கையெழுத்தை...

அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை...

33 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி
    சிந்திக்க வைக்கும் சிறப்பான கவிதை. ஒருவரின் கையெழுத்து அவரின் மனநிலையைச் சொல்லி விடுமாமே!! பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.
      அப்படித்தான் சொல்கிறார்கள், உண்மையா என்று தெரியவில்லை..
      உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. உண்மைதான்!...
    கணிணி யுகத்தில் தொலைந்து போன பலவற்றினுள் - கையெழுத்தும்!..

    பதிலளிநீக்கு
  3. கையெழுத்துமட்டுமல்ல பலரின் தலையெழுத்தும் மாறி தொலைந்துதான் போகின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் உண்மைதான்..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  4. நாமே பிரியமாகத் தயாரிக்கும் கவிதையுடன் கூடிய வாழ்த்து அட்டைக்கும், யாரோ விதம்விதமாகத் தயாரித்து விற்கும் வாழ்த்து அட்டைக்குமான வித்தியாசத்தை கணினி எழுத்திற்கும் கையெழுத்திற்கும் உள்ள வித்தியாசமாக உணர்கிறோம். அச்சிட, அனைவரும் அறியத் தருவதற்கான கணினி எழுத்து வேறு, நம் கையெழுத்தில் வரும் எழுத்தில் இருக்கும் உயிர்ப்பு அதில் இல்லை என்பதே என் கருத்தும்... நுட்பமான பார்வையுடன் வந்திருக்கும் கவிதை. எந்திர உலகிலும் நாம் உயிர்ப்புடனே இருக்கவேண்டும் என்றுணர்த்தும் வரிகள் பாராட்டுகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...என்னதான் மின்னஞ்சல், வாழ்த்துஅட்டை என்று அனுப்பினாலும் கையெழுத்தில் இருக்கும் உயிர்ப்பும் உணர்வும் தனிதான்.
      உங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு
  5. அட பேனா எடுத்து எழுதவே சோம்பலாய் இருக்கு. அப்புறம் கையெழுத்தை பற்றி கேட்பானேன்?!! கிளாஸ் ளையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதுவதால் தமிழ்க்கையெழுத்து தலைஎழுத்தாய் போய்விட்டது அருமை தோழி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தமிழ்க் கையெழுத்து தானே அப்படி..எனக்கும் இரண்டும்.. :)

      நீக்கு
  6. பத்தாம் வகுப்பு படிக்கையில் என் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்... இப்போது என் கையெழுத்தை என்னாலேயே படிக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து முத்தாக இருந்த கையெழுத்தே அப்படி ஆயுடுச்சுனா....என் கையெழுத்து அப்போவே :)

      நீக்கு
  7. இன்றும் நான் அஞ்சலட்டையை (செய்திக்காக, ஒரு அஞ்சலட்டை 50 பைசா) பயன்படுத்திவருகிறேன். விடுப்பு விண்ணப்பம்கூட தட்டச்சோ, கணினித்தட்டச்சோ இல்லை, என் கையெழுத்தில்தான். அந்தப் பழக்கம் விடக்கூடாது என்பதற்காக.

    பதிலளிநீக்கு
  8. உண்மை.. ஆனால் அதில் ஒரு நன்மை, அனைவரின் 'கை' எழுத்தும் இப்ப அழகாக இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே..இதே நேரம் நான் இப்பதிவை எழுதிக் கொடுத்திருந்தால் அவ்வளவுதான்... ஹாஹா

      நீக்கு
  9. ஒரு பதிவினை பேப்பரில் எழுதி செழுமைப் படுத்துவதற்கும், கணினியில் செழுமைப் படுத்துவதற்கும் நிறைய தர வேறுபாடுகள் இருகின்றது என நேற்று நான் உணர்ந்தேன்..
    பழைய பதிவுகளை நான் தாளில் எழுதி திரும்ப படித்து செழுமையூட்டி பின்னர் பதிவிடுவேன்.

    தற்போது முழுக்க முழுக்க கணினிதான் தரம் கொஞ்சம் குறைந்திருப்பதாக படுகிறது எனக்கு ..
    உங்கள் கவிதை அதை ஆமோதிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாளில் எழுதவே முடியவில்லை..இப்பொழுதெல்லாம்.
      உங்கள் கருத்துரைக்கு நன்றி மது.

      நீக்கு
  10. படிக்கும்போது எழுதுவதென்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. மற்றப் பிள்ளைகளுக்குக்கூட எழுதித் தருவேன். ஆனா, இப்ப ஒரு பக்கம் எழுதுவதற்குள் கை வலிக்குது!!

    பதிலளிநீக்கு
  11. உண்மை! தட்டச்சு செய்து கையெழுத்து மறந்து போகிறது! காலத்தின் கொடுமை!

    பதிலளிநீக்கு
  12. கால ஓட்டத்துக்கேற்ப ஓடும் நாம் தொலைத்தவற்றுள் தலையாயது. மறைந்துபோன கையெழுத்துக்கான அஞ்சலிக் கவிதை... ஏக்கம் பீறிடுகிறது.

    பதிலளிநீக்கு
  13. தொலைந்து போன பல ரசனைகளில் இதுவும் ஒன்று..... இந்த வாரமாவது ஒரு கடிதம் எழுதவேண்டும்.....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...