Monday, March 17, 2014

இயற்கையின் ஆற்றாமை

படம்: நன்றி இணையம்

மரங்களை வெட்டியா
சாலை விரிவு
இன்று பலரது கவலை

நெரிசல் இல்லை
சாலை அருமை

நாளை பலரது உவகை

இன்றுக்கும் நாளைக்கும்
இடையில் மறைவது
இயற்கையின் ஆற்றாமை

47 comments:

 1. Replies
  1. உண்மை..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.தனபாலன்.

   Delete
 2. இப்பவும் திருந்தலைன்னா எப்படி!?

  ReplyDelete
 3. உண்மை கிரேஸ். அருமையாக எழுதியிருக்கிறாய்..

  ReplyDelete
 4. >>நாளை பலரது உவகை (?)
  இது கேள்விக்குறியதே - போக்கு வரத்துப் பொறியியல் துறையில் 30 ஆண்டுகள் விரிவுரையாளராய்ப் பணி புரிந்து நான் கற்றது: நெரிசல் குறைக்க முதலில் நடத்து முறையைக் (traffic management) கையாள வேண்டும். சாலை விரிவு என்பது எங்கே, எப்போது என்று யோசித்துச் செய்ய வேண்டிய ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. இன்று விரைவாக குறைந்தநேரத்தில் ஒரு ஊருக்குச் செல்லமுடிகிறதே என்று மகிழ்வதைத் தான் ஐயா அப்படிச் சொன்னேன். நீங்கள் சொல்வதும் உண்மைதான்..நன்றி.

   Delete
 5. இப்படி அகலப்படுத்தப்பட்ட சாலையில் பயணிப்பது ரொம்பவே பிடித்திருந்தாலும் வெட்டப்பட்ட மரங்களை நினைக்கும்போது, அதே சாலையில் அவை தந்த நிழலோடு பயணித்த இனிய நினைவுகள் இனிமையாக இருந்தது புரிகிறது...

  இப்போது மீண்டும் நட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த செடிகள் மரங்களாக ஆவதற்கு எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வெட்டப்படும் மரங்களைப் பார்த்தவர் வருந்துகிறார்..ஆனால் அவ்வழியில் பயணிக்கும் பலருக்கு அம்மரங்கள் இருந்ததே தெரியாது...
   ஆமாம், இப்பொழுது நட்டு..என்ன ஆகுமோ தெரியவில்லை...
   உங்கள் கருத்துரைக்கு நன்றி வெங்கட்,

   Delete
 6. அருமையாகச் சொன்னீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. மரங்களை வெட்டினார்கள், போதாக்குறைக்கு சாலையை அகலப்படுத்துவதற்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளை இடித்துத் தள்ளினார்கள்... இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

  ReplyDelete
  Replies
  1. மரங்களையும் சிறு கடைகளையும் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டும் காணும் காலம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது..உங்கள் கருத்துரைக்கு நன்றி சகோ.

   Delete
 9. மரங்களைப் பலிகொண்டே சாலைகள் தோன்றுகின்றன.
  மீண்டும் நடப்படும் மரக்கன்றுகள் போதிய அளவில் பராமரிக்கப் படுவதில்லை.
  மரத்தின் மகிமையை இன்னும் நாம் நன்றாக உணரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரரே..நிறைய மரங்களை நட வேண்டும் அவற்றைப் பராமரிக்க வேண்டும்..அதற்கு முதலில் உணர வேண்டும்..
   உங்கள் கருத்துரைக்கு நன்றி!

   Delete
 10. உவகைக்கும் ,கவலைக்கும் நடுவே தெனிக்கும் ஆற்றாமை
  சொன்ன விதம் அருமை தோழி!

  ReplyDelete

 11. இயற்கையின் ஆற்றாமை நாளை நம் சந்ததிகள் சந்திக்கப்போகும் விளைவுகளுக்காய் அழுகிறது... அனைவரும் விரைந்து கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் மரங்களை நாட்டுதல்...
  மிகவும் அருமையான கவிதை...

  ReplyDelete
 12. உண்மை. சூப்பரா சொன்னீங்க கிரேஸ்

  ReplyDelete
 13. மரங்கள் அடர்ந்த சாலைகளில் பயணித்து பழகிவிட்டு, இன்று அவை இல்லாதது,அச்சாலையில் பயணிக்கும் போது ஓர் வெறுமை உணர்வை ஏற்படுத்துகின்றன.

  நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..நானும் உணர்ந்திருக்கிறேன்.
   நன்றி தோழி.

   Delete
 14. விளைநிலங்களை அழித்து வீடுகள் கட்டுகிறோம். மரங்களை அழித்து சாலைகள் அமைக்கிறோம். இனி வருங்காலத்தில் சோற்றுக்கும் காற்றுக்கும் என்ன செய்யப்போகிறோம்? ஆதங்கம்தான் மேலிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இன்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதே நோக்கமாகிவிட்டது..நீர், காற்று இல்லாமல் அதிகப்படியான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாத மக்கள்..

   Delete
 15. சுட்டெரிக்கும் சாலைகளில் செல்லும்போதுதான் மரங்களின் அருமை தெரிகிறது..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 16. "மரங்களை வெட்டியா
  சாலை விரிவு
  இன்று பலரது கவலை" என்கிறீர்
  மரநிழல் இன்றி
  நடுவழி செல்கையில்
  என்
  உச்சந் தலை வெடிக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..மரங்களை வெட்டியதால்தானே இந்நிலை.
   உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 17. உச்சி வெயில் உணர்த்திடும் மரங்களின் அழிவை. அழகாக சொன்னீர்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. உண்மை..
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

   Delete
 18. மரங்களை வெட்டாமல் மனித வாழ்க்கையில் முன்னேற்றமில்லை, ஆனால், அரசுகளை வலியுறுத்தி, ஒரு பெரும் மரத்தை வெட்டினால் அதன் தொடர்ச்சிாகப் பத்து மரங்களையாவது நடவேண்டும் என்னும் நிலையான அரசாணையைப் பெற வேண்டும். அதுதான் இதற்கு ஒரே தீர்வு. அதை நோக்கி இந்தக்கவிதையை நான் வரவேற்கிறேன். நன்றி சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. அதோடு ஒரு வீடுகட்டினால் -அவர்களுக்குப் பிடித்த ஏதாவது இரண்டு செடிகள் நட்டு - மரம் வளர்த்து வரவேண்டும், இல்லையெனில் அபராத வரி. மரம் வளர்க்க இடமில்லாமல் வீடு கட்டக் கூடாது பெருநகரமெனில் ஒன்று, நகராட்சி யெனில் இரண்டு, ஊராட்சி யெனில் 4என்றுகூட வரையறுக்கலாம். அப்போதுதான் மரங்களுடன் இதுபோலும் நல்ல கவிதைகளும் வளரும்.

   Delete
  2. உங்களின் முதல் கருத்துரைக்கு தாமதமான மறுமொழி, மன்னிக்கவும்.
   நீங்கள் சொல்வதுபோல சில வளர்ச்சிப் பணிகளுக்கு மரங்களை வெட்டுவது இன்றியமையாதது ஆகிவிட்டது. நீங்கள் சொல்லியிருக்கும் வழிமுறைகள் அரசாணைகளானால் நல்லது, ஆக வேண்டும். இல்லையென்றால் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் கூட அறை கட்டி வாடகைக்கு விட்டுவிடுவர், மரங்களுக்கு இடமில்லாமல்.. :)
   மரங்களைப் பராமரிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கவேண்டும்.
   சிறந்த தீர்வுகளை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு உளமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 19. கொடுமையோ கொடுமை...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..கருத்துரைக்கு நன்றி சகோ.

   Delete
 20. மரங்கள் மட்டுமல்ல
  கண்மாய்களை பிளந்து
  விரியும் சாலைகள் ...
  பயணத்தின் விரைவு?
  மனிதத்தின் பயணத்தின் முடிவு?

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள்..பயணத்தை விரிவுபடுத்தி முடிக்கத்தான் பார்க்கிறோம்..

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...