துளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான். 

நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். 

மொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.  

என் நூல் வெளியீட்டில் வாழ்த்திப் பேசிய கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை, அண்ணாவின் மலர்தரு வலைத்தளத்தில். 

கஸ்தூரி அண்ணாவிடம் பேச முடியாமல், அன்புத்தோழி மைதிலி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும், வாழ்த்திப் பேசுமாறு கேட்டுவிட்டு, நூல் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்பாகத்தான் அலைபேசியில்  பேசினேன். பல வேலைகளுக்கிடையிலும் அன்புடன் இசைந்து, கவிதைகளைப் படித்து வாழ்த்திய அண்ணாவிற்கு மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
கிரேஸ் பிரதிபா 

16 கருத்துகள்:

  1. உன் சொந்த ஊர் எதுவென்று எங்களுக்குத் தெரியாது கிரேஸ். ஆனால், உனக்குப் புதுக்கோட்டையில் நிறையச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று வலைப்பக்க உறவுகள் வாழ்த்துகின்றன. எனவே, எப்போது வந்தாலும் புதுக்கோட்டையை உன் பயணப்பட்டியலில் சேர்த்துக்கொள். தொடர்ந்து எழுது, தமிழால் இணைந்திருப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, புதுக்கோட்டைச் சொந்தங்கள் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கண்டிப்பாக வருவேன் அண்ணா..உங்கள் அனைவரையும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் சந்திப்பதை மிஸ் பண்ணுவேன். இணையத்தில் இணைந்திருப்போம்..
      தொடர்ந்து எழுதுவேன் அண்ணா..நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாம், உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி..அமேரிக்கா வந்தால் தெரியப்படுத்துங்கள்..
      நன்றி சகோ

      நீக்கு
  3. தங்கள் புத்தக வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக
    இருந்தது.
    வாழ்த்திப் பேசிய்வர்களின் பேச்சை முழுமையாக
    நேரமின்மையால் பேசிக் கேட்க முடியாமல் போனது
    என்னைப்போன்றே பலருக்கும் மிக வருத்தமே

    கவிதைகளும் பதிப்புகளும் தொடர மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா..உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி. மேடையிலிருந்ததால் பேச முடியவில்லை. துவக்கத்திலிருந்தே ஊக்கம் கொடுத்து வரும் உங்களுடன் நேரில் பேச வேண்டும் என்று நினைத்து வந்தேன்..முடியாமல் போனது.. :(
      உங்கள் வாழ்த்திற்கு நன்றி ஐயா

      நீக்கு
  4. ஒரே பாராட்டு மழை தான் போங்க .. எப்படி இன்னும் தரையில் இருக்க முடிகிறது கிரேஸ் :).

    உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு .. உங்க திறமைக்கு கிடைக்கும் இந்த ஆங்கிகாரம், உங்களை மேலும் பல சாதனைகள் புரிய வைக்கும் என்பதில் ஒரு ஐயமுமில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீனி, நான் என்னைக் கூர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை ஸ்ரீனி..பாராட்டுகள் எல்லாம் நண்பர்களின் அன்பைச் சொல்கிறது..நான் மெருகேற்ற வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது ஸ்ரீனி.

      நீக்கு
  5. மதுரை நிகழ்வில் தங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சி ஐயா..மிக்க நன்றி. நீங்கள் சொன்னவர்களின் பணியைத் தேடிப்பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  6. கிரேஸ்சும்மா உங்களையெல்லாம் மேடையில் பார்த்து ரொம்பவே சந்தோஷப் பட்டேன்டா. ரொம்பவே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் கணினி கையை விட்டு விட்டது. ஆனாலும் எல்லோரையும் சந்தித்தது போலவும் நீண்ட நாள் பழக்கம் போலவுமே தோன்றுகிறது. சாதித்து விட்டீர்கள் பாராட்டுக்கள் மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்மா ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி இனிய தோழியே! உங்களைத்தான் முகநூலில் தேடிக்கொண்டிருந்தேன்.
      உங்கள் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி..

      நீக்கு
  7. மதுரையில் தங்களின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டுவந்த நம் நண்பர்கள் தங்களின் நூல் குறித்து வெளியிடுவதை பார்க்க பார்க்க ஆசை அதிகரிக்கிறது படிப்பதற்கு.

    நேரடி ஒளிபரப்பு என் கணினியில் வரவில்லை. முயன்று தோற்றது தான் மிச்சம்.

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி.

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள், இன்னும் பல்வேறு தளங்களில் இருந்து உருவெடுக்கும் படைப்புகளை படைக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள். புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவலை முடிந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...