என் வரலாறை இனிதாய்ச் சொல்கிறதே 
என் மூதாதையர் வாழ்வை கண் முன் விரிக்கிறதே
கடந்து சென்ற சில ஆண்டுகள் மட்டும் அல்ல 
என் வம்சத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை 
என் முன்னோர் வாழ்ந்த இனிய அறம் மிக்க வாழ்வைச் சொல்கிறதே
இயற்கையோடு இணைந்த இனிய வாழ்வு முறையைச் சொல்கிறதே
இவ்வளவு சிறந்ததா என் குடி?
இவ்வளவு சிறந்ததா என் முன்னோர் வழி? 
இவ்வளவு தொன்மையானதா என் மொழி?
என் பிறப்பிலே எனக்கு அகந்தை அளிக்கிறதே 
என் மொழி தமிழ் என்பதால் அணுக்களில் ஒரு பரவசம் பாய்கிறதே 
குருதியில் ஒரு புத்துணர்ச்சி ஓடுகிறதே!
உலகமே கேள்! பிற மொழியினரே கேளுங்கள்!
என் இனிய தமிழ் மொழியை அறிந்து கொள்ளுங்கள் 
என்று முழங்கும் இறுமாப்புத் தருகிறதே
மகிழ்ச்சியில் கண்கள் குளமாகின்றனவே 
என் தமிழே! என் தமிழே! என இதயம் துடிக்கிறதே
தமிழை உயர்த்த சிறுபிள்ளை நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை 
ஆனால் கட்டித் தழுவி என்னுடன் வைத்துக் கொள்வேனே 
பாருங்கள் என் பெருமையை என்று பறை சாற்றிக் கொள்வேனே!
என் தமிழை அதன் தொன்மையை அதன் பெருமையை 
மென்மேலும் கற்பேனே உலகமெல்லாம் சொல்வேனே 
இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழில் சேர்ப்பேனே 
புதிய கண்டுபிடிப்புகள் தமிழில் செய்வேனே 
உலக மனிதரெல்லாம் தமிழ் அறிவார் என்ற நாள் வரும் 
அன்று என் தமிழ் அன்னை பூரித்து மேலும் செழிப்பாளே!

14 கருத்துகள்:

  1. அருமை..அருமை கிரேஸ். என் பார்வையில் இது உங்கள் படைப்புக்களில் முதன்மையானது. உணர்ச்சி மிக்க அற்புதமான வரிகள். உங்கள் தமிழ் பற்று மற்றும் புலமை வியக்க வைக்கிறது கிரேஸ். என்றும் தொடரட்டும் உங்கள் பதிவுகள், அது என் போன்றவர்களின் தமிழ் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! சங்க இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது தோன்றிய உணர்ச்சிதான் இக்கவிதை. :-)

      நீக்கு

  2. -- தமிழ் இனிய மொழி.காலத்தால் அழியாது.வெந்தணலால் வேகாது.அறிவு,வருமானம் என்று வருபொழுது வருமானம் வரும் மொழியே இளைஞர்கள்
    விரும்புவர். அந்தக்காலத்து மன்னர்கள் சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தனர்.இந்தக்காலத்து அமைச்சர்கள் ஆங்கிலப்பள்ளி திறந்து வைப்பதும் தன வாரிசுகளை ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதையும் ஆனந்தமாக கருதுகின்றனர்.திரைப்படத்தலைப்பு தமிழில்.பாடல்.டேக் இட் பாலிசி.ஆகையால் மொழி கலப்பு இருக்கும்.பற்றாளர்கள் இருப்பார்கள். தமில்வளரும்.ஆனால் தமிழ் ஆசிரியர்கள் தன பிள்ளைகளை தமிzaசிரியராக்க மாட்டார்கள்
    ananthako.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சேதுராமன்! நீங்கள் கூறியிருப்பது உண்மை. ஆனால் நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  3. சிறப்பான வரிகள்...

    சில வரிகள் வாசிக்கும் போது பெருமையாக இருந்தது...

    வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! இந்த உணர்ச்சியை சில மனங்களிலாவது விதைக்க வேண்டும் என்பது என் ஆசை!

      தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி!

      நீக்கு
  4. அருமை அருமை..

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளச் செய்யும் கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  5. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளச் செய்யும் கவிதை நன்று
    surendran

    பதிலளிநீக்கு
  6. பெருமிதம் கொள்ள வைக்கும் பதிவு .
    அருமை !

    பதிலளிநீக்கு
  7. அன்பின் கிரேஸ் - அருமையான சிந்தனையில் எழுந்த அழகுக் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...