Sunday, March 2, 2014

விழிப்பாய் இரு தோழி!

ஓநாய்கள் உலவும் சமூகத்தில்
விழிப்பாய் இரு தோழி!
அங்கும் இங்கும் இல்லை
எங்கும் கொடுஞ் செய்தி கேட்டும்
நரியின் குகைக்குள் செல்வாயோ தோழி?
பரி(பாதுகாப்பு) பற்றி ஆய்ந்து செயல்படு தோழி!
வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி?
அஞ்சி ஒழியச் சொல்லவில்லை
வஞ்சம் இருப்பதறிந்து விழிப்பாய் இரு தோழி!
சாதனை பல நீ சாதிக்க இருக்க
பாதகம்  செய்வார் பற்றி விழிப்பாய் இரு தோழி!


முகநூலும் இன்னும் பல சமூக வலைகளும் பயனுள்ளதாய் இருந்தாலும் அங்கிருக்கும் ஆபத்துகளையும் அறிந்து செயல்பட வேண்டாமோ?
படிக்கும் சில செய்திகள் இதை எழுத உந்தியது..

37 comments:

 1. அவசியம் நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டிய அரிய எச்சரிக்கை.
  “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
  கேள்போல் பகைவர் தொடர்பு“-குறள்-882 என்னும் குறள்பொருளையும் சேர்க்க வேண்டும்.(ஒரு சிறு திருத்தம், பாதகம் என்னும் சொல்லைத்தான் பாதனை என்று பொட்டிருக்கிறீர்களொ? அப்படி ஒரு சொல்லாட்சி இல்லையே? புதிய சொல்?)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!
   பாதகம் என்று மாற்றிவிட்டேன்..சாதனை எழுதிவிட்டு அப்படியே பாதனை என்று எழுதிவிட்டேன்..சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி!

   Delete
  2. தங்களின் பெருந்தன்மைக்கு நன்றி சகோதரீ. பொதுவாக இப்படிச் சொல்லும்போது தவறாக எடுத்துக்கொள்ளும் உலகில் நீங்கள் தனீரகம்தான். மிக்க மகிழ்ச்சி.“ பணியுமாம் என்றும் பெருமை“-குறள். என் மதிப்பில் நீங்கள் மேலும் உயர்ந்துவிட்டீர்கள். நன்றி நன்றி.

   Delete
  3. தவறை ஏற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது...
   நன்றி ஐயா!

   Delete
 2. சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் தோழி!!

  ReplyDelete
 3. சரியாச் சொன்னீங்க.... " மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" அப்படின்ற மாதிரி தோழியை ஆக்ரோஷம் காட்டச் செய்திருக்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான்..ஆனால் ஒரு செய்தியைப் படித்தவுடன் ஏன் பெண்கள் விழிப்பாய் இல்லை என்ற ஆதங்கமே மேலோங்கியது..
   உங்கள் கருத்துரைக்கு நன்றி எழில்!

   Delete
 4. சரியான விழிப்புணர்வு வரிகள்...

  ReplyDelete
 5. சமூகத் தளங்களில் மட்டுமல்ல ,சாலையிலும் இருக்கட்டும் விழிப்பு !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. நன்றி பகவான்ஜி..
   உண்மைதான், எங்கும் விழிப்பு அவசியம்.

   Delete
 6. எங்கும் பாதுகாப்பு என்பது நமது கைகளிலே தான் உள்ளது....

  பெண் பாதுகாப்புக் கவிதை அருமை...

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி வெற்றிவேல்.

   Delete
 7. நல்ல விழிப்புணர்வு கவிதை! வாழ்த்துக்கள்! பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம்தான்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ். கூகிள் ப்ளஸில் பகிர்ந்ததற்கும் நன்றி!

   Delete
 8. சாதனை பல நீ சாதிக்க இருக்க
  பாதனை செய்வார் பற்றி விழிப்பாய் இரு தோழி!
  >>
  விழிப்பாய் இருக்க வழிமுறைகளைச் சொல்லித் தந்தாலும் பாவம் சில பெண் ஜென்மம் சிதைந்துதான் போகுதே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ராஜி..வருத்தமாக இருக்கிறது.
   உங்கள் கருத்துரைக்கு நன்றி!

   Delete
 9. நிச்சயம் இந்த வரிகள் ஒவ்வொன்றும் மனதில் கொள்ள வேண்டியவைதான். பல நரிகள் முகமூடி அணிந்து உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. விழிப்புணர்வு தீபத்தை ஏந்திய கவி வரிகள் நன்று!

  ReplyDelete
 10. மிகவும் அவசியமான கவிதை ... அர்த்தமிகுந்த வரிகள்

  ReplyDelete
 11. அருமை, பொருத்தமான வரிகள் சிறப்பு

  ReplyDelete
 12. ஏம்பா, பொண்ணுங்களால பாழாப் போகுற இளைஞர்களுக்கு கரை செர்க்குற மாதிரி ஏதாவது எழுதுங்கப்பா..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி...
   உண்மைதான், அதற்கும் எழுதத்தான் வேண்டும்.

   Delete
 13. //காண்பது எழுத்தாகி வந்துவிடும் சிலநேரம்!..// என்று வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்ற மடலில் - தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.

  அனைவருக்கும் இது கைகூடுவதில்லை!..

  அங்கே அறிமுகத்தில் -
  தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகள் அனைத்தையும் வாசித்து விட்டு - நெடுநாட்களுக்குப் பின் நல்ல தமிழ்க் காற்றை தங்கள் தளத்தில் சுவாசித்து விட்டு
  மகிழ்ந்தேன். மனம் நெகிழ்ந்தேன்..

  வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி! நான் குறிப்பிட்டப் பதிவுகள் அனைத்தையும் நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கும் நன்றிகள்.

   Delete
 14. நல்ல கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. "அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா” என்றொரு பழைய திரைப்படப் பாடல் வரி நினைவுக்கு வருகிறது. இங்கு “அஞ்சுவது” என்பது “விழிப்பாய் இரு” என்பதன் மறு பக்கமே. “போகாத இடந்தனிலே போக வேண்டாம்” என்னும் உலகநீதி வரியும் இது போன்ற அறிவுரையே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

   Delete
 15. சிறப்பான அறிவுரை.... பல சமயங்களில் இந்த இணையம் ஆபத்தினை உண்டாக்கிவிடுகிறது......

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், கவனமாக இருக்கவேண்டும்.
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி வெங்கட்.

   Delete

 16. சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல்

  ReplyDelete
 17. Grace

  manadhukkul mettamaithu paadiye vitten....arumaiyana vizhippunarvu vidhaikkum paadal.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரிமளா, அப்படியே எனக்கும் அனுப்பிவிடுங்க.. :)

   Delete
 18. Sandhamum sindhanaiyum arumai...

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...