துளிர் விடும் விதைகள் - கீதமஞ்சரியின் பார்வையில்

அன்புத்தோழி கீதமஞ்சரி அவர் தன் தளத்தில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியுள்ளார்கள். அப்பதிவைப் பார்த்து மகிழ்ந்து உள்ளம் நிறை மகிழ்ச்சியுடன் இங்கே பகிர்கிறேன். தோழியின் தளத்தில் பதிவைப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.


தோழி கீதமஞ்சரி கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், கட்டுரைகள், தான் வாழும் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் அரிய விலங்கினங்கள், கதைகள் என்று பல்சுவையாக எழுதுவதோடு, அதீதம், வல்லமை போன்ற இணைய இதழ்களிலும் கலக்குபவர். அவர் என் கவிதைத் தொகுப்பைப் படித்து அன்புடன் பதிவிட்டிருப்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி தருகிறது. நன்றி கீதமஞ்சரி.

16 கருத்துகள்:

  1. சகோதரி கீதமஞ்சரிக்கு நன்றியும் பாராட்டுகளையும் சொல்லி அங்கேயே பின்னூட்டமிட்டேன்பா... அங்கே போனால் ஒரே பெண்கள் கூட்டம்!. பொதுவாகப் பெண்கள் பொறாமைக்காரர்கள் என்பது எவ்வளவு பொய் என்பதையும் கீதமஞ்சரியின் மதிப்புரையினைப் பாராட்டியும் உனது கவிதைகைளுக்கு வாழ்த்துச் சொன்ன கவிச்சகோதரிகளின் அன்பு கண்டேன் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா. பெண்கள் பொறாமைக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் மாயை அண்ணா :)
      அன்பு பாராட்டும் பல தோழியர் வலைத்தளத்தின் மூலம், மிக்க மகிழ்ச்சி அண்ணா.

      நீக்கு
    2. தங்களுடைய மனம் நிறைந்த பாராட்டு கண்டு நெகிழ்வும் மகிழ்வும். மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. அங்க பாத்துட்டேன். கம்மென்ட் போட்டுட்டேன். ட்ரீட்டுக்கு ஒரு நாள் டைம் கொடுங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேத்துல இருந்து ட்ரீட் கு காத்துட்டு இருக்கேன் டியர்..எங்க? எங்க? எங்க? :)
      என் தோழி கூட நேரம் என்பதே ட்ரீட், இதுல அவர் தரும் ட்ரீட் வேற..ஒரு நாள் என்ன, ஒரு வாரம் உங்களுக்குத்தான் :)

      நீக்கு
    2. ட்ரீட்டை பார்த்துடீங்களா???

      நீக்கு
    3. பார்த்து மகிழ்ந்து நெகிழ்ந்து போயிருக்கிறேன் டியர்..கவிதை அருமையோ அருமை..உங்கள் அன்பும் நட்பும் ஒவ்வொரு வரியிலும்! நன்றி டியர் .

      நீக்கு
  3. சென்று படிக்கிறேன்.,.

    சகோதரி கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. என் பதிவில் வெளியிட்ட கையோடு உங்களுக்குத் தெரிவிக்க மறந்தேபோனேன். ஆனாலும் நீங்கள் வந்து பதிவைப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கிரேஸ். நான் அப்பதிவில் குறிப்பிட்டதுபோல் இலக்கியநயம் வாய்ந்த கவிதைகளை நிறைய எழுதி அடுத்த தொகுப்பாக வெளியிடவேண்டும் என்பது என் அவா. துளிர் விடும் விதைகளை வாசிக்க வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு என் அன்பான நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான நேரத்திற்கு நான் பார்த்துவிட்டேன் கீதமஞ்சரி..டெலிபதி :)
      கண்டிப்பாக நிறைய எழுதுகிறேன்..உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  5. தங்களது நூலைப் பற்றிய விமர்சனத்தைக் கண்டேன். நான் தங்களது கவிதை நூலைப் படித்துவிட்டேன். விரைவில் எழுதுவேன். கீதமஞ்சரி மிகவும் சிறப்பாக மதிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். தங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா, உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...