நான்தான் இல்லை... நானும்தான்

ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டித் தண்ணியா?
என்றேன்

அட போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள்

நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன்

33 கருத்துகள்:

  1. அட..சூப்பர் பதில் போங்க :). இந்த சிந்தனை எல்லாருக்கும் வரணும்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருவரும் இதுபோல் உறுதி எடுத்தால், குடிநீர் பஞ்சம் என்பதே இருக்காது.

    அழகான கவிதை , பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  3. அருமை... ஒவ்வொருத்தரும் உணர வேண்டும்...

    எங்கள் ஊருக்கு வந்தால் உடனடியாக உணர்வார்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் கஷ்டம்தான்..டான்கர் தண்ணி வாங்கி ஊத்துரோம்...ஆனா குழாய்ல வருதுல..சிலருக்குப் புரிய மாட்டேனுது..
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. //..நானும்.. தான்.. //

    நல்ல நயமான கவிதை!..

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான சிந்தனை ரசிக்க வைத்த விழிப்புணர்வுப் பகிர்வுக்கு
    மிக்க நன்றி சகோ .த.ம 3

    பதிலளிநீக்கு
  6. ஒரு வரியிலல்ல, ஒரே சொல்லில் கூட பொருளை அமுக்கி அமுக்கி வைக்க முடியும் என்னும் சொல்லோவியக் கவிதை. (நன்றி -ஆழ அமுக்கி முகக்கினும் - அவ்வை, சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வச்ச கவிப் புலவா! -கம்பனை வைரமுத்து)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் அவ்வை மற்றும் வைரமுத்துவின் வரிகளுக்கும் உளமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு
  7. உண்மை உரைக்கும் கவிதை! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதில் மற்றும் கவிதை கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  9. நாமும் தான்மா.நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  10. நல்ல சிந்தனை.... அனைவரும் தண்ணீர் சிக்கனத்தினைக் கடைபிடித்தால் தான் வரும் காலத்தில் குடிக்கவாது தண்ணீர் மிஞ்சும்!

    பதிலளிநீக்கு
  11. விழிப்புணர்வுக் கவிதை சூப்பர்... தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஒரு வரியில் இவ்வளவு செய்தியைச் சொல்லமுடியுமா? முடிகிறதே. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. தண்ணீர் சிக்கனத்துக்கு அட்டகாசமான கவிதை கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  14. காத்தல் அனைவரின் கடமை...
    நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான சிந்தனையும் விழிப்புணர்வுக் கவிதையும் வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  16. சிறு துளி பெருவெள்ளம். சிறு முயற்சிகள் பெருஞ்சாதனை. அனைவரும் விரைவில் அறியுங்காலம் வரவேண்டும். அற்புதமான கவி வரிகள். பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..ஒவ்வொரு துளியும் பார்த்து பயன்படுத்தவேண்டும். உங்கள் கருத்துரைக்கு நன்றி தோழி.

      நீக்கு
  17. நல்ல கருத்துக்கு சிக்கனமே பார்க்காமல் த ம வோட்டு போடுவதே என் வழக்கம் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  18. எங்க ஊரில் தண்ணீரை ஊதாரியா செலவு பண்ணினால், யுட்டிலிட்டிஸ் (சூவர்) பில் அதுக்கேற்றார்போல் ஏற்றி "தண்டனை" கொடுப்பாங்க. You sewer/garbage disposal bill is based on how much water you consume. அதனால தண்ணீர் விசயத்தில் "கஞ்சமாகவும்" சிக்கனமாகவும் இருக்கவங்கதான் கொறைஞ்ச காசு செலுத்துவாங்க. நான் சிக்கனமா இருக்க முயல்வேன். :) But there is no scarcity for water here. :)

    However it is true we are irresponsible when it comes to voting in the election and wasting water and all. Because we think and believe that JUST ONE PERSON CAN NOT MAKE A DIFFERENCE! But sure we can, if we all think alike and be responsible! Your effort should be appreciated, Grace :)

    Nice poem, Grace.

    p.s: I dont show up here these days because you have already become a "popular blogger", Grace. Congrats! You might not know I usually keep off from "big people" to help them serve better! JK :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்படியாவது மக்கள் சிக்கனமா இருப்பாங்க நீர் விசயத்துல. நீங்க சொல்றது உண்மைதான்..நான் செய்றதுனால என்ன பெரிய மாற்றம் வந்துரும்னு எல்லாரும் நினைக்கிறாங்க..அது மாறனும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வருண். ஹாஹா நான் பெரிய ஆள் எல்லாம் இல்லை...உங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...