மனித இனம் இருந்தால்தானே?

நேற்று
உலக சிட்டுக்குருவி தினம்
இன்று
உலக வன தினம்
நாளை
உலக தண்ணீர் தினம்

அடுத்த மாதம்
உலக பூமி தினம் (ஏப்ரல் 22)
அடுத்து
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5)
அடுத்து
உலக புலிகள் தினம் (ஜூலை 29)


எத்தனை தினம் வேண்டும்
மனிதா நீ உணர?
இந்நிலை தொடர்ந்தால்
'உலக மனிதர் தினம்'..?...
இல்லையில்லை
அப்படியொன்றைக் கொண்டாட
மனிதஇனம் இருந்தால்தானே?

42 கருத்துகள்:

  1. வலி நிறைந்த கவிதை வரிகள் அருமை !
    வாழ்த்துக்கள் சகோ .த .ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலிப்பது உண்மைதான் சகோதரி...
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமை கிரேஸ் ... சிந்திக்க வைக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு
  3. உண்மையிலே அப்படித்தான் நடக்கப் போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நடக்காமல் ஒவ்வொரு மனிதனும் விழித்துக்கொள்வான் என்று நம்புவோம். உங்கள் கருத்துரைக்கு நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
    2. உறங்கிக் கொண்டிருந்தால் அல்லவா விழிப்பதற்கு..
      வில்லங்களை செய்வது - விழித்துக் கொண்டே அல்லவா!..

      நீக்கு
    3. உண்மைதான்..அறிந்தே செய்யும் கேடுகள்....

      நீக்கு
  4. மனிதன் ஒழிந்த தினம் என்ற ஒன்றை ஒட்டு மொத்த பிற ஜீவராசிகளும் கொண்டாடினாலும் வியப்பில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டு மொத்த உயிர்களும் இருந்தால் மகிழ்ச்சிதான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
    2. மறுபடியும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றி வந்தால் நல்லது!..

      நீக்கு
    3. அப்பொழுதேனும் ஒழுங்காய் இயற்கையோடு இயைந்தே வாழவேண்டும். நன்றி ஐயா.

      நீக்கு
  5. மனித இனம் மட்டும் உருவாகவில்லையென்றால் இன்று கெமிக்கல் பொல்லுஷன், ரேடியோ ஆக்டிவ் பொல்லுஷன், ஓஷோன் லேயர் டேமேஜ் எதுவுமே இருந்து இருக்காது! சுத்தமான நீர் கிடைக்கும்! மணமான காற்று வீசும்! அது மட்டுமன்றி விலங்குகள் பறவைகள் எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்கும். நாய்களும், பூனைகளும் அவைகளுக்குள் சந்தோஷமாக வாழும்- மனிதன் என்னும் அரக்கர்களால் ஆண்மை இழக்காமல். மனித இனம்தான் எல்லா இயற்கை இழிநிலைக்கும் காரணம். நாம் மனிதர்கள் என்பதால் நம்மை உயர்வாக சொல்லிக்கொள்வது அறியாமை, அநாகரிகம். தான் அழகு என்றும், தான் உயர் சாதி என்றும், நான் உயர்ந்தவன் என்றும் சில பதர்கள் சொல்லிக் கொள்வதுபோல் நகைக்கத்தக்க ஒன்று. மனித இனம் செத்து ஒழியட்டும்! விரைவில் இந்த பூமிக்கு விடிவுகாலம்பிறக்கட்டும் என்பேன் நான்! :)

    என்னை இப்படி ஒரு பின்னூட்டமிட தூண்டிய கவிதை, உங்களுடையது! :) வாழ்த்துக்கள்! :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...மனிதன் வளர்ச்சிக்கு என்று செய்த கெடுதி நிறையதான். ஆறு அறிவு என்று சொல்லிக்கொண்டு, அந்த அறிவால் மற்ற உயிர்களை வாழவிடுவதில்லை.
      ஐயையோ, என்ன இப்டி செத்து ஒழியட்டும்னு சொல்லிட்டீங்க.. :)
      உங்கள் கருத்துரைக்கு நன்றி வருண்.

      நீக்கு
    2. “ஐந்து பெரிது, ஆறு சிறிது“ என்னும் வைரமுத்துவின் கவிதையைத்தான் திரு வருண் அவர்களின் ஆழமான கருத்துரை நினைவூட்டுகிறது. உங்கள் கவிதை அப்படி அவரை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. பாராட்டுகள். இரண்டு உலகப்போருக்குப்பிறகு மூன்றாம் உலகப்போர் அனேகமாகத் தண்ணீருக்காக நடக்கலாம் என்கிறார்கள். அப்படியெனில் நாலாம் உலகப்போர் நடக்காது! (மூன்றாம் உலகப்போரில் எல்லாம் அழிஞசு..?)

      நீக்கு
    3. ஆமாம், உண்மையை ஆழமாகப் பதிந்து வாழ்த்தியும் இருக்கிறார் வருண்..அவரின் வாழ்த்திற்கும் உங்கள் பாராட்டிற்கும் நன்றி.
      உலகப்போர் பற்றி அப்படித்தான் சொல்கிறார்கள், நடந்துவிடும்போல இருக்கிறதே..நான்காம் உலகப்போர் வழியே இல்லை..டினோசார் காலத்திற்குப் பிறகு உயிர்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது போல ஏதாவது நடந்தாலும் நடக்கலாம், போதுமடா சாமி என்று பூமி வெறுமையானாலும் ஆகலாம்.....
      உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  6. மனிதர் தினம் கொண்டாட மனிதர்கள் இருப்போமா என்பதே கேள்விக்குறி!

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. தினம் ஒரு தினம்
    என எடுத்துரைத்து
    மனித இனத்தை
    இடித்துரைத்த கவிதை!
    ..........

    தமிழ் மணம்.7

    பதிலளிநீக்கு
  8. ஆயிரம் தினங்கள் இருந்தாலும் நம் அடி மனதில் தோன்றினால் மட்டுமே ஆறுதலாவது கிடைக்கும் அன்னை பூமிக்கு! பதிவுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  9. உண்மை தான் கிரேஸ்.. சிறப்பான கவிதை..

    பதிலளிநீக்கு
  10. சீரிய சிந்தனை..
    உண்மையை வெளிப்படுத்தும் கவிதை!..

    பதிலளிநீக்கு
  11. “குழந்தைகள் தினம்
    கொண்டாடுகிறீர்கள் சரி,
    குழந்தைகளை எப்போது
    கொண்டாடப் போகிறீர்கள்?” என்னும் கவிக்கோவின் கவிதைக்கு நெருங்கி வர்ரீங்க... வாழ்த்துகள் சகோதரீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டங்கள் வழியாகவே நிறையக் கற்றுக்கொள்ளலாம் போல. மிக்க நன்றி ஐயா, தகவலுக்கும் வாழ்த்திற்கும்.

      நீக்கு
  12. கடைசி வரிகள் அருமை! சிறப்பான விழிப்புணர்வு கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வருண் உங்களை பாராட்டி விட்டார். பாரத் ரத்னா கிடைத்தது போல.

    நல்லாயிருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  14. மனிதாபிமானத்துடன் மனிதன் வாழ்ந்தால் இத்தனை தினங்களும் இதனுள் அடக்கப் படுமே.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. உண்மைதான் சகோ, வலி தான் கவியானது இங்கே.
      வருகை தந்து கருத்துரைத்ததற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  16. கட்டாயம் பாருங்க
    https://www.youtube.com/watch?v=iG9CE55wbtY

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையானதொரு காணொளிப் பகிர்விற்கு நன்றி மது.
      இங்கு வரும் அனைவரும் கட்டாயம் பாருங்கள், காணொளியின் இறுதிவரைக்கும். நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...